Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, May 25, 2023

சனீஸ்வரர் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர் மற்றும் ஜெயமங்கள சனீஸ்வரர்க்கு சிறப்பு பூஜை நடைபெற்றது

 சனீஸ்வரர் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர் மற்றும்

ஜெயமங்கள சனீஸ்வரர்க்கு  சிறப்பு பூஜை நடைபெற்றது

 

அகஸ்தியர் வழிபட்ட ஸ்தலம் இன்று வாலாஜாபேட்டை என்று அழைக்கப்படும்அகத்தீஸ்வரம் ஆக அறியப்படுகிறது. இங்குள்ள தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பெறும் முயற்சியினால்  ஈஸ்வர பட்டம் பெற்றவரும் நம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்டவருமான சனீஸ்வரனுக்கு உலகிலேயே முதல்முறையாக தங்கத்திலான விக்கிரகம் அமைக்கப்ட்டுள்ளது. இவர் இங்கு பாதாளத்தில் அருள்பாலிப்பதால்  பாதாள சொர்ணசனீஸ்வரர் ஆகவும் பிரகாரத்தில் மனைவியுடன் ஜெய மங்கள சனீஸ்வரர் என்ற பெயரிலும்  அருள் புரிந்து வருகிறார்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஈசான்ய மூலையில் 20 அடி அகலம், 27 அடி நீளம், 10 அடி உயரத்தில் பாதாளத்தில் மேற்கு நோக்கி சொர்ண சனீஸ்வரராக தனிச் சன்னிதியில் சனீஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பாதாள சொர்ணசனீஸ்வரர் ஆலயம் உலகில் வேறெங்கும் இல்லை. இவ்வாலயத்தில் 19.05.2023 இன்று வெள்ளிக்கிழமை வைகாசி  அமாவாசை சனிபகவான் ஜெயந்தி என்பதால்  ஸ்வாமிகள் அருளானைப்படி அஷ்டம சனிஏழரை சனிஅர்த்தாஷ்டம சனிகண்ட சனி போன்ற தோஷங்கள் விலகவும்பித்ரு சாபங்கள் நீங்கவும்விபத்து பாதிப்புகள் தடுக்கவும்பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும்தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும்தொழில்வியாபாரம்விவசாயத்தில் ஏற்படும் இன்னல்கள் நீங்கவும்சகலவிதமான திருஷ்டிகள் அகலவும்சனி திசைசனி புக்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறையவும் காலை 10.00 மணிக்கு கோ பூஜையுடன் சனி சாந்தி ஹோமமும் பாதாள சொர்ணசனீஸ்வரருக்கு விஷேச அபிஷேகமும் வன்னி இலையால் அர்ச்சனையும் ஜெய மங்கள சனீஸ்வரருக்கு தைலாபிஷேகமும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அமாவாசையை முன்னிட்டு சரப சூலினி பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகமும் விஷேச அபிஷேக அலங்காரமும் நடைபெற்றது.பங்குபெற்ற பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் வருகிற 21.05.2023 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ பால் முனீஸ்வரர்க்கும், ஸ்ரீ கருப்பண்ணசாமிக்கும் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
​வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு ஸ்ரீ தாய் மூகாம்பிகை, ஸ்ரீ வீரபத்திரர் சிலைகள் வருகை பாண்டிச்சேரி சபாநாயகர் பங்கேற்பு

 இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டையில் அமைந்துள்ள  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றம் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் இன்று 17.5.2023 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் மகாபலிபுரம் பிரகாஷ் சிற்பகலைக்கூடத்தில் திரு. லோகநாதன் ஸ்தபதி அவர்களால் வடிவமைக்கப்பட்ட 5அடி உயரமுள்ள தாய் மூகாம்பிகை, 5 அடி உயரமுள்ள ஸ்ரீ வீரபத்திரர் மற்றும் 2 அடி உயரமுள்ள தட்சன், காளி  ஆகிய கற்சிலைகள் காலை 10 மணியளவில் தன்வந்திரி பீடத்திற்கு வருகை புரிந்தது. இச்சிலைகளுக்கு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் மஹா தீபாராதனையும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் மாண்புமிகு ஏம்பலம் ஆர். செல்வம் அவர்கள் பங்கேற்று மஹா தீபாராதனை செய்து சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தன்வந்திரி மஹா ஹோமத்திலும் 108 கலச திருமஞ்சனத்திலும் பங்கேற்று தன்வந்திரி பெருமாளையும் இதர பரிவார மூர்த்திகளையும் தரிசனம் செய்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று சென்றார். இவ்வைபவத்தில் அனந்தலை பஞ்சாயத்து துணைத்தலைவர் திருமதி மீனா பெருமாள், ஊர் நாட்டாண்மை திரு. தேவராஜ் சாமியார், வாலாஜா நகர மன்ற வார்டு உறுப்பினர்கள் திரு W.G. முரளி, திரு. சுரேஷ், மற்றும் திரு. கமலக்கண்ணன், திரு. ஸ்ரீநிவாசன், திரு. குபேந்திரன் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் பங்கேற்று சிறப்பித்தனர். மேற்கண்ட சிலைகள் வைகாசி 25, ஜுன் 8 மற்றும் வைகாசி 26 ஜுன் 9 ஆகிய தேதிகளில் பிரதிஷ்டை செய்து மஹா கும்பாபிஷேகம் செய்யப்படவுள்ளது.

இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.--


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு ஸ்ரீ தாய் மூகாம்பிகை, ஸ்ரீ வீரபத்திரர் சிலைகள் கரிக்கோல பவனி வருகை

                                      வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு

ஸ்ரீ தாய் மூகாம்பிகை, ஸ்ரீ வீரபத்திரர்

சிலைகள் கரிக்கோல பவனி வருகை

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டையில் அமைந்துள்ள  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றம் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நாளை 17.5.2023 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் மகாபலிபுரம் பிரகாஷ் சிற்பகலைக்கூடத்தில் திரு. லோகநாதன் ஸ்தபதி அவர்களால் வடிவமைக்கப்பட்ட 5அடி உயரமுள்ள தாய் மூகாம்பிகை, 5 அடி உயரமுள்ள ஸ்ரீ வீரபத்திரர் மற்றும் 2 அடி உயரமுள்ள தட்சன், காளி  ஆகிய கற்சிலைகள் மகாபலிபுரத்திலிருந்து கரிக்கோலமாக புறப்பட்டு காலை 10 மணியளவில் தன்வந்திரி பீடத்திற்கு வருகை புரியவுள்ளது. இச்சிலைகளுக்கு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மஹா தீபாராதனையும் சிறப்பு பூஜைகளும் நிகழ்த்தவுள்ளார்.

இச்சிலைகள் மகாபலிபுரம், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம், காவேரிப்பாக்கம் வழியாக கரிக்கோல பவனியாக வருகிறது. இச்சிலையானது வருகிற ஜுன் 8 வைகாசி 25மற்றும் ஜுன் 9 வைகாசி 26ம் தேதிகளில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tuesday, May 23, 2023

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் குரு பெயர்ச்சி மஹா யாகம் அட்சய திரிதியை அன்று நடைபெறுகிறது. நாள் 22.04.2023 சனிக்கிழமை

                                             வாலாஜாபேட்டை  தன்வந்திரி  பீடத்தில்

குரு பெயர்ச்சி மஹா யாகம்

அட்சய திரிதியை அன்று நடைபெறுகிறது.

நாள் 22.04.2023 சனிக்கிழமை

 

மனித வாழ்க்கையின் ஏற்றம் - இறக்கம்  எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றனபூர்வ புண்ணியத்திற்கான பலன்களை  அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர்இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாகநடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான்தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார்குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டுஅதனால் தான் ‘குரு பார்க்க கோடி நன்மை’, ‘குரு பார்வை தோஷ நிவர்த்தி’ என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது.

 

குருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும்அதாவதுஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு  ஆகிறதுகுருசூரியன் இருவரும் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியிலும் இருக்கும் காலத்தில்மகா கும்பமேளா கொண்டாடப் படுகிறதுகுருபகவான் ஒரு ராசியில் இரண்டுஐந்துஏழுஒன்பதுபதினொன்று ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாதகர் நற்பலன்களை அடைகிறார்அதே குருபகவான்ஒன்றுமூன்றுநான்குஆறுஎட்டுபத்துபன்னிரண்டு ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும்  காலத்தில் அசுப பலன்களைப் பெறுவார்.

 

இப்படி நன்மையற்ற பலன்களைப் பெறக்கூடிய ராசி அன்பர்கள்குருப்பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரம்ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதால்அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடலாம்இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி  வருகிற 22.04.2023 சனிக்கிழமையன்று  அட்சய திரிதியை அன்று குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி  ஆகிறார். இப்பெயர்ச்சியில் அவசியம் பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய ராசிகள்.

மேஷம், ரிஷபம்கடகம், கன்னி, விருச்சிகம்மகரம்,  கும்பம், ஆகிய ராசியினரும் குரு புத்தி குரு திசைநடைபெறும்  அன்பர்கள் அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடவேண்டியும்,சுப பலன்களான திருமணம்குழந்தைப்பேறுதொழில்பொருளாதாரம்உயர்பதவிஅரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டியும் மேற்கண்ட குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது.

ஒரே பீடத்தில் 468 சித்தர்கள் 18 குரு மகான்கள் கல்வி குரு சரஸ்வதி ராஜ மாதங்கி, ஆரோக்ய குரு தன்வந்திரி, வேத குரு காயத்ரி தேவி, போன்ற பல்வேறு குருவுடன் ஒருங்கே அமைந்து அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்திக்கு இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை  ஸ்ரீ தன்வந்திரி  ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 22.04.2023  சனிக் கிழமை  காலை 8.30  மணி முதல் 11.00 மணி வரை  குருப்பெயர்ச்சி மஹா யாகம்  மற்றும்  ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு  சிறப்பு  அபிஷேகம்  வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறதுஇம்மஹா யாகத்தில் பிரபல ஜோதிட வல்லுநரும் காளிகாம்பாள் உபாசகருமான புலியூர் நாகராஜன் அவர்கள் மற்றும் பல்வேறு ஜோதிடர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

மேற்கண்ட பூஜையில் கலந்து கொள்வதற்கு  ஒரு நபருக்கு ஒரு ராசிக்கு  சங்கல்ப காணிக்கை ரூ. 500/- வீதமும் செலுத்தி கலந்து கொள்பவர்களுக்கு மகா யாகத்தில் வைத்து பூஜிக்கப்பெற்ற  ஹோம பிரசாதம் வழங்கப்படும். 

 இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு அட்சய திரிதியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்திலுள்ள லக்ஷ்மி குபேரருக்கு சிறப்பு ஹோமம் பூஜைகளும் 1008 பொற்காசுகள் கொண்டு அர்ச்சனையும் நடைபெறுகிறது.

 

 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,

10 கீழ்புதுப்பேட்டைதன்வந்திரி நகர்,

வாலாஜாபேட்டை, இராணிப்பேட்டை மாவட்டம்- 632513

தொலை பேசி 9443330203

Web: www.danvantritemple.org Email: danvantripeedam@gmail.com   

Bank Details :

Name : Sri Muralidhara Swamigal

Bank Name : State Bank of India

Account Number : 10917462439

Gpay: 9443330203