வருகிற
15.07.2018
ஞாயிற்றுக்கிழமை
வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
நன்மை
தரும் நக்ஷத்திர காயத்ரி ஹோமங்கள்
உலகில்
பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பிரச்சனைகளையும், கஷ்டங்களையும்
சந்தித்து வருகிறோம். அனைவரும் நிம்மதியாக வாழ்கின்றோம் என்றால் இல்லை எனலாம். ஒரு
சில குடும்பத்தில் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறவில்லை. சிலருக்கு குழந்தை
பாக்யம் இல்லை, பலருக்கு தொழில் அமையவில்லை,
கணவன், மனைவி
பிரிவினை, பிள்ளைகளும் பெற்றோர்களும் பேசுவது கூட கடினமாக உள்ளது, சிலருக்கு
கடன், காமம், குரோதம் போன்ற பிரச்சனைகள், தேவையற்ற பழக்க
வழக்கங்கள், இதுபோன்ற செயல்களை நாம் கூறிகொண்டே போகலாம். இவற்றுக்கு
எல்லை என்பதே இல்லை என்பதே உண்மை.
மேற்கண்ட
காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மேலும் பாதிப்புகள் வராமல்
இருக்கவும், ஜன்ம நக்ஷத்திரத்தின்
நற்பலன்களை பெறவும் பிராயச்சித்த ஹோமமாக வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி“கயிலை
ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை
காலை 10.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை 27 நக்ஷத்திர காயத்ரி ஹோமங்கள் நடைபெறுகிறது.
உலகில் பிறந்த ஒவ்வொருவரும்
27 நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் என்பதால், அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள
27 நக்ஷத்திரகாரர்களுக்கும் தனித்தனி ஹோமகுண்டங்கள் அமைத்து வேதவிற்பனர்கள் 27 நக்ஷத்திர காயத்ரி மந்திரங்களை சொல்ல 27 நபர்கள் மட்டும் அமர்ந்து அவர்கள் கை களால் பக்தர்களுக்காக செய்யும் யாகமாகும்.
மேற்கண்ட 27 பேரும் 27 நக்ஷத்திர காரர்களின்
கர்த்தாவாக பாவிக்கப்படுகின்றனர். மேற்கண்ட யாகம் நக்ஷத்திர தோஷங்கள் அகலவும் மற்றும்
பல்வேறு காரணங்களுக்கு தீர்வு வேண்டியும் 27 நக்ஷத்திர காயத்ரி ஹோமம்
நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் பங்கேற்று நக்ஷத்திர
தோஷங்கள் நீங்கி வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றத்தை அடைய
அன்புடன் அழைக்கின்றோம்.
மேற்கண்ட
யாகத்தில் பங்கேற்பது மற்றும் 27 நக்ஷத்திர காயத்ரீ மந்திரங்களை
அவரவர்கள் பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி, பாரயாணம் செய்துவந்தால் வேண்டிய
பலன்களை வேண்டியவாறு பெறலாம். மேற்கண்ட 27 நக்ஷத்திர காயத்ரீ ஹோமத்தில்
பங்கேற்க விரும்பவர்கள் நக்ஷத்திர மூலிகைகள்,அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, மஞ்சள், குங்குமம், அன்னதான
மளிகைப்பொருகள், நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள்
கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள்
பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
Email: danvantripeedam@gmail.com
No comments:
Post a Comment