வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
சண்டி ஹோமம்
இன்று 20.07.2018 ஆடி முதல் வெள்ளிக்கிழமை அஷ்டமி திதி, சித்திரை நட்சத்திரம், காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை, உலக மக்கள் யாவரும் எவ்விதமான நோய்களின்றி ஆரோக்கியமாக வாழவும், எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி ஐஸ்வர்யங்கள் பெருகி, மனநிம்மதியோடு நிறைவான வாழ்வு பெறவேண்டும் என்ற எண்ணத்தில், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, சௌபாக்யம் தரும் ஸ்ரீ மகா சண்டி ஹோமம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்வேறு தரப்பினர் யாகத்தில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல ஆதிபராசக்தியாய் விளங்கும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி அம்பாளின் அருளை பெற்றனர்.
இதனை முன்னிட்டு நேற்று 19.07.2018 மாலை 64 யோகினிகளுக்கு பலி பூஜைகளும், பூர்வாங்க யாகமும் நடைபெற்றது. இன்று காலை 8.00 மணிக்கு கோ பூஜை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ரக்ஷா பந்தனம், காலை 8.30 மணிக்கு கலச பிரதிஷ்டை , ஸ்ரீ சக்ர மகா மேரு பூஜை, லை 9.00 மணிக்கு ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஹோமம், ஸ்ரீ சத்ரு ஸம்ஹர சுப்பிரமணியர் ஜபம் / ஹோமம், காலை 10.00 மணிக்கு ஸ்ரீ துர்காசப்தசதி பாராயண, ஜப, ஸ்ரீ சண்டி ஹோமம் துவங்கியது. மதியம் 2.30 மணிக்கு சுஹாசினி பூஜை, தம்பதி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, வடுக பூஜை, செய்து சண்டி ஹோமம், பகல் 3.00 மணிக்கு மகா பூர்ணாஹுதி நடைபெற்று ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு, கலச அபிஷேகமும் மஹா தீபாராதனையும் நடந்து மஹாப்ரசாத விநியோகம் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மூலிகைகள் சேர்க்கப்பட்டன. இதில் வேலூர் திரு. கங்காதரன் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment