Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, June 30, 2019

Sathru Samhara Karya Siddhi Homam - Maha Ganapathi Homam - Swarna Bhairavar Yagam - Kalabhairvar Guruthi Pooja


தன்வந்திரி பீடத்தில்சத்ரு சம்ஹார காரிய சித்தி ஹோமத்துடன்மஹா கணபதி ஹோமம், சொர்ண பைரபர் யாகம்,காலபைரவர் குருதி பூஜை.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திர் ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை வளத்திற்காகவும் வருகிற 01.07.2019 திங்கள்கிழமை காலை 10.30 மணி முதல் நன்பகல் 1.30 மணி வரை சத்ரு சம்ஹார காரிய சித்தி ஹோமத்துடன் மஹா கணபதி ஹோமம், சொர்ண பைரவர் ஹோமம், காலபைரவருக்கு குருதி பூஜையும் நடைபெற உள்ளது.

மஹா கணபதி ஹோமம் :

இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளான விநாயகரை வேண்டி நடைபெறும் ஹோமமே மஹா கணபதி ஹோமம் ஆகும். தடைகளை நீக்கி வெற்றியை அருளக் கூடியவர் விநாயகர். நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலும் தடைகள் இல்லாமல் நடைபெற கணபதியின் அருள் நமக்கு வேண்டும். இவரை வழிபடுவதின் மூலம் தடைகள் அகலும், நம்பிக்கை, தைரியம், வெற்றி, வாழ்வில் வளம் போன்றவற்றைப் பெறலாம், கவலைகள் அகலும் போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்படும். மேலும் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடும் தடைகள் நீங்கவும், துன்பங்கள் அகலவும், தைரியம் பெருகவும், புதிய முயற்சிகளைத் துவங்க நம்பிக்கை பிறக்கவும், நல்ல வாய்ப்புகள் தேடி வரவும், கல்வி, வேலை, தொழில் போன்றவற்றில் இலக்குகளை எட்டி வெற்றி காணவும், வாழ்க்கையில் திருப்தியும், நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்திருக்கவும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மஹா கணபதி ஹோமம் நடைபெறுகிறது.

சொர்ண பைரவர் ஹோமம் :

சிவபெருமானின் 64  பைரவர் அவதாரங்களில் ஒன்று தான் சொர்ணாகர்ஷண பைரவர். இவர் அமர்ந்த நிலையில் தன் மடியில் சொர்ணாம்பிகையை அமர்த்திக் கொண்டு ஒரு கரத்தில் அக்ஷய பாத்திரமும், ஒரு கரத்தில் சூலமும் கொண்டு வைர கிரீடமும் பட்டு வஸ்திரமும் அணிந்து தம்பதி சமேதராக காட்சி தருகின்றார். இவரை வழிபடும் விதத்தில் நடைபெறும் ஹோமமே சொர்ண பைரவர் ஹோமம் ஆகும். இந்த ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம் சகல சம்பத்தும், பொன் பொருளும் கிடைக்கும், காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும், நல்லருள் கிடைக்கும், எண்ணிய காரியங்கள் நிறைவேறும், வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பு உண்டாகும், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும், வறுமை, பகைவர்களின் தொல்லைகள் அகலும், பயம் நீங்கும், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெறலாம், தன லாபம் உண்டாகும், வியாபாரத்தில் முன்னேற்றம் அடையும், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம், வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும், வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறலாம், தொழில் விருத்தி உண்டாகும், தனச் செழிப்பைத் தரும், வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடையலாம், நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம், சகல சௌபாக்யங்களும் கிடைக்கும் போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது.

சத்ரு சம்ஹார காரியசித்தி ஹோமம் :

சத்ரு சம்ஹார ஹோமம் என்பது, நாம் பக்தியுடன் போற்றும் முருகப் பெருமான் என்னும் சுப்பிரமணியர் குறித்து செய்யப்படும் ஹோம வழிபாடு ஆகும். தெய்வ தம்பதிகளான சிவபெருமான்-பார்வதி தேவியின் மகனாக அவதரித்த சுப்பிரமணியரை, பெரும் சக்தி வாய்ந்த தெய்வமாக, பண்டைய ரிக் வேதம் போற்றுகிறது. தூய அன்பின் அடையாளமாகவும் திகழும் இவர், தீய சக்திகளிடமிருந்து நம்மைக் காத்து, பல நன்மைகளை அருளக் கூடியவர்.

சமீப காலமாக தேவையற்ற மோகத்தினாலும், ஆசையினாலும், அறநெறிகளை கடைப்பிடிக்காமல் தவறுகள் செய்து, தேவையற்ற சங்கடங்களையும், சத்ருக்களையும் உண்டாக்கி கொள்கின்றனர். இதனால் தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பமும், தேவையற்ற பழக்க வழக்கங்களால் விபத்தும், துர்மரணமும் உண்டாக்கி கொள்கின்றனர். இவற்றிலிருந்தும் ,சகல துன்பங்களிலிருந்தும்  நம்மை காப்பவர் முருக பெருமாணும் பைரவரும் மட்டுமே. நாம் துன்பங்களிலிருந்து மேற்கண்ட கடவுள்களிடம் சரணடைய வேண்டும்.

சத்ரு சம்ஹார ஹோமத்தின் சிறப்பு :

தன்வந்திரி பீடத்தில் ஆறு கார்த்திகை பெண்கள் கொண்டு அருள்பாவிக்கும் முருகப்பெருமான் இத்தலத்தில் கார்த்திகை குமரனாக பிரதிஷ்டையாகி உள்ளார். இங்கு சத்ரு சம்ஹார யாகம் அவ்வப்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த யாகத்தில் பங்கு பெற்று வழிபடுவோருக்கு பகைவர்களை வெல்லுதல், நோய் நொடியிலிருந்து தீர்வு, உயர் பதவி, புகழ், தன வசியம், குடும்பத்தில் மகிழ்ச்சி, வியாபார வர்த்தக முன்னேற்றம், கடன் பிரச்சினை,  வழக்குகளில் வெற்றி, நவக்கிரக தோஷம், பித்ரு சாபம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும், தீய சக்திகளுக்கு எதிராக பாதுகாப்பு கிடைக்கும், தீராத நோய்கள், கடன்கள் தீரும். பயம், சோர்வு விலகும், கண் திருஷ்டி, சூனியம் போன்றவற்றுக்கு எதிராக பாதுகாப்பு கிடைக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், குடும்ப உறவுகள் வலுப்படும், அரசியல், ராணுவம், காவல் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு நலம் தரும், தொழிலில் ஏற்படும் போட்டிகளில் வெற்றி காண உதவும், என அனைத்து நலன்களும் பெறலாம். எதிர்ப்புகளை வென்று பாதுகாப்புடன் வாழலாம்.

சத்ரு சம்ஹார பைரவர் ஹோமம் :

சத்ரு சம்ஹார பைரவர் ஹோமம், எதிரிகளை வெற்றி கொள்ள உதவும் வழிபாடாகும். இதன் மூலம் வெளிப்படும் பெரும் ஆற்றல் நம்மை பாதுக்காக்கும் சக்தி வாய்ந்த கவசமாக விளங்குகின்றது. சத்ரு சம்ஹார காலபைரவர் ஹோமத்தின் மூலம், சம்ஹார பைரவரின் அருளை நாம் பெறலாம். இதன் மூலம் தெய்வ சாபங்கள், நவகிரக்க தோஷங்கள், பித்ரு சாபங்கள் நீங்கும். கர்ம வினைகளைத் தீர்த்துக் கொள்ள வழி பிறக்கும். கண் திருஷ்டி, பயம், மன சோர்வு, நோய்கள், கடன் தொல்லைகள் போன்றவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்ப உறவுகள் மேம்படும்.

குருதி பூஜை :

எதிரிகள் தொல்லை அகலவும், முயற்ச்சிகளில் வெற்றி பெறவும், யமபயம் அகலவும், ரத்த சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகவும், ஒளிமறை நோய்கள் விடுபடவும், சகல ஐஸ்வர்யங்களும் பெற்று நல்வாழ்வு கிடைக்கவும் கிரக தோஷங்கள் நீங்கவும், செல்வ சேர்க்கை உண்டாகவும், வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கவும், விபத்துகள், அகால மரணம் போன்ற துர்வினைகள் நீங்கவும், கொடிய நோய்கள் அகலவும், துஷ்ட சக்திகள் மற்றும் செய்வினை பாதிப்புகள் ஒழியவும் குருதி பூஜை நடைபெறுகிறது.

மேலும் பக்தர்கள் அனைவரும் இப்பூஜைகளில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Pradosha Pooja

 தன்வந்திரி பீடத்தில்பிரதோஷ பூஜை நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று 30.06.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதேஸ்வரருக்கும் சிறப்பு பிரதோஷ பூஜைகள் நடைபெற்றது.

மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம், தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

ஸ்ரீ மரகதேஸ்வரருக்கும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடைபெற்று வில்வம், அரளி, தாமரை,மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.







Saturday, June 29, 2019

Maha Bhairavar Yagam - Nikumbala Yagam - Ekadasi Homam - Amla Powder Abhishekam

Maha Bhairavar YagamNikumbala YagamEkadasi HomamAmla Powder AbhishekamatSri Danvantri Arogya Peedam, Walajapet.

Thanks toDINAMANI, MAALAI MALAR, SAKSHI,ANDHRA JYOTHI",Daily News Papers.





Friday, June 28, 2019

Lakshmi Varahar Homam


Lakshmi Varahar Homam
At Sri Danvantri Arogya Peedam, Walajapet.
With the blessings of our beloved Guruji “Yagnasri Kayilai Gnanaguru” Dr. Sri Muralidhara Swamigal, we are conducting Sri Lakshmi Varahar Homam and Sri Lakshmi Varahar Thirumanjanam, Special Arardhana on Sunday 30.06.2019 from 7.00 AM to 10.00 AM at our Sri Danvantri Arogya Peedam, Walajapet.

Lord Varahar is the third incarnation of Lord Maha Vishnu on Earth which is in the form of a boar.  When the demon Hiranyaksha stole the Earth and hid her in the primordial waters, Vishnu appeared as Varaha to rescue her. Varaha slew the demon and retrieved the Earth from the ocean, lifting it on his tusks, and restored Bhudevi to her place in the universe. Lord Varaha has four arms, two of which hold the Sudarshana chakra and Shankha, while the other two hold a Gada (mace), and a Lotus. Varaha emerges as a tiny beast from the nostrils of Brahma, but soon starts to grow.

Purpose and Benefits:

Sri Lakshmi Varahar homam helps in removing all ill effects of not constructing a house according to the tenets of vasthu sastra.  You will attain the blessings of Lord Varaha who will bless your living space and things around you with divinity, so that luck carries you places. Lakshmi Varaha homam is also conducted for the protection of the land. Lord Varaha, blesses the space and the native with sheer positivity and luck all around.

Houses, which are not built in accordance with Vasthu sasthra will invite various problems like diseases, marital disharmony, problems in the family, loss in business etc. These problems can be overcome by performing this Lakshmi Varahar Homam. This Homam is being done to remove Vasthu Dosha (ill effects of improper construction of a house, calculation mistakes or not in accordance with the rules of the Vaastu Sastra).

We are inviting you all for participating in the above Homam, Thirumanjanam and Aradhana and get the blessings of Sri Lakshmi Varahar to live a happy and prosperous life.

For More Details, Contact :
Sri Danvantri Arogya Peedam,
Kilpudupet, Walajapet-632513,
Vellore District, Tamil Nadu,
Ph: 04172 230033 / 230274
Mob: 9443330203


Lakshmi Varaha Homam


தன்வந்திரி பீடத்தில்லக்ஷ்மி வராஹர் ஹோமம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி வருகிற 30.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் ஹோமமும், பீடதில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி வராஹருக்கு சிறப்பு திருமஞ்சனமும், ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

இரணியாக்ஷனிடம் இருந்து பூமாதேவியை காக்க பெறுமாள் எடுத்த அவதாரமே வராஹர் அவதாரம் ஆகும். பூமாதேவியைக் காப்பதற்கும், உலகில் தீயவை அழிப்பதற்கும் நாராயணன் நான்முகனின் நாசியில் இருந்து வெண்பன்றி வடிவாக அவதரித்தார். தேவாதிதேவர்களின் விண்ணப்பத்தை ஏற்று, பூமாதேவியின் வேண்டுதலுக்காகத் திருவுளம்கொண்டு அரக்கனான இரண்யாட்சனை வதம்செய்து, வராஹமூர்த்தி பூமியில் நிலைகொண்டார்.

ஸ்ரீ லக்ஷ்மி வராஹ பெருமாளை வேன்டி நடைபெறும் இப்பூஜைகளிலும் ஹோமத்திலும் பங்கேற்பதின் மூலம் ராகு தோஷங்கள் நீங்கும், பூமி சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நல்ல பலன்களை அடைவர், சனிதசை, சனி தோஷ சங்கடங்களிலிருந்து விடுபட்டு சுகம் காணலாம், திருமணத்தடைகள் நீங்கும், பயம், வியாதி, துர்பிஷங்கள் தொலைந்து, அறிவும் செல்வமும் உண்டாகும், வாழ்வில் என்றும் சுகம் காணலாம், காரியங்களில் வெற்றி கிடைக்கும், சத்ரு உபாதைகள் அகலும் போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது.

மேலும் இவ்வைபவங்களில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று ஸ்ரீ லக்ஷ்மி வராஹரை வழிபட்டு இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203