Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, February 26, 2020

Sivanagam - Trisoolam - Saptakannya Prathishtapana


வாலாஜாபேட்டை  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்சிவநாகம், திரிசூலம் மற்றும் சப்தகன்னியர் பிரதிஷ்டை நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தனவந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ‘’யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு’’ டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 26.02.2020 புதன்கிழமை  காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை சக்தி ஹோமம், சப்தகன்னியர் ஹோமத்துடன் சிவநாகம், திரிசூலம் மற்றும் சப்தகன்னியர் பிரதிஷ்டாபன வைபவம் நடைபெற்றது.

இதில் மங்கள் இசையுடன் கோ பூஜை, கணபதி பூஜை, புண்யாஹ வாசனம், யாகசாலை பூஜை, கலசாவாஹனம், பாராயணங்கள் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற ஹோமங்களில் திரிமதுரம், மூலிகைகள், சமித்துகள், புஷ்பங்கள், பழங்கள், நிவேதன பொருட்கள், வஸ்திரங்கள் சமர்ப்பிக்கபட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கலசப்புறப்பாடும் மஹா அபிஷேகமும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது.

இதில் திமிரி, பரதராமி ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலய ஸ்தாபகர் அவர்கள் மற்றும் சுற்றுபுர நகர கிராம மக்கள் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.











Monday, February 24, 2020

Mangala Maha Chandi Yagam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்மங்கள சண்டி யாகம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 24.02.2020 திங்கள்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மங்கள சண்டி யாகமும் மஹா பூர்ணாஹுதியும் நடைபெற்றது.

இதில் மங்கள இசையுடன் கோ பூஜை, கணபதி பூஜை, கணபதி பூஜை, புண்யாஹ வாசனம், 64 யோகினி பைரவர் பலி பூஜை, யாகசாலை பூஜை, கலச ஆவாஹனம், பாராயணம், கன்யா பூஜை, பிரஹ்ம்மசாரி பூஜை, தம்பதி பூஜை, சுஹாசினி பூஜை நடைபெற்றது. இந்த யாகத்தில் நெய், தேன், மூலிகைகள், பூசணிக்காய், சமித்துகள், புஷ்பங்கள், பழங்கள், நிவேதன பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், மாங்கல்யம், கொலுசு, மிட்டி போன்ற சௌபாக்ய பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு மங்கள சண்டி யாகம் மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி போன்ற பஞ்ச திரவியாபிஷேகத்துடன் கலசாபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். மேலும் மாசி மகத்தை முன்னிட்டு வருகிற 06.03.2020 வெள்ளிக்கிழமை முதல் 08.03.2020 ஞாயிற்றுகிழமை வரை மஹா சண்டி யாகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.









Sunday, February 23, 2020

Amavasai Saraba Soolini Prathyangira Devi Yagam - Mangala Chandi Yagam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்மங்கள சண்டி யாகத்துடன்அமாவாசை சரப சூலினி ப்ரத்யங்கிரா தேவி யாகம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 23.02.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அமாவாசையை முன்னிட்டு சரப சூலினி ப்ரத்யங்கிரா தேவி யாகத்துடன் இரண்டாம் நாள் மங்கள சண்டி யாகம் நடைபெற்றது.

இதில் மங்கள இசை, கோபூஜை, கணபதி பூஜை, புண்யாஹ வாசனம், 64 யோகிணி பைரவர் பலி பூஜை, யாகசாலை பூஜை, கலச ஆவாஹனம், பாராயணம் நடைபெற்றது. இந்த யாகத்தில் நெய், தேன், மூலிகைகள், மிளகாய் வற்றல், பூசணிக்காய், சமித்துகள், புஷ்பங்கள், பழங்கள், நிவேதன பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், சௌபாக்ய பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி போன்ற பஞ்ச திரவியாபிஷேகத்துடன் கலசாபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மேலும் நாளை 24.02.2020 திங்கள்கிழமை மூன்றாம் நாள் மங்கள சண்டி யாகமும் மஹா பூர்ணாஹுதியும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.









Saturday, February 22, 2020

Mangala Chandi Yagam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி 

ஆரோக்ய பீடத்தில் 

மங்கள் சண்டி யாகம் துவங்கியது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 22.02.2020 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மங்கள சண்டி யாகம் முதல் நாள் ஹோமம் நடைபெற்றது.

இதில் மங்கள இசை, கோபூஜை, கணபதி பூஜை, புண்யாஹ வாசனம், 64 யோகிணி பைரவர் பலி பூஜை, யாகசாலை பூஜை, கலச ஆவாஹனம், பாராயணம் நடைபெற்றது. இந்த யாகத்தில் நெய், தேன், மூலிகைகள், சமித்துகள், புஷ்பங்கள், பழங்கள், நிவேதன பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், சௌபாக்ய பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி போன்ற பஞ்ச திரவியாபிஷேகத்துடன் கலசாபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மேலும் நாளை 2 ஆம் நாள் சண்டி ஹோமமும் அமாவாசையை முன்னிட்டு சரப சூலினி ப்ரத்யங்கிரா தேவி யாகமும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.







Friday, February 21, 2020

Mangala Chandi Yagam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்தொடர் மங்கள சண்டி யாகம்.


இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதியக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி நாளை 22.02.2020 சனிக்கிழமை முதல் 24.02.2020 திங்கள்கிழமை வரை மற்றும் வருகிற 06.03.2020 வெள்ளிக்கிழமை முதல் 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை வரை மங்கள சண்டி யாகம் நடைபெற உள்ளது.

மஹா சண்டி யாகம் :

ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் தன்னுள்ளே அடக்கி உலகத்தை படைத்தவளே அன்னை ஆதிபராசக்தி. அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் இவ்வுலகத்தை காப்பாற்றி, இயற்கையின் சீற்றத்தை தனித்து, மழை பெய்து, மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும், அமைதியோடும் என்றென்றும் வாழ அன்னை ஆதிபராசக்தியை குறித்து நட்த்தப்படும் யாகமே சண்டி மஹா யகமாகும்.

நவக்கிரக தோஷங்கள், நிலம், பூமி, வீடு மனை மற்றும் சொத்து தகராறு, வழக்குகள், பூர்வஜென்ம தோஷம், கன்யா தோஷம், பித்ரு தோஷம் இதனால் ஏற்படும் திருமணத்தடை, மன அமைதி குறைவு, மனசோர்வு, திருஷ்டி, செய்வினை, துஷ்ட சக்தி தோஷங்கள் மற்றும் நாக தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகள், குழந்தயின்மை, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, கடன் தொல்லை, எவ்வளவு உழைத்தும் பலன் இல்லாமை, பதவி உயர்வு, குழந்தைகள் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம் இவையனைத்திலும் ஏற்படும் தடைகளுக்கு இந்த மஹா யக்ஞத்தில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து தடைகள் நீங்கி சண்டிகா தேவியின் அருள் பெற்று சகல ஐஸ்வர்யங்களுடன், ஆரோக்யத்துடன் வாழ பிரார்த்திக்கின்றோம்.

இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் மூலிகைகள், நெய், சமித்துகள், புஷ்பங்கள், சௌபாக்ய பொருட்கள், பழங்கள், வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், மளிகை பொருட்கள், போன்றவை அளித்து குடும்பத்தினருடன் இறை கைங்கரியத்தில் ஈடுபடலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


Thursday, February 20, 2020

Maha Shivaratri 2020 ....


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்மஹாசிவராத்திரி சிறப்பு பூஜைகள்.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேடை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் மஹா சிவராத்திரியை முன்னிட்டு வருகிற 21.02.2020 வெள்ளிக்கிழமை ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சிவபஞ்சாக்ஷர யாகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் பீடத்தில் சிவலிங்க ரூபமாக பிரதிஷ்டை செய்துள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

சிவ பஞ்சாக்ஷர ஹோமத்தை செய்வதால் உங்கள் வீடுகளில் இருக்கின்ற எதிர்மறை சக்திகள் அனைத்தும் நீங்கும், உங்கள் குடும்பத்தில் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும், உங்கள் வீட்டை அண்டி இருக்கும் துஷ்ட சக்திகள் நீங்கி, தரித்திரமும் வறுமை நிலையும் உங்களை என்றும் அண்டாமல் காக்கும், தொழில், வியாபாரங்களில் நஷ்டங்கள் ஏற்படாமல் தடுத்து லாபங்களை பன்மடங்கு பெருக்கும், செல்வம் பெருகும், புதியசொத்துக்களின் சேர்க்கை உண்டாகும், வாழ்வில் எப்போதும் கடன் வாங்காத ஒரு நிலையை ஏற்படுத்தும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த யாக பூஜைகளில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். மேலும் இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் அபிஷேக திரவியங்கள், மூலிகைகள், சமித்துகள், புஷ்பங்கள், பழங்கள், பூஜை பொருட்கள், வஸ்திரங்கள் அளித்து குடும்பத்தினருடன் இறைகைங்கரியத்தில் ஈடுபடலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Saturday, February 8, 2020

Pournami - Thaipoosam Yagam...


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
திருமணத்தடை நீக்கும் ஹோமங்களுடன்
குழந்தை வரம் தரும் ஹோமமும்
ஸ்ரீ வள்ளலார் மற்றும் கார்த்திகை குமரனுக்கு
சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 08.02.2020 சனிக்கிழமை பௌர்ணமி மற்றும் தைபூசத்தை முன்னிட்டு ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலாபர்வதி யாகம், தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம், ஸ்ரீ வள்ளலார் மற்றும் கார்த்திகை குமரனுக்கு விசேஷ ஹோமத்துடன் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை அன்னதோஷங்கள் விலக ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும், வாழ்வில் நலம் பெற சித்த புருஷர்கள் ஆசிகள் வேண்டி சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
இந்த யாகங்களில் நெய், தேன், மூலிகைகள், சமித்துகள், வஸ்திரங்கள், புஷ்பங்கள், பழங்கள், நிவேதன பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும் ஆராதனைகள் நடைபெற்று, கந்தர்வ ராஜ ஹோமம் மற்றும் சுயம்வர கலாபார்வதி ஹோமத்தில் பங்கேற்ற ஆண், பெண்களுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. மேலும் சந்தான கோபால யாகம் நடைபெற்று ஸ்ரீ நவநீத கிருஷ்ணருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று பங்கேற்ற தம்பதிகளுக்கு வெண்ணை பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் தைபூசத்தை முன்னிட்டு ஸ்ரீ வள்ளலார் மற்றும் கார்த்திகை குமரனுக்கு மூல மந்திர ஹோமங்களுடன் பஞ்ச திரவிய அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி பிராசதங்களை வழங்கினார். தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.