Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, December 30, 2018

Ashtami Bhairavar Yagam - Sri Krishna Yagam ....


தன்வந்திரி பீடத்தில் 29.12.2018 சனிக்கிழமை
காலண்டர் வெளியீட்டு விழாவும் காலபைரவர் யாகமும் 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கிருஷ்ணர் யாகத்துடன்  பகவத் கீதை நூல் வழங்கும் விழாவும் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி சென்ற 29.12.2018 சனிக்கிழமை காலை மாலை இருவேளையும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்வர்ண பைரவர் யாகம், காலபைரவர் யாகம் மற்றும் காலண்டர் வெளியீட்டு விழாவும், 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கிருஷ்ணர் யாகத்துடன்  பகவத் கீதை நூல் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இதில் சென்னை சாய் டிவி நிர்வாக இயக்குநர் சாய்பிரேமி திரு. கணேசன், ஸ்ரீசங்கரா டிவி CEO திரு. சுரேஷ் குமார், குணச்சித்ர நடிகர் திரு. டெல்லி கணேஷ், தினகரன் ஆன்மிகம் ஆசிரியர் திரு. கிருஷ்ண , கனரா வங்கி மேலாளர் திருமதி. சாந்தி, திரு. பிரதீப் ஹைத்ராபாத், திரு. பிரகாஷ் சென்னை, டாக்டர். பாலமுருகன் வேலூர், தாமிரா வெப் டிவி இயக்குனர் திரு. நாகமிணியன் போன்ற ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனை தொடர்து வருட பிறப்பை முன்னிட்டு வருகிற 01.01.2019 காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்  தெரிவித்தனர்.



























Friday, December 28, 2018

Saraswathi Homam - Sudarsana Yagam - Ayushya Homam - Danvantri Homam - Kubera Lakshmi Yagam


தன்வந்திரி பீடத்தில் ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்.


வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  உலக நலன் கருதி வருகிற 01.01.2019 செவ்வாய்கிழமை, காலை 10.00 மணியளவில் கீழ்கண்ட ஐந்து ஹோமங்கள் நடைபெறவுள்ளது.

1.   கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி ஹோமம்.
2.  எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம்.
3.  ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம்.
4.  நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம்.
5.  வாழவில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம். ஆகிய ஐந்து ஹோமங்கள் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு காலை கோபூஜையும், கணபதி ஹோமமும், வேத பராயணமும், கலச பூஜையும், அஷ்ட ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்களும் சிறப்பு அர்ச்சனையும், நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பிரபல திரைப்பட நடிகை திருமதி. நளினி அவர்கள், சென்னை திரு. C.ராமசந்திரன் அவர்கள் குடும்பத்தினர்கள், சென்னை Dr. R.ரங்கராஜன் MBBS., MD., அவர்கள், புதுச்சேரி திரு. C.சீனிவாசன் அவர்கள் குடும்பத்தினர்கள் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.

யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் :

ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார் . மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

முழுத்தேர்வு, 2019 புத்தாண்டு மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு நடைபெறும் இந்த யாகங்களில் ஏராளமான மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும்  பங்கு கொண்டு பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை, நோய்கள், நீங்கி ஆயுள் ஆரோக்யத்துடன் குபேர சம்பத்து, கல்வி சம்பத்து பெற்று வாழ பிரார்திக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203

Srikrishna Yagam


30.12.2018 ஞாயிற்றுக்கிழமைதன்வந்திரி பீடத்தில்ஸ்ரீ கிருஷ்ணர் யாகத்துடன்பகவத் கீதை நூல் வழங்கும் விழாநடைபெறுகிறது.

 திரைப்பட நடிகர்கலைமாமணி
திரு. டெல்லி கணேஷ் அவர்கள் பங்கேற்பு.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ கிருஷ்ணர் யாகத்துடன் பகவத் கீதை நூல் வழங்கும் விழா நடைபெறுகிறது.

பகவத் கீதை பலன்கள் :

அறிவு மூலம் அறியாமை அகற்றும். உள் வலிமை. சமநிலையான வாழ்க்கை வாழ வழிகாட்டுதல்கள். நடவடிக்கை முக்கியத்துவம். பயம் மற்றும் துன்பத்திலிருந்து சுதந்திரம். கடந்த பிறப்புகளின் பாவங்கள் கூட அழிக்கப்படுகின்றன. வேலை வெற்றி. நல்ல செயல்களின் வெற்றி. துன்பத்தை நீக்குதல். நோய் நீக்கம். வறுமையை அகற்றுதல். கோளாறுகளால் ஏற்படும் பிரச்சினைகளை நீக்குதல். மனநல பிரச்சினைகள் மற்றும் துயரத்தை அகற்றும் போன்ற பல்வேறு கர்மவினைகளுக்கு துயர்த்துடக்கும் புனித நூல் தான் பக்வத் கீதையாகும். இப்புத்தகத்தை இலவசமாக பெற்று அனைவரும் படித்து பயன் பெற்று ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அருளுக்கு பாத்திரதாரர் ஆகும்படி பிரார்த்திக்கின்றோம்.

ஸ்ரீ கிருஷ்ண யாகம் பலன்கள் :

பகவத் கீதையை வாசிப்பதுடன் ஸ்ரீ கிருஷ்ணரின் யாகத்தில் பங்கேற்பதின் மூலம் இரட்டிப்பு பலன்களை பெறலாம். இவற்றின் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும், மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாது. தர்மசீலராக இளைஞர்கள் வருவார்கள். அரசியல் ஞானம் உண்டாகும். நிர்வாக திறன் அதிகரிக்கும். மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும். திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும், வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் நன்கு செழிப்பாக வளரும், கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். புகழ் கூடும். அமைதி நிலவும், ஆற்றல் பெருகும், வறுமை இல்லா வாழ்வு அமையும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ராஜதந்திரம் அதிகரிக்கும், அரசியல் சாணக்கியத் தன்மை அதிகரிக்கும். பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனம் கூடும். எளிமையாகவும், சுருக்கமாகவும், புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும்.

இச்சிறப்பு மிகுந்த யாகத்திலும் விழாவிலும் ஸ்வாமிகளின் ஆசிகள் பெற்ற திரைப்பட நடிகர்கலைமாமணிதிரு. டெல்லி கணேஷ் அவர்கள், சென்னை தினகரன் ஆன்மிகம் பொறுப்பாசிரியர் திரு. கிருஷ்ணா அவர்கள், திருநெல்வேலி தாமிரா டிவி நிர்வாக இயக்குநர் திரு. P.R.நாகமணியன் அவர்கள் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இரத்தினகிரி கிளை கனரா வங்கி மேலாளர் திருமதி. சாந்தி ஆறுமுகம் அவர்கள் செய்து வருகிறார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203