Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, March 31, 2020

Special Homam for Coronavirus ...


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்கொரோனா வைரஸ் நோயின் அச்சத்திலிருந்து மீண்டு வரசிறப்பு யாகங்கள் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் நோய்த் தீர்க்கும் மருத்துவ மனையாக செயல்பட்டு வரும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக மக்கள் கொரோனா வைரஸ் நோயின் அச்சத்திலிருந்து மீண்டு வரவும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து முழு ஆரோக்கியம் பெற வேண்டியும் சகலவிதமான க்ஷேமங்களை பெற வேண்டியும் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி சென்ற 19.03.2020 வெள்ளிக்கிழமை திருவோண நக்ஷத்திரம் முதல் ஸ்ரீ தன்வந்திரி மஹாயாகத்துடன் மஹா ருத்ர ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீ கருட ஹோமம், ஸ்ரீ சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் சிறந்த முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இன்று 31.03.2020 செவ்வாய்கிழமை திருவாதிரை நக்ஷத்திரத்தில் ஆரோக்ய பீட அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை முழங்க மஹா பூர்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது. இதில் உரிக்கொடி, கருடக்கிழங்கு, ஆடாதோடை, விஷ்ணுகிராந்தி, துளசி, பற்படாகம், கோரைக்கிழங்கு, வெண்கடுகு, நாயுருவி, சீந்தல்கொடி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைப் பொருட்கள் யாகத்தில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு பஞ்ச திரவிய திருமஞ்சனமும், ஸ்ரீ அஷ்ட நாக கருடருக்கு பால் மற்றும் தேன் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் கலந்துகொண்டு உலக மக்கள் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மீண்டு, விரைவில் முழு ஆரோக்கியமும் நலமும் பெற பிரார்த்தனை செய்தார். இப்பூஜையின் பொழுது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 02.04.2020 முதல் 05.04.2020 வரை நடைபெற உள்ள வருடாந்தர பூஜைகளும், ஹோமங்களும், ஆராதனைகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதாக தெரிவித்தார். இந்த யாக பூஜைகளில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.












Monday, March 23, 2020

Gandharva Raja Homam - Swayamvara Kala Parvathi Yagam - Santhana Gopala Yagam


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்ஆண் பெண் திருமணத்தடை நீக்கும் யாங்களுடன்தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற யாகம்.


இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்களின் நலன் கருதி பௌர்ணமியை முன்னிட்டு வருகிற 07.04.2020 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலாபார்வதி யாகம் மற்றும் தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால ஹோமம் நடைபெற உள்ளது.

கந்தர்வ ராஜ ஹோமம் :

திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும், சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது.

சுயம்வர கலாபார்வதி யாகம் :

திருமணத்தடைகள் உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சுயம்வரகலா பார்வதி யாகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது. இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் பலன்கள் ஏராளம். திருமணத் தடைகளும் நீங்கி திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

சந்தான கோபால யாகம் :

குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சங்கல்பம் செய்து சந்தான கோபால யாகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த யாகம் செய்வதின் மூலம் எல்லாவிதமான தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.

இந்த ஹோமங்களில் பங்கேற்ககும் நபர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்க உள்ளார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
இராணிப்பேட்டை மாவட்டம்.
தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Thursday, March 19, 2020

EKADASHI HOMAMTHUDAN AMLA POWDER THIRUMANJANAM


வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஏகாதசி     ஹோமத்துடன் நெல்லிக்காய் பொடி திருமஞ்சனம் நடைபெற்றது


இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி இன்று 19.03.2020 வெள்ளிக்கிழமை ஏகாதசி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு ஏகாதசி ஹோமத்துடன் நெல்லிக்காய் பொடி திருமஞ்சனம் நடைபெற்றது. மேலும் வருகின்ற 31.03.2020 திருவாதிரை நட்சத்திரம் வரை நடைபெறும் தொடர் ஹோமத்தின் முதல் நாள் ஹோம பூஜையும்  நடைபெற்றது.

இதில் பால், தயிர், நெல்லிக்காய் பொடி, மஞ்சள், சந்தனம், மற்றும் பன்னீர் போன்ற திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனமும், ஆராதனைகள் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.








Wednesday, March 18, 2020

THIRUVONAM MUTHAL THIRUVATHIRAI VARAI THODAR YAGAM


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்திருவோணம் முதல் திருவாதிரை வரை தொடர் யாகம்


இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அடுத்த ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகின்ற 19.03.2020 வெள்ளிக்கிழமை பெருமாளுக்கு உகந்த திருவோணம் நட்சத்திரம் முதல் 31.03.2020 ஈஸ்வரனுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம் வரை தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை உலக மக்கள் ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம் பெற ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் மற்றும் இதர பரிவார மூர்த்திகளை வேண்டி தொடர் யாகமும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் சிறப்பு:

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தனது பெற்றோரின் வாக்கினை ஏற்று நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்தை குறிக்கோளாக கொண்டு உலக மக்கள் நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை அமைத்து 78 பரிவார மூர்த்திகளுடன் மூலவர் தன்வந்திரி பகவானை பிரதிஷ்டை செய்து உள்ளார்.

இங்கு உள்ள மூலவர் மற்றும் உற்சவர் தன்வந்திரி இந்தியாவின் பல இடங்களில் 665 நாட்கள் சுமார் இரண்டு லட்சம் கிலோமீட்டர் கரிக்கோல பயணம் செய்து 500க்கும் மேற்பட்ட புண்ணிய க்ஷேத்திரம் சென்று 2000க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள பல்வேறு ஆலயங்கள், மடங்கள் சென்று பல மடாதிபதிகளின் வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு பல்வேறு புனித தீர்த்தங்களில் நீராடி 67 திவ்ய தேசப்பெருமாளின் அபிமானத்தை பெற்று தேசத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்கள் மூலம்  147 தன்வந்திரி ஹோமம் செய்து சுமார் 46 லட்சம் பக்தர்கள் கைப்பட எழுதிய 54 கோடி தன்வந்திரி லிகிதஜப மஹா மந்திரங்களை பெற்று அவற்றை   கர்ப்பகிரஹத்தின் கீழ் மந்திரமே யந்திரமாக வைத்து மூலவர் தன்வந்திரி பகவானை பிரதிஷ்டை செய்து தினமும் பல்வேறு விதமான சாந்தி பரிகார ஹோமங்கள் மற்றும் பூஜைகள் தொடர்ந்து  செய்து வருகிறார்.


இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெறும் தொடர் ஹோமத்திலும் ஆராதனைகளிலும் பங்கேற்பதன் மூலம் உடலின் எதிர்ப்புத் திறன் உயர்ந்து ஆயுள் ஆரோக்கியம் மேம்படும், தீராத நோய்களை தீரும், கர்மவினை விலகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும், சகல ஐஸ்வர்யங்களும் பெறலாம் மற்றும் பல  நன்மைகளை பெறலாம் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203



Tuesday, March 17, 2020

NAVAVARANA POOJA - DASA MAHA VIDHYA HOMAM-SWARNA AKARSHANA BHAIRAVAR SAHITHA ASHTA BHAIRAVAR YAGAM


   வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
நவாவரண பூஜை, தச மஹாவித்யா ஹோமத்துடன்
சொர்ணாகர்ஷண பைரவர் சகித அஷ்ட பைரவர் யாகம் நடைபெற்றது.


இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி  16.03.2020 திங்கள்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 08.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நவாவரண பூஜை, தச மஹாவித்யா ஹோமத்துடன் சொர்ணாகர்ஷண பைரவர் சகித அஷ்ட பைரவர் யாகம் நடைபெற்றது.

இதில் நெய், தேன், மூலிகைகள், புஷ்பங்கள், பழங்கள், வஸ்திரங்கள், நிவேதனப் பொருட்கள் சமர்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து சொர்ணாகர்ஷண பைரவர், அஷ்ட பைரவர் சகித மஹா கால பைரவருக்கு  , பால், தயிர், மஞ்சள், சந்தனம் மற்றும் பன்னீர் போன்ற பஞ்ச திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர். மேலும் பங்கேற்றவர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்களை வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.










Friday, March 13, 2020

NAVAVARANA POOJA - DASA MAHA VIDHYA HOMAM - SWARNA AKARSHANA BHAIRAVAR SAHITHA ASHTA BHAIRAVAR YAGAM ...


   வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
நவாவரண பூஜை, தச மஹாவித்யா ஹோமத்துடன்
சொர்ணாகர்ஷண பைரவர் சகித அஷ்ட பைரவர் யாகம்.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி வருகின்ற 16.03.2020 திங்கள்கிழமை தேய்பிறை அஷ்டமியன்று காலை 08.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நவாவரண பூஜை, தச மஹாவித்யா ஹோமத்துடன் சொர்ணாகர்ஷண பைரவர் சகித அஷ்ட பைரவர் யாகம் நடைபெற உள்ளது.

நவாவரண பூஜை:

மாமேருவிற்கு செய்யப்படும் பூஜையே நவாவரண பூஜையாகும். நவ என்றால் ஒன்பது.மாமேருவிற்கு ஒன்பது ஆவரணங்கள் உள்ளன. இந்த ஒன்பது ஆவரணங்களில் குடியிருக்கும் தெய்வங்களை போற்றி வழிபடும் விதத்தில்  இந்த நவாவரண பூஜை நடைபெறுகிறது, இதில் பூஜை, அர்ச்சனை, தர்ப்பணம் நடைபெற்று ஒவ்வொரு ஆவரணத்திற்கும் உரிய பூஜை முடிந்ததும் ஒரு தீபாராதனை நடைபெறும். இந்த ஒன்பது தீபாராதனைகளுக்குப் பிறகு சுவாஸினி பூஜை, கன்யா பூஜை போன்ற பூஜைகள் நடைபெறும். இந்த நவாவரண பூஜையில் கலந்துகொள்வதன் மூலம் குழந்தை பாக்கியம் பெறலாம், சகல தோஷ நிவர்த்தி கிடைக்கும், கல்வி மேன்மை பெறலாம், இனிய இல்லறம், அஷ்ட ஐஸ்வர்ய பிராப்தி, உத்தியோக, வியாபார நன்மைகள், நோய்கள் அகலும், போன்ற பல்வேறு நன்மைகள் பெறலாம்.

தச மஹாவித்யா ஹோமம்:

இவ்வுலகில் குடிகொண்டிருக்கும், உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் நிறைந்திருக்கும் அன்னை சக்தியின் பத்து வடிவங்கள் தச மஹாவித்யா தேவியர்கள் ஆவார். இவர்கள் காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேசுவரி, திரிபுர பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, ராஜமாதங்கி, கமலாத்மிகா என்று அழைக்கப்படுகிறது. தச மஹா வித்யா தேவியர்கள் ஞானத்தின் வடிவமாகவே திகழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒருசேர போற்றும் விதமாக நடத்தப்படும் ஹோமமே தச மஹா வித்யா ஹோமம் ஆகும். இதில் பங்கேற்றால் அறியாமை, மாயை ஆகியவற்றை நீங்கும், மன அழுக்குகளை நீக்கும், பாதுகாப்பு அளிக்கும், அகம்பாவத்தை வென்று, ஆன்மீக ஞானம் பெறலாம், ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தி, நமது திறனை முழுமையாகப் பயன்படுத்த உதவும், முயற்சிகளில் வெற்றி பெறலாம், கலைத் துறையில் முன்னேற வழிவகை செய்யும், எதிரிகள் தொல்லை அகலும், செல்வத்தை பெறலாம், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும், மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் போன்ற பல்வேறு நன்மைகள் பெறலாம்.

சொர்ண ஆகர்ஷண பைரவர் சகித அஷ்ட பைரவர் யாகம் :

சொர்ணாகர்ஷண பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் அனைத்து செல்வத்திற்கும் அதிபதியாவார். இவர் இடது கையில் கபாலத்திற்கு பதிலாக அக்ஷய பாத்திரத்துடன் காட்சி அளிப்பார். அஷ்ட லக்ஷ்மிகளும் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால், இவர்களின் சக்தி குறையும் என்று கூறுவர். இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடுவதாக புராணங்கள் கூறுகின்றன.

மேலும் எண் திசைகளை காப்பாற்றும் பைரவர்களை அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீக்ஷன பைரவர், சம்ஹார பைரவர் ஆவார்.

பைரவரை வேண்டி நடைபெறும் யாக பூஜைகளில் பங்கேற்றால் வர வேண்டிய பணம் வந்து சேரும், எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்து விட வழி கிடைக்கும், வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் நீங்கும், வலியும், வேதனையும் பெருமளவு குறையும், சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும், வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும், தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரிக்கும், அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும், பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீரும், கர்மவினைகள் தீரும், வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி பெறலாம், வெளி நாடு செல்ல வாய்ப்பு ஏற்படும், செய்வினை மாந்திரீகம், சத்ரு உபாதை போன்றவைகளால் ஏற்படும் தொல்லைகள் அகலும் போன்ற ஏராளமான நன்மைகள் பெறலாம்.

இத்தகைய சிறப்புகள் வாயந்த ஹோம பூஜைகளில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று, ஆனந்தம், ஆரோக்யம், ஐஸ்வர்யத்துடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


SATHRU SAMHARA HOMAM - NOY NIVARANA HOMAM - ASHTA BHAIRAVAR YAGAM........


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்சத்ரு சம்ஹார ஹோமம்நோய் நிவாரண ஹோமம்அஷ்ட பைரவர் யாகம்.

வருகிற 14.03.2020 முதல் 16.03.2020 வரை.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 14.03.2020 சனிக்கிழமை சஷ்டியை முன்னிட்டு காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை சத்ரு சம்ஹார சுப்ரமண்ய ஹோமத்துடன் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி, சந்தனம், பஞ்சாமிருதம், திரவியப்பொடி, கரும்பு சாறு, பன்னீர் போன்ற திரவியங்களால் நவ கலச அபிஷேகமும், திரிசதி அர்ச்சனையும், விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

சஷ்டியின் மஹிமை :

முருக பெருமானுக்குரிய முக்கிய விரதமாகும் சஷ்டி விரதம். “சஷ்டியில் விரதம் இருந்தால், அகப்பையில் குழந்தை வரும்” என்ற ஒரு பழமொழி கூறுவதுண்டு. மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக சஷ்டி விரதம் அமைகிறது. மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை சஷ்டி விரதம் உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.

சத்ரு சம்ஹார ஹோமம் :

சத்ரு சம்ஹார ஹோமம் என்பது முருக பெருமானை குறித்து செய்யப்படும் ஹோம வழிபாடு ஆகும். தூய அன்பின் அடையாளமாக திகழும் இவர், தீய சக்திகளிடமிருந்து நம்மைக் காத்து, பல நன்மைகளை அருளக் கூடியவர். இந்த ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம் தெய்வ சாபங்கள், நவகிரக்க தோஷங்கள், பித்ரு சாபங்கள் நீங்கும். கர்ம வினைகளைத் தீர்த்துக் கொள்ள வழி பிறக்கும். கண் திருஷ்டி, பயம், மன சோர்வு, நோய்கள், கடன் தொல்லைகள் போன்றவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்ப உறவுகள் மேம்படும்.
மேலும் வருகிற வருகிற 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மருத்துவ கடவுளும், ஆரோக்ய வாழ்வை கொடுப்பவருமான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளையும், ஸ்ரீ ஆதித்ய பகவானையும் வேண்டி உலக மக்கள் நலன் கருதி நோய் நிவாரண ஹோமமும், காலசக்கிர பூஜையும், ஸ்ரீ விநாயகர் தன்வந்திரிக்கு சிறப்பு ஆராதனைகளும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து 16.03.2020 திங்கள்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை அஷ்ட பைரவர் யாகத்துடன் அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த யாக பூஜைகளில் பக்தர்கள் அனைவரும்  பங்கேற்று பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203