ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் நடத்தும்
மாணவ, மாணவியர்களின் கல்வித் தரம் உயர
மாபெரும் ஸ்ரீ மேதா
தட்சிணாமூர்த்தி ஹோமத்துடன்
ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ வித்யா
கணபதி யாகங்கள்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, அனந்தலைமதுரா, கீழ்புதுப்பேட்டையில் மிகவும்
அமைதியான முறையில் கடந்த 15 வருடங்களாக ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
பல ஆன்மீக மற்றும் பொதுநல சேவையில் ஈடுபட்டு நல்ல முறையில் தொண்டாற்றி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த
15 ஆண்டுகளில் பல்லாயிர கணக்கான
யாகங்களை ஏறக்குறைய 500 க்கு மேற்பட்ட சேவை
மனப்பான்மையுள்ள இளைஞர்கள் மற்றும் பக்தர்களை கொண்டு பல ஆலயங்கள்
மற்றும் பொது இடங்களில் நடைபெறும் கும்பாபிஷேகங்கள், மஹா யக்ஞங்கள்,
சிறப்பு முகாம்கள் போன்ற பிரதான
நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டு சேவை புரிந்து வருகிறார்.
இன்றைய காலக்கட்டத்தில் பலவிதமான இடையூறுகளால், மாணவ, மாணவிகளுக்கு தேவையற்ற பழக்க
வழக்கங்களில் ஏற்பட்டு கல்வியில் நாட்டம் குறைதல், ஞாபக மறதி
போன்றவைகளால் கல்வியில் பாதிப்பு ஏற்படுது. உலகின் பல பகுதிகளில் பலவிதமான
இன்னல்களாலும், இயற்கை
சீரழிவுகாளலும் மக்கள் துயரம் அடைகிறார்கள். விதவிதமான நோய்களாலும் தொல்லைக்கு
ஆளாகிறார்கள். ஆகையால் இறை அருளும், திருவருளும்
பெற்று மனம் நிறைந்த நல்ல மங்கள வாழ்வும், நோயற்ற
வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற்று, வாழ்வில்
சிறந்த நிலை பெற ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மாணவ, மாணவியர்களுக்காக ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர்,
ஸ்ரீ வித்யா கணபதி போன்ற ஹோமங்கள் 13 வருடமாக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 14 வது வருடமாக 2018 ஆகஸ்ட்
மாதம் 15 ஆம் தேதி மற்றும் புதன்கிழமை சுதந்திர தினத்தன்று,
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மேற்கண்ட நான்கு ஹோமங்கள் மிகச்
சிறப்பாக நடைபெற உள்ளது. ஸ்ரீ மேதா தட்சிணாமூரத்தியை வணங்கினால் ஞானம், கல்வி, வித்தை, குரு கடாட்சம், சுபயோகம், ரோகமின்றி நல்ல உடல் ஆரோக்கியம், கிரக தோஷமின்றி
வாழவும், மேலும், பல நல்ல பலன்களை
பெற உதவும் வகையிலும் மாணவ, மாணவியர்கள் கல்வியில் தேர்ச்சி பெறவும், உலக
அமைதிக்காகவும், நன்மைக்காகவும் நடைபெறுகிறது. இந்த ஹோமம்
வைபவத்தில் பங்குபெறும் அனைவரும் குருவருள் பெற்று மகிழ்ச்சியும் வாழ்வில் அனைத்து
மங்களமும் பெறுவார்கள் என்பது திண்ணம்.
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருள்
ஆசியுடன் அனைத்து ஹோமம் நிகழ்ச்சிகள் கிரமப்படி சிறந்த வேத விர்ப்பணர்களை கொண்டு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது என்பதை குருபக்தியுடனும், மகிழ்வுடனும் தெரிவித்துக் கொள்கிறோம். 15.08.2018 புதன்கிழமை
காலை 6.00 மணிக்கு நாதஸ்வர மங்கள இசையில்
துவங்கி, கோ பூஜை, யாகசாலை பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம், ஸ்ரீ
ம்ருத்யஞ்ஜ ஹோமம், ஸ்ரீ
லஷ்மிநரசிம்மர் ஹோமம், ஸ்ரீ மேதா
தட்சிணாமூர்த்தி ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ வித்யா கணபதி ஹோமங்கள் நடைபெற்று, பூர்ணாஹுதி நடைபெறும். ஹோமம்
நிறைவு பெற்ற உடன் அதற்குரிய தெய்வங்களுக்கு மஹா அபிஷேகமும்,
ஆராதனையும் நடைபெற்று பங்கேற்கும் மாணவ, மாணவியர்களுக்கு யாகத்தில்
வைத்து பூஜித்த எழுது பொருட்கள் மற்றும் அன்னப்பிரசாதம்
வழங்கப்படும். இந்த சிறப்பு ஹோமத்தில் அனைவரும் கலந்துகொண்டு இறையருள் பெற
வேண்டுகிறோம்.
இந்த
யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள்,
மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், எழுது
பொருட்கள், இனிப்பு வகைகள், மளிகை பொருட்கள், அன்னதான
பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய்,
தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு
இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment