Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, July 30, 2018

Panchamuga Anjaneyar Homam....


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்

பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமத்துடன்பஞ்ச திரவிய திருமஞ்சனம்

புரட்டாசி அமாவாசையில் நடைபெறுகிறது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு 08.10.2018 திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு பஞ்சமுக ஹனுமன் ஹோமமும் தன்வந்திரி பீடத்தில் உள்ள உற்சவர் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு பஞ்ச திரவிய அபிஷேகமும் நடைபெற உள்ளது.

ஹனுமர் ஹோமம் பலன் :

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா. கிழக்கு முகமாக உள்ள ஹனுமானை தரிசித்து ஹனுமன் யாகத்தில் பங்கேற்பவர்களுக்கு பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.

நரஸிம்மர் ஹோமம் பலன் :

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே கரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா. தெற்கு முகமாக உள்ள நரசிம்மரை தரிசித்து நரசிம்மர் யாகத்தில் பங்கேற்பவர்களுக்கு எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்.

கருடர் ஹோமம் பலன் :

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா. மேற்கு முகமாக உள்ள கருடரை தரிசித்து கருட ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்.

வராஹர் ஹோமம் பலன் :

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.  வடக்கு முகமாக உள்ள வராஹரை தரிசித்து வராஹர் ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்.

ஹயக்ரீவர் ஹோமம் பலன் :

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா. மேல்முகமாக உள்ள ஹயக்ரீவரை தரிசித்து ஹயக்ரீவர் ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

ராமபிரானுக்கும் - ராவணனுக்கும் போர் :

ஒரு முறை ராமபிரானுக்கும் - ராவணனுக்கும் போர் நடந்தது. இதில் ராவணன் நிராயுதபாணியானான். இதனால் ராமர் ராவணனை கொல்ல மனமின்றி, இன்று போய் நாளை வா என திருப்பி அனுப்பிவிட்டார். ராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்குத்தான் என்பதை ராவணன் உணரவில்லை. மீண்டும் ராமருடன் போர் செய்ய நினைத்த ராவணன், மயில் ராவணன் என்ற மற்றொரு அசுரனது துணையுடன் போருக்கு கிளம்பினான். ராமரை அழிப்பதற்காக மயில் ராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான்.

ஆஞ்சநேயருக்கு நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன் ஆசிகள் :

இந்த யாகம் நடந்தால் ராம-லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்பும்படி ராமரிடம் கூறினான். ராமர் கூறியதன் பேரில் ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன், நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன். ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.

பஞ்ச முகத்தில் விசேஷ அவதாரம் :

இந்த தெய்வங்கள் அனைவரும் போரில் அனுமன் வெற்றிபெற தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மனித குல வாழ்விற்காக மயில் ராவணனை அழித்தார். இப்படி பஞ்ச முகத்தில் விசேஷ அவதாரம் எடுத்த தால், பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக, பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார். அத்துடன் வெற்றியையும் - வளத்தையும் குறிக்கும் வகையில், ஜய மங்களா என்றும் அழைக்கப்படுகிறார்.

பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள் :

பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு நடைபெறும் ஹோமத்தில் பங்கேற்று, பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் எடுத்த காரியங்களில் வெற்றியும், லட்சுமி கடாட்சமும், ஹயக்கிரீவரின் அருளால் உண்மையான அறிவாற்றல், ஆன்மிக பலமும், வராகரின் அருளால் மனத்துணிவும், கருடனின் அருளால் அனைத்து விதமான நஞ்சின் ஆபத்து விலகும் தன்மையும், ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதியும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தோஷம் நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் :

அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை படைத்தவர் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது முகங்களான கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லா நலமும் தரும், நரசிம்மமுகம் தீமையைப் போக்கும், ஹயக்ரீவர் முகம் கல்வியும் - ஞானமும் தரும். பக்தர்கள் வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது தாடை நீண்டு இருக்கும்.

பஞ்சமுக ஆஞ்சநேயர் அமைப்பும் பலன்களும் :

நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹ முகம், அனுமன் முகம், ஹயக்கிரீவர் முகம்.. என ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் ஒருங்கிணைந்து உள்ளார். கிழக்கு முகம் ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம், பிரதிவாதி முகஸ்நம்பி என்ற சுலோக வரியினால் அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும். தெற்கு முகம் நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள், பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம். மேற்கு முகம் கருடன் முகத் தரிசனம். சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை. போக்கி அருள்தரும். வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள். முதலியனவற்றை அழித்து சாந்தியும் - நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும். மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம். இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர். அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கும், சொல்வன்மை, ஆரோக்கியம், எதிரிகள் விலகல். என அனைத்தும் உண்டாகும்.

பஞ்சமுக ஆஞ்சநேயர் யாகத்தின் பலன் :

கல்வியில் மேன்மை அடையலாம், கவலைகள் நீங்கும், திருமணத் தடை அகலும், நாகதோஷம், பில்லி, சூனியம் விலகும்,கடன் அகலும், வறுமை நீங்கும், பயம் அடியோடு ஓடும், தொழில் மேன்மை உண்டாகும். குழந்தைகள் இரவில் பயத்தினால் அலறுவது அகலும், புத்திர பாக்யம் கிட்டும், பிறந்த நாளில் மகிழ்ச்சியாக இருப்பவரிடம் வேண்டுவது எல்லாம் கிடைத்து உன்னத நிலை அடைவீர்கள். வெளித் தொடர்புகள், நட்பின் மேன்மை உண்டாகும். வேண்டுவன அனைத்தும் பெற்று வெற்றியாளராக உலாவருவீர்கள். எனவே வாருங்கள், யாகத்தில் பங்கு பெருங்கள், ஆஞ்சநேயரை தரிசித்து அருள் பெறுவோம்.
இதில் பங்கேற்க விரும்பவர்கள் வெற்றிலை மாலை, பூமாலைகள், பழ மாலைகள், தேங்காய் மாலை, வடை மாலை, துளசி மாலை, எலுமைச்சம் பழம் மாலை, ஏலக்காய் மாலை, மட்டை தேங்காய்,  நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், தேன், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் ஸ்ரீ தன்வந்திரி பீட்த்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்ரீ சஞ்சீவீ ஆஞ்சநேயர், செந்தூர் ஆஞ்சநேயர் அருள் ஒருசேர பெற்று நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment