Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, June 30, 2018

27 Nakshatra Gayatri Homam.....


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
வருகிற 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை
நன்மை தரும் நக்ஷத்திர காயத்ரி ஹோமங்கள்

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் சந்தித்து வருகிறோம். அனைவரும் நிம்மதியாக வாழ்கின்றோம் என்றால் இல்லை எனலாம். ஒரு சில குடும்பத்தில் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறவில்லை. சிலருக்கு குழந்தை பாக்யம் இல்லை, பலருக்கு தொழில் அமையவில்லை, கணவன், மனைவி பிரிவினை, பிள்ளைகளும் பெற்றோர்களும் பேசுவது கூட கடினமாக உள்ளது, சிலருக்கு கடன், காமம், குரோதம் போன்ற பிரச்சனைகள், இதுபோன்ற செயல்களை நாம் கூறிகொண்டே போகலாம். இவற்றுக்கு எல்லை என்பதே இல்லை.

மேற்கண்ட காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மேலும் பாதிப்புகள் வராமல் இருக்க பிராயச்சித்த ஹோமமாக வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை த்விதீய திதியில் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை  உலகில் பிறந்த அனைத்து மக்களின் உடல் பிணி உள்ளத்துப் பிணி நீங்கவும், நக்ஷத்திர தோஷங்கள் அகலவும் மற்றும் பல்வேறு காரணங்களின் தீர்வுகளுக்காக 27 நக்ஷத்திர காயத்ரி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் பங்கேற்று வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றத்தை அடைய அன்புடன் அழைக்கின்றோம்.

* அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்.

* பரணி
ஓம் க்ருஷ்ண வர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்.

* கிருத்திகை
ஓம் வன்னி தேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்.

* ரோஹிணி
ஓம் ப்ராஜா விருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்.

* மிருகசீரிடம்
ஓம் சசி சேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்.

* திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்.

* புனர்பூசம்
ஓம் ப்ரஜா வ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்.

* பூசம்
ஓம் ப்ரம்ம வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்.

* ஆயில்யம்
ஓம் ஸர்ப ராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்.

* மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்.

* பூரம்
ஓம் அரியம் நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்.

* உத்திரம்
ஓம் மஹா பகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்.

* அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்.

* சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்.

* சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்.

* விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்.

* அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்.

* கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்.

* மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்.

* பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்.

* உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்.

* திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்.

* அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்.

* சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்.

* பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்.

* உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்.

* ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்!
மேற்கண்ட யாகத்தில் பங்கேற்பது மற்றும் 27 நக்ஷத்திர காயத்ரீ மந்திரங்களை அவரவர்கள் பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி, பாரயாணம் செய்துவந்தால் வேண்டிய பலன்களை வேண்டியவாறு பெறலாம்.

மேற்கண்ட 27 நக்ஷத்திர காயத்ரீ ஹோமத்தில் பங்கேற்க விரும்பவர்கள் நக்ஷத்திர மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, மஞ்சள், குங்குமம், அன்னதான மளிகைப் பொருகள், நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


Unamtha Bhairvar - Maha Bhairavar- Swarnakala Bhairavr Yagam....


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
 வருகிற 06.07.2018 வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமியில்,
உடனடி நிவாரணம் தரும் உன்மத்த பைரவர் யாகத்துடன்
பணம் தரும் பைரவர் யாகம் நடைபெற உள்ளது.

சிவபெருமானுடைய அம்சங்களான பைரவர், வீரபத்திர்ர், க்ஷேத்ரபாலகர் ஆகிய மூவரும். கொடிய அரக்கர்களை அழித்தபோது பைரவராகவும், தட்சனின் யாகத்தை அழித்தபோது வீரபத்திர்ராகவும், திருத்தலங்களைக் காக்கும் நிலையில் க்ஷேத்ரபாலகராகவும் போற்றப்படுகின்றனர்.
புராண அடிப்படையில்  இன்னும் எவ்வளவோ தகவல்கள் இருகின்றன. வன்னி இலை, சிகப்பு அரளி, முல்லை, போன்ற மலர்கள் இவருடைய பூஜைக்கு மிகவும் சிறப்பானதாகும். பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார்.

எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப்பிடிக்காமல் மனம் ஏங்கும் பக்தர்களுக்கும், சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் மஹா ஹோமமே காலபைரவர் யாகமும் வழிபாடுமாகும். வருகிற 06.07.2018 வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமியில், வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி மாலை 5.00 மணிக்கு உடனடி நிவாரணம் தரும் உன்மத்த பைரவர் யாகத்துடன் பணம் தரும் பைரவர் யாகம் அஷ்ட கால மஹாபைரவர் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள அஷ்ட பைரவருக்கும் மஹா காலபைரவருக்கும், பணம் தரும் பைரவரான சொர்ணகால பைரவருக்கும் அஷ்ட திரவிய அபிஷேகம் செய்து உளுத்தம்பருப்பு கலந்த தயிர்சாதம், அப்பம், மிளகுவடை பைரவருக்கு நிவேதனம் செய்யப்படவுள்ளது. கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு இது ஒரு நிவாரண யக்ஞனமாகும் என்கிறார் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, மஞ்சள், குங்குமம், அன்னதான மளிகைப் பொருகள், நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


Friday, June 29, 2018

Sarva Paapa Dhosha Saapa Nivarthi Parihara Homam.....


சர்வ பாப தோஷ சாப நிவர்த்தி பரிஹார சாந்தி ஹோமம்
 தன்வந்திரி மூலவருக்கு நெல்லிப் பொடி அபிஷேகம்,
 ஸ்ரீ சுதர்சன பெருமாளுக்கு நவகலச திருமஞ்சனம்
 வருகிற 09.07.2018  திங்கட்கிழமை ஏகாதசி திதியில் நடைபெற உள்ளது.

இந்த உலகில் நாம் எவருமே பாபியாக இருக்க விரும்பவில்லை. ஆனால் பாப காரியமே அதிகம் செய்கிறோம். அதனால் தோஷஙகள் ஏற்படுகிறது.  நாம் எல்லோருமே புண்ணிய பயன் பெறத்தான் விரும்புகிறோம்; ஆனால் புண்ணிய காரியங்களை கர்மாக்கள், நம்மை செய்ய விடுவதில்லை. நாம் நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம். உடம்பால் பல கெட்ட காரியம்; வாயால் புரளிப்பேச்சும் அசத்தியமும்; மனத்தினால் கெட்ட நினைவுகள்; பணத்தினால் செய்கிற பாபத்தைப் சொல்லவே வேண்டாம். பாபத்துக்கு இரண்டு சக்திகள். ஒன்று, இன்று இப்போது நம்மைத் தவறில் ஈடுபடுத்துவது. இரண்டாவது, நாளைக்கும் இதே தவற்றை நாம் செய்யுமாறு தூண்டுவது. பழக்க வழக்கம் தான் நம்மை பாவத்தில் இழுக்கிறது. அதற்காகப் பயம் வேண்டாம். நம்மைப் போல் இருந்தவர்கள்நம்மை விட மகா பாபிகளானவர்கள்கூடபக்தர்களாகவும், ஞானிகளாகவும் ஆகியிருக்கி்றார்கள். பாபிகளை ரட்சிக்காவிட்டால் ஈஸ்வரனுக்குத் தான் என்ன பெருமை? நாம் பாவியாக இருப்பதாலேதான் அவனுக்குப் பதிதபாவனன் என்ற விருது கிடைக்கிறது. அவனுக்கு அந்த பெருமையை நாம்தான் கொடுக்கிறோம்!

என்னை மட்டும் சரணடைந்துவிடு! நான் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: பயப்படாதேஎன்று தீர்மானமாக அபய வாக்குத் தருகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

இந்திரிய சுகங்களுக்காகச் செய்கிற பாபங்களிலிருந்து அவனை மீட்பதற்காகத்தான் ஒவ்வொரு பெரியவரும் தோன்றி ஒரு மதத்தைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். பாபத்தினால், இந்திரிய சுகத்தினால் கிடைக்கிற ஆனந்தம் ரொம்பவும் தற்காலிகமானதுதான். பரமாத்மாவைச் சேர்த்திருப்பதுதானப்பா நிரந்தரமான ஆனந்தம்என்று சொல்லி, சம்ஸாரத்திலிருந்து அதனை விடுவித்து பகவானிடத்தில் சேர்ப்பதுதான் ஒவ்வொரு மதத்துக்கும் லட்சியமாகும். மேலும் தோஷங்கள் மற்றும் சாபங்கள் எத்தனை வகைகள் என்பதை பார்ப்போம்.

ஐந்து வகையான தோஷங்கள்: 1.வஞ்சித தோஷம், 2.பந்த தோஷம், 3.கல்பித தோஷம், 4.வந்தூலக தோஷம், 5.ப்ரணகால தோஷம் என்பதாம்.

சுமார் இருபத்தோரு வகையான நடைமுறை தோஷங்கள் :

1. கால தோஷம், 2. கிரக தோஷம், 3. ராகு தோஷம், 4. கேது தோஷம், 5. செவ்வாய் தோஷம், 6. சனி தோஷம், 7. பித்ருதோஷம், 8. மாங்கல்ய தோஷம், 9. புத்திர தோஷம், 10. மனை தோஷம், 11. வ்ருட்ச தோஷம், 12 சர்ப்ப தோஷம், 13. பட்சி தோஷம், 14. மிருக தோஷம், 15. ரிஷி தோஷம், 16. தேவ தோஷம், 17 களத்திர தோஷம், 18. கண் திருஷ்டி, 19. பிரம்ம ஹத்தி தோஷம், 20. கிரகண தோஷம், 21. பொறாமையாலும் திருஷ்டிகளாலும் சத்ருக்களாலும் ஏற்படும் தோஷம் முதலியனவாகும்.

பதிமூன்று வகையான சாபங்கள்.

1.பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம், 11) ரிஷி சாபம், 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம்.

மேற்கண்ட தோஷங்கள் விலகவும், பாபங்கள் அகலவும், சாபங்கள் நீங்கவும் வேலூர் மாவட்டம் வாலாஜபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 09.07.2018 திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஏகாதசி திதியில் சர்வ பாப தோஷ சாப நிவர்த்தி பரிஹார சாந்தி ஹோமமும் தன்வந்திரி மூலவருக்கு நெல்லிப் பொடி அபிஷேகமும், ஸ்ரீ சுதர்சன பெருமாளுக்கு நவகலச திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, மஞ்சள், குங்குமம், அன்னதான மளிகைப் பொருகள், நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


List of Yagams and Benefits......

1.Maha Ganapathy Homam: To get the blessings of Lord Ganesh it is performed in the beginning of all Hindu ceremonies and new ventures. Lord Ganesh is the god for success and wisdom. He will give troubles for those who ignore s him. He is always remembered in every new endeavour, whether it is secular or religious.
 
2.Sudarsana Homam: It is performed to get rid of evil spirits and troubles from enemies.
 
3.Navagraha Homam: It is performed to pacify the Nine Planets and avoid the evil effects of planets. This is also done in all the new buildings and new houses.
 
4.Ayush Homam: This is performed on every birth day of a family member for healthy and long life. The first birth anniversary of every child is celebrated with Ayush Homam and lot of people are fed on that day.
 
5.Agnihotra: Done by the married people. During the Bhopal Poison gas tragedy nearly 3000 people died. But two people who performed Agnihotra escaped from the evil effects of poisonous gas. It was widely reported in the news papers.
 
6.Kushmanda homam : This homa is a Prayaschitha Homa performed to get rid of the sins done by a person. Prayaschita means atonement.
 
7.Samidhadhanam: Every Brahmin bachelor is supposed to do it every day with peepal or palasa sticks and ghee in the fire. It is a very short ceremony with positive mantras. They praise the Gods as the greatest, brightest, most intelligent, strongest, boldest etc and pray for the same qualities.
 
8.Aupasanam: Done by the married people every day in the morning and the evening. They start doing it after the birth of the first baby.
 
9.Mahamrutyunjaya homam : This is performed by repeating the Mrtyunjaya (Conquering death) mantra from the Rudram of Yajur Veda. A very short mantra repeated by Hindus very often. (Beginning Om Trayamabakam Yajaa mahe…..)
 
10.Lagu Mrutyunjaya homam: another type of the above one.
 
11.Vasthu homam: It is done during the construction of new houses or buildings
 
12. Purushasukta homam: Done with the recitation of Purushasukta from the Rik Veda.
 
13.Sri Sukta homam: Sri Suktam is a Vedic hymn in praise of Goddess.
 
14.Bhagavadgita homam :
 
15.Punyahavachanam:
 
16.Agnimukam:
 
17.Jayadhihomam:
 
18 Vichinnagni sandhanam:
 
19.Sri vidya navavarana homam:
 
20.Agnistoma :
 
21.Jyotistoma:
 
22.Mahavrata yaga:
 
23.Gasava yagam:
 
34.Ukthya yagam :
 
25.Avahanthihomam
 
26.Rudram Homam
 
27.Rudra Ekadasani
 
28.Maha Rudram
 
29.Ati Rudram
Rudra Ekadasi: When Rudram is recited 121 times (11 priests recite it 11 times) it is Rudra Ekadasi.
When Rudram is recited 1331 times (11X11X11) it is Maha
Rudram. When Rudram is recited 14641 times (11X 11X11X11) it is Ati Rudram
 
30.Atirathram: Atirathram is very popular because of its performance every year in Kerala. Foreigners showed a great interest in it and recorded everything for the benefit of future generations. It was held at Panjal village in Thrissur district. The “Athiratram ritual literally means “building of the fire place and performed overnight” and usually held to propagate universal peace and harmony. It was documented about 40 years ago by US based Indologist Frits Stall (Emeritus Professor of Philosophy and South Asian Studies at the University of California at Berkley). He is no more. He recorded everything for the benefit of the posterity in 1975.
 
31.Aswamedham: Kshatriya rulers (kings) only did this in ancient India. A horse will be sent to different countries as the representative of the king. Whoever challenges it will have to go to war with the king. If they are defeated or pay tributes to the emperor they will be left untouched.
 
32.Purushamedham : It is the sacrifice of a man. But in the later times, they did it only with the dummies made up of flour, without sacrificing a man. Every ancient culture had some sort of sacrifice like this.
 
33.Rajasuyam: Kings do it to re establish their sovereignty. During the epic period Yudhistra/Dharma did it. During Sangam age, a Choza king did it.
 
34.Vajapeyam:.
 
35.Somayagam
 
36.Puthrakameshti yagam : Done by Dasaratha to get issues.
Puthra Kameshti Yajna is described in the Ramayana. Childless couples performed it to get children.
 

21 Type of Yagam on Aani Amavasai at Walajapet, Sri Danvantri Arogya Peedam....


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்ஆனி அமாவாசையில்இன்னல்கள் தீர இருபத்தோரு ஹோமங்கள்

(வருகிற 11.07.2018 புதன் மற்றும் 12.07.2018 வியாழன் நடைபெறுகிறது)


உலகில் சகல ஜீவராசிகளையும் படைத்தும், காத்தும், அழித்தும் உலக இயக்கத்தை நிகழ்த்தி வருகிறார் இறைவன். தன்பாலும் தான் படைத்த உயிர்கள் பாலும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் இறைவனிடம் மது சுயநலன்களுக்காகச் செய்யும் பிரார்த்தனைகளைத் தவிர வேறு எதையும் சிறப்பாக இறைவனுக்காக நாம் செய்வதில்லை. இத்தகைய குறைகளை தீர்ப்பதற்காகவே செய்யப்படுது ஹோமங்கள் என்கிற யாகங்கள். முன்பு உலக நன்மைக்காகவும் இயற்கையைக் குளிர்வித்து இறைவனைக் காண யாகங்கள் செய்யப்பட்டு வந்தன. ஆயினும் இன்று தனிப்பட்டவர்களின் தேவைக்காகவும், நலன்களுக்காகவும் ஹோமங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

யாகங்களின்போது, பல்வேறு சிறப்புகளுடைய இயற்கைப் பொருட்களான திரவியங்களை கொண்டு யாகத்தில் சேர்த்து வளர்க்கப்படும் தீயில் இருந்து கிளம்பும் புகையானது, காற்றில் கலந்து அந்தச் சூழல் முழுவதுமாகப் பரவி இயற்கையில் ஒரு நல்ல மாற்றத்தைச் செய்கிறது என்பதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல. ஹோமங்களின்போது உச்சரிக்கப்படும் பல்வேறுபட்ட மந்திரங்களின் ஒலியலைகள், அந்த ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது என்ற நோக்கத்தை நிறைவேற்றிவைக்க உதவுகிறது. இதற்காகத்தான் பல்வேறு நோக்கங்களுக்காகச் செய்யப்படும் ஹோமங்களும் பல்வேறு தெய்வங்களின் மீதான, விதம் விதமான மந்தர உச்சாடனங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றன

இத்தகைய சிறப்பு வாய்ந்த வேள்வியில் பக்தர்களின் பல்வேறு நோக்கங்களையும், தேவைகளையும், பிரார்த்தனைகளையும் நிறைவேற்றித்தரும் வகையில் அந்தந்த தெய்வங்களுக்குரிய யந்திரங்களுக்கும் தெய்வங்களுக்கும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ஆனி அமாவாசையை முன்னிட்டு, வருகிற 11.07.2018 புதன்கிழமை காலை 09.30 மணி முதல் காலை, மாலை இருவேளயும் மற்றும் 12.07.2018 வியாழக்கிழமை நண்பகல் 1.00 மணி வரை இன்னல்கள் தீர்க்கும் விதமாக 21 ஹோமங்கள் நடைபெற உள்ளன. இந்த யாகங்களின் மூலம் பக்தர்கள் பலன் அடைவார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.   

1. ஸ்ரீ தரணியந்திரத்துடன் ஸ்ரீ தரணி ஹோமம் :
ஸ்ரீ தரணி யந்திரம் மற்றும் ஹோமத்தின் பலன், பூமி விருத்தி, வீடு, மனை விருத்தி, நிலம் விற்பது போன்ற செயல்களுக்கு இன்றியமையாதது. ஸ்ரீ தரணிஹோமம் செய்து, பின் தரணி யந்திரத்தை பெற்று முருகப் பெருமான் படத்துடன் வைத்துப் பூஜைசெய்து வந்தால் பூமியால் ஏற்படும் தடைகள் விலகும்.

2. ஸ்ரீ நீலா சரஸ்வதி யந்திரத்துடன் ஸ்ரீ நீலா சரஸ்வதி ஹோமம் :
இந்த ஹோமம், எதிரிகளை வெற்றிகொள்வதற்கும், நற்காரியங்களில் ஏற்படும் தடைகளை நீக்கவும், அரசு உத்தியோகம் பெறவும் உதவக் கூடியது. நீலா சரஸ்வதி ஹோமம் செய்து யந்திரத்தை பெற்று சரஸ்வதி படத்துடன் வைத்துப் பூஜை செய்து வந்தால் கல்வியில் மேன்மை பெறலாம்.

3. ஸ்ரீ ஹரித்வி கணேசா மஹா யந்திரத்துடன் ஸ்ரீ கணபதி ஹோமம் :
இந்த ஹோமத்தில் பங்கேற்று யந்திரம் பெற்று தொடர் பூஜை செய்பவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டுவதுடன் சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

4. ஸ்ரீ கருட யந்திரத்துடன் ஸ்ரீ கருட பஞ்சக்ஷ ஹோமம் :
விஷ ஜந்துக்களால் ஏற்படும் ஆபத்துக்கள் விலகும், விபத்து ஏற்படாமல் இருக்க வழிவகை செய்யும், விபத்து ஏற்பட்டவர்கள் விரைவில் குணமடைவார், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், ஞாபக மறதி, குழம்பிய மனநிலை, சர்ப்ப சம்பந்தப்பட்ட பீடைகள் இராகு தோஷங்கள் நீங்குவதற்கு இந்த ஹோமம் உறுதுணை புரியும்.

5. ஸ்ரீ தக்ஷண காளி மஹா யந்திரத்துடன் ஸ்ரீ தக்ஷண காளி ஹோமம் :
எதிரிகளை வெல்லவும், பில்லி, சூனியங்கள், வினைகள் தொடராமலிருக்கவும், வஞ்சகமும், சூது மதியினரை தண்டித்து தன்னை வணங்குபவருக்கு தக்க அபயமளித்து காத்து ரக்ஷிக்கச் செய்யும் உபாசகனுக்கு தரிசனம் தந்து காக்கும் தெய்வம் தக்ஷிண காளியைத் திருப்திப்படுத்தும் மாபெரும் ஹோமம்.

6. ஸ்ரீமத் மஹா ஆஞ்சனேய யந்திரத்துடன் ஸ்ரீ ஞ்சனேய ஹோமம் :
சத்ரு ஜெயம், தீர்க்காயுசு, ரோக நிவாரணம், எதையும் தாங்கும் இதய பலம் தந்து தடைகளில் இருந்து நிவாரணம் பெறலாம், இராமபிரான் சீதையுடன் கூடிய பட்டாபிஷேக படத்துக்கு சந்தன குங்குமம், செவ்வந்திப்பூச் சார்த்தி, இன்னும் சில கிரியைகள் செய்திட ஸ்ரீ ஆஞ்சனேயர் அனுக்கிரகம் கிடைக்கும்.

7. ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி யந்திரத்துடன் ஸ்ரீ  மஹிஷாசுர மர்த்தினி ஹோமம் :
மாங்கல்ய தோஷம் விலகும், மரணபயம் அகலும், சௌபாக்யங்கள் கிடைக்கும், தடைகள் விலகும், வசியம், ஆரோக்கியம், சத்ரு ஜெயம், சாந்தி புஷ்டி, தானியவளம், சத்ரு நாசம், பூதாதிகளின் நாசம் இவற்றை அளிக்கவல்லது.

8. ஸ்ரீ மஹா சாஸ்தா யந்திரத்துடன் ஸ்ரீ மஹா சாஸ்தா ஹோமம் :
பிள்ளைப் பேறு, சத்ரு நாசம், ஜகத்திலுள்ள உயிர்களின் வசியம், எப்பொழுதும் எதற்கும் அஞ்சாத திடமும், உடல் வலிவும் பெற இந்த ஹோமம் மற்றும் யந்திரம் உதவும்.

9. பாசுபத யந்திரத்துடன் பாசுபதாஸ்தர ஹோமம் :
இதன் சாதனை ஹோமமும், யந்திரமும் கூடும்பொழுது எந்தப் பகையையும் விலகி ஒடவைக்கும். துன்பங்கள் அனைத்தையும் போக்கும். பகைவர்கள் நட்புக்கொள்வர்.

10. ஸ்ரீ மஹாலக்ஷ்மி யந்திரத்துடன் வஸீதாரா மஹாலக்ஷ்மி ஹோமம் :
வீட்டில் விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டுவந்து குவிக்கும். ரத்தினங்கள், ஆபரணங்களின் சேர்க்கையைக் கூட்டுவிக்கும்.

11. ஸ்ரீ காயத்ரீ யந்திரத்துடன் ஸ்ரீ காயத்ரீ ஹோமம் :
மந்திரங்களின் மூலசக்தி ஸ்ரீ காயத்ரீ தேவியே. எந்த மந்திர உச்சாடனத்திற்கும் காயத்ரீ மந்திரத்தை ஜெபித்த பின்னரே உரிய மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். சர்வ காரிய சித்திகளுக்கும் துணை நிற்கக் கூடியவை இந்த ஹோமமும் யந்திரமும்.

12. ஸ்ரீ வராஹி யந்திரத்துடன் ஸ்ரீ வராஹி பிரயோக ஹோமம் :
ஆறு முக்கோணங்களைத் தன்னுள்ளடக்கிய யந்திரத்தை உடையவள் வராஹி. வேண்டி வணங்குபவருக்கு வேண்டும் வரங்களைத் தருபவள். வேறு எந்த சக்தி எதிர்த்தாலும் தன்னைப் பூஜிப்பவருக்கு தங்குதடையின்றி வரம் தருபவள். தரித்தரங்கள் விலகும், மன சஞ்சலங்கள் அகலும்.

13. பூர்ண புஷ்கலா தேவி யந்திரத்துடன் பூர்ண புஷ்கலா ஹோமம் :

பூர்ணா தேவி:
பூர்ணம் என்றால் நிறைவு. பொன்னிறம் வாய்ந்தவள். நீலத்தாமரையை இடது கையில் பிடித்தவள். வலது கை தொங்கிய நிலையானவள். கிரீடம் சூடியவள். சாஸ்தாவின் வலது பக்கத்தில், இடது காலை மடித்தவளாய், வலது காலை தொங்கவிட்டவளாய் அமர்ந்திருப்பவள். இதுவே பூர்ணா தேவியின் தோற்றமாகும்.

புஷ்கலா தேவி:
புஷ்கலம் என்றால் முழுமை. நீலநிறம் வாய்ந்தவள். வரமருளும் முத்ரையை இடது கையில் கொண்டவள். வலது கையில் ஒரு மலரும் கொண்டவள். கிரீடம் அணிந்தவள். சாஸ்தாவின் இடது பக்கத்தில், வலது காலை மடித்தவளாய், இடது காலை தொங்கவிட்டவளாய் அமர்ந்திருப்பவள். இதுவே புஷ்கலா தேவியின் தோற்றமாகும். எதிலும் நிறைவான செல்வங்களையும் சௌபாக்கியங்களையும் தருபவர்கள் பூர்ண புஷ்கலா தேவியர்கள். மனக்குறைகளை நீக்கி மகிழ்ச்சி தருபவர்கள். மாங்கல்ய பலம் சேர்ப்பவர்கள். மன நிறைவை உண்டாக்கி நலம் தரும் ஹோமமாகும்.

14. ஸ்ரீ தன்வந்திரி யந்திரத்துடன் ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் :
அனைத்து விதமான உடல் பிணி, உள்ளத்து பிணி நீக்கி நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அளிக்க வல்லது தன்வந்திரி ஹோமம். மேலும் நீண்ட நாட்கள் நோயால் பீடிக்கப்பட்டவர்களை நலம் பெற்று பலம் பெறுவர். அமுத கலசத்தைக் கொண்டு சர்வரோக நிவாரணம் அளிப்பவர்.

15. ஸ்ரீ குபேர யந்திரத்துடன் ஸ்ரீ குபேர ஹோமம் :
வறுமையைப் போக்கி கடன்களைத் தீர்த்து அபரிமிதமான செல்வச் சேர்க்கையை தந்து மனதிற்கு நிம்மதியளித்து நாள் தோறும் சந்தோஷத்தை வழங்கி வருவது இந்த குபேர யந்திரமும் ஹோமமும்.

16. ஸ்ரீ சக்தி யந்திரத்துடன் ஸ்ரீ சக்தி ஹோமம் :
ஐஸ்வர்யம், ராக்ரமம், சர்வஜன வசியம் அனைத்தும் அருளி, பராசக்தி தேவியின் பரிபூரண அருள் கிடைக்க செய்யும் ஹோமம்.

17. ஸ்ரீ வடுக பைரவ யந்திரத்துடன் ஸ்ரீ வடுக பைரவ ஹோமம் :
அனைத்து பயங்களிலிருந்து பக்தர்களை காக்கும் ஹோமம். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய்த் தெரிவது. பூஜிப்பவரைக் காக்கும் வல்லமை கொண்டது. பேய் பிசாசு தொல்லை நீக்கிடும். பில்லி சூனியத்தையும், மாந்திரீகங்களையும் தவிடு பொடி ஆக்கி வாழவைக்கும் வடுக பைரவர் யாகம்.

18. ஸ்ரீ காமாக்யா யந்திரத்துடன் ஸ்ரீ காமாக்யா மஹா ஹோமம் :
தம்பதிகளின் கருத்தொருமித்த காமாக்கியங்களுக்கு வல்லமையைத் தருவது. ஸ்பரிச உணர்வில் காந்த சக்தியை வர்ஷிப்பதுடன் மனதில் நிறைவையும் தருவது. பெண்களின் இரத்த சம்பந்தமான நோய்கள் தீர்க்கும்  இந்த ஹோமம்.

19. ஸ்ரீ மகாலட்சுமி யந்திரத்துடன் மகாலட்சுமி ஹோமம் :
லக்ஷ்மி நாராயணன் பூஜையுடன் கூடியது. இது சர்வ ஐஸ்வர்யமும் அருள்வது. அஷ்டலக்ஷ்மியின் அனைத்துச் சக்திகளையும் கொடுத்து பக்தர்களின் வாழ்வை உயர்த்தி நலம்பெற செய்வோம்.

20. ஷ்வாரூட யந்திரத்துடன் அஸ்வாரூட ஹோமம் :
சகல விதமான தோஷங்களையும் நீக்கவல்லது. வெளிநாடு செல்லத் தடை ஏற்பட்டால் அதை நீக்குவது, வெளிநாடு, கடல் கடந்து சென்று பணம் சம்பாதிக்க அருள்வது. தொழில், உத்யோகத்தில் ஏற்படும் பயத்தைப் போக்க வல்லது.

21. பாலமுருகன் யந்திரத்துடன் ஸ்ரீ பாலமுருகன் ஹோமம் :
சத்ரு சம்ஹார ஹோமத்தின் பலனத் தருவது இந்த ஹோமம். கல்வி தடைப்பட்டவர்களுக்கும், செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கும், இரத்த சம்பந்தமான புற்றுநோயாளிகளுக்கும் நிவர்த்தியைத் தரவல்லது. பூமி சம்பந்தமான தோஷங்கள் அகல வழி பிறக்கும்.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, மஞ்சள், குங்குமம், அன்னதான மளிகைப் பொருகள், நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203