Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, January 31, 2018

பௌர்ணமி - தைப்பூசம் பல்வேறு விதமான யாகங்களும் பூஜைகளும்...

தன்வந்திரி பீடத்தில் பௌர்ணமி - தைப்பூசம்
பல்வேறு விதமான யாகங்களும் பூஜைகளும் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதியும் பெற்றோர்களின் குறை தீரவும், தம்பதிகளின் வாழ்வு சிறக்கவும், வம்ச விருத்தி அடையவும் ஆண் – பெண்கள் வாழ்கை மலரவும், குறித்த வயதில் திருமணம் நடைபெற வேண்டியும், திருமணத் தடைகள் விலகவும், குழந்தை பாக்யம் வேண்டியும் இன்று புதன் கிழமை தைப்பூசம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு விதமான யாகங்கள், நிவாரண பூஜைகள் காலை 10.00 மணி முதல் நடைபெற்றது.

பௌர்ணமியை முன்னிட்டு பெண்கள் திருமணத் தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகம் ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், குழந்தை பாக்யம் வேண்டி சந்தானகோபால யாகம், நவனீத கிருஷ்ணருக்கு வெண்ணை சாற்றும் வைபவம், 27 நட்சத்திர பரிகார ஹோமம், 468 சித்தர்களுக்கு சிறப்புபூஜை, ராகு – கேது அன்னாபிஷேகமும் நடைபெற்றது.


தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலாருக்கு அபிஷேகம், ஹோமம், கஞ்சி கொடுக்கும் வைபவம், ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு தைலாபிஷேகம், நவகன்னிகைகளுக்கு குழந்தைவரம் வேண்டி தொட்டில் கெட்டும் நிகழ்ச்சி, சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகமும், கிரகண சாந்தியும் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண் – பெண்கள், தம்பதிகள், தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்னாடகா, புதுச்சேரி மாநில பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமிகளிடம் அருளாசி பெற்று பயன் பெற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tuesday, January 30, 2018

கார்த்தவீர்யார்ஜூனர் ஹோமம்...

வாலாஜபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
 16 செல்வங்கள் பெறவும்
தொலைந்து போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்க,
ஸஹஸ்ரார்ஜூனர்  எனும் ஆயிரம் கையுடையான்
கார்த்தவீர்யார்ஜூனர் ஹோமம்
வருகிற 11.02.2018ல் நடைபெறுகிறது.

16 செல்வங்கள் தரும் ஸ்ரீ கார்த்தவீர்ர்யாஜுனர் :
கார்த்தவீர்யார்ஜுனரை வழிபடுபவர்களுக்கும், இவர் சரிதத்தைப் படிப்பவர்கள், கேட்பவர்கள் யாவருக்கும் பெரும் நன்மை உண்டாகும். இவரை வழிபட்டு, இவருடைய பூஜை மற்றும் ஹோமங்களில் கலந்துகொண்டால் காணாமல் போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைப்பர், இழந்த செல்வ நிலையைத் திரும்பப் பெறலாம், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்,  அடகு வைத்த நிலம், நகையை விரைவில் மீட்டலாம், கடன் தீரும், பதினாறு வகையான செல்வங்களை பெற்று வாழ்வில் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமம் :
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 11.02.2018 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஏகாதசி திதியை முன்னிட்டு உலக நலன் கருதி பதினாறு செல்வங்களான பு‌கழ், கல்வி, வீரம், வெற்றி, நன்மக்கள், துணிவு, தன்னம்பிக்கை, தானியம், சுகம், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, உடல் நலம், நல்லொழுக்கம், நீண்ட ஆயுள் பெறவும், இழந்த பொருள்களை திரும்ப பெறவும், தடைபட்ட காரியங்களில் வெற்றி பெறவும், பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமம் நடைபெற்று அதனை தொடர்ந்து பால், தயிர், கரும்புச்சாரு போன்ற 16 விதமான பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் கார்த்தவீர்யார்ஜுனர்க்கு உரிய மலர்களை கொண்டு அஷ்டோத்தர நாமாவளி நடைபெற்று கார்த்தவீர்யார்ஜுன இரக்ஷையுடன் பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

ஆயிரம் கையுடையான் :
ஸஹஸ்ரார்ஜூனர் , ஆயிரம் கையுடையான், கார்த்தவீர்யார்ஜுனர் என்ற பல்வேறு பெயர்களில் பக்தர்களால் அழைக்கப்படுபவர் மகா விஷ்ணுவின் சுதர்சன பகவானின் மறு அவதாரமாக போற்றி வழிபடுகின்றனர்.

க்ஷத்ரிய மாமன்னர் :
கத்ரி சமுதாய குலாதிபதியுமானவரும், மனித க்ஷத்திரியனாகிய கார்த்தவீர்யர்ஜுனரே க்ஷத்ரிய மாமன்னராவார். இவரை ஆயிரம் கையுடையான் என்றும் ராஜ ராஜேஸ்வரன் என்றும் பரசுராமரிடம் போரிட்டு தோல்வி கண்டவர், மகாராஜா என்றும் போற்றி வழிபடுகின்றனர்.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கார்த்தவீர்யார்ஜூனருக்கு ஆலயம்:
இழந்த பொருளை மீட்டுத் தரும் இறைவனாகவும், களவுபோன பொருளை கண்டுபிடிக்கும் கடவுளாகவும், ஆத்ரேய கோத்திரகாரர்களின் குல தெய்வமாக விளங்குகின்றவரும், ஸ்ரீ தத்தாத்ரேயரின் நம்பிக்கையுடைய சீடருமான ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர்க்கு இந்தியாவில் எங்கும் இல்லாதவாறு பச்சைகல்லில் 4அடி உயரத்தில் நின்ற கோலத்தில் இழந்த பொருட்களை மீட்டுக் கொடுக்கும் இறைவனாக 16 விதமான செல்வங்களை போற்றும் விதத்தில் 16 திருக்கரங்களைக் கொண்டு 16 விதமான ஆயுதங்களுடன் சுதர்சன சக்கரங்களுடன் காலில் பாதரக்ஷை கொண்டு பார்த்தசாரதி பெருமாள் போன்று மீசையுடன், கதையுடன், சங்கு சக்கரத் தாரியாக கார்த்தவிர்யார்ஜூனர் யந்திரத்துடன் 16 செல்வங்களும் நாம் பெறும் விதத்தில் காட்சித்தரும் திருக்காட்சியுடன் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார்.

இவருக்கு உதயபூர், குவாலியர், மாகேஷ்வர் போன்ற பல இடங்களில் வெவ்வேறு திருநாமங்களுடன் இவரை அழைத்து வழிபடுகின்றனர். க்ருதா யுகத்தில் உலகம் நன்முறையில் இயங்க மஹாவிஷ்ணுவின் அம்சமாக ஸ்ரீ கார்த்தவீர்யன் அரசராக அவதரித்தார். இவர் முதலில் ஸ்ரீ அத்ரி முனிவரிடம் சகல வித்தைகளையும் கற்றார். ஸ்ரீ அத்ரி முனிவரின் புதல்வரும் அவதூத சத்குருவுமான ஸ்ரீ தத்தாத்ரேயரின் சீடராவர்.

ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டு கீழ்கண்ட வரங்களை பெற்றவர் :

1.விரும்பிய போதெல்லாம் ஆயிரம் கைகள் வரும் வரம்.

2.இவரது ராஜ்யத்தில் யாராவது அதர்மம் செய்ய நினைத்தால் அவர்கள் பயமடைந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடும் வரம்.

3.எல்லா உலகங்களையும் வென்று அரசாளும் வரம்.

4.இவரை யுத்தத்தில் எதிர்ப்பவர்களை விட இவரிடத்தில் அதிகமான சேனை வீரர்கள் உருவாகும் வரம். இந்த நான்கு வரங்களைப் பெற்று அவரது சீடர்களுள் ஒருவராகவும் விளங்கினார்.

தொலைந்து போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்கும் மந்திரம் :
ஓம் ஹ்ரீம் ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நம: |
கார்த்த வீர்யார்ஜுனோ ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந் ||
தஸ்ய ஸ்மரந மாத்ரேன கதம் நஷ்டம் லப்யதே ||

ஸ்ரீ கார்த்தவீர்யர் காயத்ரீ மந்திரம் :

ஓம் கார்த்தவீர்யாய வித்மஹே
மஹாசூஷ்மாய தீமஹி
தந்நோஸ்ர்ஜுநஹ் ப்ரசோதயாத்.

மேற்கண்ட பூஜையிலும் ஹோமத்திலும் பங்கேற்க விரும்புபவர்கள் சுத்தமான பசு நெய், வெண்ணை, வெண்கடுகு, நாயுருவி, உலர்பழங்கள், பேரிச்சம்பழம், மாதுலை போன்ற சிகப்பு நிற பழங்கள், ஏலக்காய், இலவங்கம், போன்ற வாசனாதி வச்துக்கள் கொடுத்து ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் அருள் பெறலாம். மேலும் விவரங்களுக்கு கிழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203


Monday, January 29, 2018

இராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம்..

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில்
இராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம்
31.01.2018 புதன் கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்துல் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி வருகிற 31.01.2018 புதன் கிழமை, தைப் பூசம், பௌர்ணமியை முன்னிட்டு மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை இராகு கேதுவிற்கு பால், மஞ்சள் அபிஷேகத்துடன் அன்னா[பிஷேகம் நடைபெறுகிறது.

இராகு-கேது அன்னாபிஷேக மஹிமை :
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் மாலை மேற்கண்ட இராகு-கேது அன்னாபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு ஏற்படும் புற்று நோய் போன்ற எண்ணற்ற நோய்கள் அகலவும், உணவு குழாவில் ஏற்படும் நோய்கள் அகலவும், வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகள் நீங்கவும் போன்ற பல்வேறு விதமான தோஷங்கள் நீங்கவும் நோய் தீர்க்கும் அன்னபிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது
.
இந்த இராகு கேது அன்னாபிஷேகத்தில் பங்கேற்க விரும்பவர்கள் பால், மஞ்சள் போன்ற அபிஷேக பொருட்களும், அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்களும், அர்ச்சனைக்கு வேண்டிய புஷ்பங்களும், பழங்களும், தீபத்திற்கு நெய், நல்லெண்ணை கொடுத்து தானம் செய்து சங்கல்பம் செய்துகொண்டால் இராகு கேது தோஷமும் கிரகண தோஷமும் நீங்கும்.

வேலூருக்கு அருகே வாலாஜாவில் அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் :
நம் கையில் சொத்து பத்து இல்லை என்றாலும், வியாதி வெக்கை இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும்என்பதுதான் இன்றைய தேதியில் அனைவரது பிரார்த்தனையாகவும் ஆசையாகவும் இருந்து வருகிறது. பக்தர்களுக்கு இத்தகைய ஒரு வரத்தை அருளும் மக்கள் பிணித் தீர்க்கும் மருத்துவ பீடமாக விளங்கி வருகிறது வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.

நோயில்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்என்பதே இந்த ஆரோக்ய பீடத்தின் குறிக்கோள். இதன் ஸ்தாபகரான ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இதற்காக எண்ணற்ற ஆராய்ச்சிகளையும் கூட்டுப் பிரார்த்தனைகளையும் இங்கே நடத்தி வருகிறார். ஹோமப் புகையில் கனன்று கொண்டிருக்கும் மூலிகைகளின் வாசமும், பிரமாண்டமான மூலிகைப் பண்ணையில் இருந்து வரும் சுகமான காற்றும் பக்தர்களின் மனதை வருடுகின்றன.

வேலூருக்கு அருகே வாலாஜாவில் அமைந்துள்ளது இந்த ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்இந்த பீடத்தை ஒரு வாழ்வியல் மையம், மனக் குறை தீர்க்கும் மையம், தேசியக் கோயில், வாஸ்து பகவான் கோயில், தன்வந்திரி கோயில், சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில், லக்ஷ்மி குபேரர் பீடம், குருபீடம், தத்த பீடம், சித்தர்கள் பீடம் என்று பக்தர்கள் பல பெயர்களில் குறிப்பிடுகின்றனர்.

அந்த அளவுக்கு இங்கு வந்து செல்லும் அனைவரும் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும்டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியாலும் பலன் அடைகிறார்கள். வைத்தியத் துறையின் தந்தையான ஸ்ரீ தன்வந்திரி பகவான் அருளும் இந்த ஆரோக்ய பீடத்தில் 75க்கு மேற்பட்ட திருச்சந்நிதிகளும் 468 சிவலிங்க ரூபத்தில் சித்தர்களாக உள்ளன.

ராகு கேதுவுக்கு பிரதி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் :
அவற்றுள் ராகுகேது சந்நிதியும் சிறப்பான ஒன்று. ‘ஏக சரீர ராகுகேதுவாக தரிசனம் தரும் இந்த ராகுகேது விக்கிரகத்தின் தலைப் பகுதி ராகுவாகவும், உடல் பகுதி கேதுவாகவும் அமைந்துள்ளது. சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமியில் ஈஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் செய்வது போல் இந்த ஏக சரீர ராகுகேதுவுக்கு ஒவ்வொரு பௌர்ணமியின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் பின் பிரசாதமாக விநியோகிக்கப்படும் இந்த அன்னத்தை உண்டால், உடல் செரிமானம் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும். நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர் என்று ஜோதிடம் கூறுகிறது. இதில் இருந்து ராகு மற்றும் கேதுவுக்கு உள்ள முக்கியத்துவம் எளிதில் விளங்கும். ராகு - கேது எந்த ராசியில் இருக்கிறார்களோ, எந்தக் கோள்களினால் பார்க்கப்படுகின்றரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளனரோ, அதற்குத் தக்கவாறு பலன்களை முழுமையாகத் தருவார்கள். குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மாவள்ளல் ராகு பகவான். ஞானகாரகன். ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர்.


பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருப்பவரைத் திடீரென கோடீஸ்வரர் ஆக்குபவரும் ராகு. கெட்ட சகவாசங்களுக்கும் காரணம் ராகுவே! ஞானம், மோட்சம் போன்றவற்றை அருள்பவர் கேது பகவான். கல்வி அறிவு, கேள்வி ஞானம் அருள்பவர். தோல் வியாதி, வாயுத் தொல்லை, வயிற்று வலி உட்பட பல வியாதிகளினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கேது பகவானுக்குப் பரிகாரம் செய்து பாதிப்பில் இருந்து மீளலாம். குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சியைப் போலவே ராகுகேது பெயர்ச்சியும், ப்ரீத்தி ஹோமங்களும், காலசர்ப்ப யாகம், சர்ப்ப சாந்தி, நாகதோஷ நிவாரண பூஜைகளும் தன்வந்திரி பீடத்தில் பக்தர்கள் விரும்பும் நாளிலும், விசேஷ தினங்களிலும் நடைபெற்று வருகிறது.  யாகத்தின் மூலம் திருமணத் தடை, உத்தியோகம் இன்மை, அயல்நாட்டுப் பயணம் தடைபடுதல், குழந்தைப் பேறின்மை, தம்பதிக்குள் ஒற்றுமை மிகுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு பிரார்த்தனைகளுக்குப் பலன் வேண்டுபவர்கள் தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் இராகு- கேது ப்ரீத்தி ஹோமங்களிலும் பூஜைகளிலும் அன்னாபிஷேகத்திலும் கலந்து கொண்டு பிரார்த்தித்துப் பலன் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தனர் தெரிவித்தனர்.

Tuesday, January 16, 2018

தரும் திருஷ்டி துர்கா ஹோமம்

தன்வந்திரி பீடத்தில்
தீமைகள் நீங்கி நன்மைகள் தரும்
திருஷ்டி துர்கா ஹோமம் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி 9அடி உயரத்தில் பிரதிஷ்டை செய்துள்ள யக்ஞ ஸ்வரூபிணி ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரித்யங்கிரா மற்றும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி சன்னதி முன்பு 13 ஆண்டுகளாக அணயா ஹோமகுண்டமாக 12 அடி ஆழமுள்ள பிரமாண்டமான யாக குண்டத்தில் இன்று 16.01.2018 செவ்வாய்க் கிழமை அமாவாசை தினத்தை முன்னிட்டுதிருஷ்டி துர்கா ஹோமத்துடன் சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது.

இதில்  பூசணிக்காய்கள் தவிர கொப்பரைத் தேங்காய், முறம், எலுமிச்சம்பழம், மிளகாய் வற்றல் பொட்டலம், மஞ்சள், குங்குமம், பழங்கள், மூலிகைகள், சிகப்பு வஸ்திரம், வேப்ப எண்ணெய், நெய், புஷ்பங்கள், பட்சணங்கள், வாசனாதி திரவியங்கள், மேலும் பல விசேஷ திரவியங்கள், குங்கிலியம், சௌபாக்கியப் பொருட்கள் அக்னியில் ஆஹுதியாகச் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த யாகம் மூலம் பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை ஜாதக ரீதியிலான தோஷங்கள், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்கள், மாத்ரு - பித்ரு தோஷம் அகலுவதற்கும், கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்பட்டது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.