தன்வந்திரி
பீடத்தில்
ஆடி வெள்ளியை முன்னிட்டு
கொடிய சாபங்கள் விலக காமதேனு ஹோமம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 20.07.2018 ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு
காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கொடிய சாபங்கள் விளக ஸ்ரீ
காமதேனு ஹோமத்துடன் கோமாதா பூஜை நடைபெற்றது.
மங்களகர்மான ஆடி மாதத்தில் கோ-பூஜை செய்து வழிபடுவது நல்லது. வாழ்க்கையில் பெரும் புண்ணியத்தைத் தருவது கோபூஜை. கோமாதாவின்
உடலில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், இதர தெய்வங்களும், ரிஷிகளும், அஷ்டவசுக்கள் அடக்கம் என்கிறது
வேத நூல்கள்.
பசுவை பெற்ற
தாய்க்கு இணையாக கருதிதான் நாம் ‘கோமாதா’ என்று அழைக்கிறோம். கோமாதா பூஜை செய்யும் போது பசுவை
முன்புறமாக தரிசிப்பதை விட, பின்புறமாக தரிசிப்பது மிகவும் நன்மை
தரும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் பசுவின் பின்புறத்தில்தான் மகாலட்சுமி வாசம்
செய்கிறாள். பசுவை வழி படும்போது, முன் நெற்றி, வால் பகுதிகளில் சந்தனம், குங்குமம்
வைத்து, மாலை அணிவிக்க வேண்டும். பசுவின்
சாணமும் லட்சுமி அம்சம். எனவேதான் வீட்டு வாசலில் சாணம் கரைத்து தெளிக்கிறார்கள்.
பசுவுக்கு பூஜை செய்வது என்பது, அகிலத்தைக் காக்கும் அன்னை
பராசக்திக்கு பூஜை செய்வதற்கு ஒப்பானதாகும். பசுவின் பால், நெய் கொண்டே யாகங்கள் செய்விக்கப்படுகின்றன. இவ்வாறு யாகங்கள்
செய்வதால் மழை பொழியும் என்பது ஐதீகம்.
இந்த
ஹோமம் பித்ரு சாபங்கள், பித்ரு தோஷங்கள்,
பலவகையான சாபங்கள் விலகவும், செல்வச் செழிப்பு உண்டாகவும், குழந்தை இல்லாமல்
துன்பப்படுபவர்களுக்கு, புத்திரப்பேறு வாய்க்கவும், தீய சக்திகள் விலகவும், கல்வியும்,
செல்வச் செழிப்பும் வந்து சேரவும். முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கவும், மன சஞ்சலங்கள் நீங்கி மகிழ்ச்சி குடிகொள்ளவும், தீய சக்திகள் விலகவும், சௌபாக்கியங்கள்
பெறவும் நடைபெற்றது. மேலும்
இரண்டாவது நாளாக தன்வந்திரி கோடி ஜப யக்ஞமும் நடைபெற்றது. இதில் கோவை R.V.S. கல்வி
நிறுவனங்களின் சேர்மன் திரு. கே.வி. குப்புசாமி அவர்கள், வேலூர் துர்காபவன் உரிமையாளர்
திரு. உதயசங்கர், மற்றும் கர்னாடக பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த
தகவலை தன்வந்திரி குடும்பதினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment