ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில்ஆண் – பெண் திருமணத் தடை நீங்க சுயம்வர கலா பார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், வாஸ்து ஹோமம் மற்றும் குரு பூர்ணிமா
சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம் இன்று வெள்ளிக்கிழமை 27.07.2018 குரு பூர்ணிமா, வாஸ்து நாள், ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு கோ பூஜையும், 7.30 மணி முதல் 9.00 மணி வரை வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து ஹோமமும், வாஸ்து பகவானுக்கு மஹா
அபிஷேகமும், அஷ்டதிக் பாலகர் பூஜையும்,பஞ்ச பூத வழிபாடும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து
ஆண் – பெண் திருமணத் தடை நீங்க சுயம்வர கலா பார்வதி
யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், தம்பதியருக்கு
குழந்தை பாக்யம் வேண்டி நடைபெறும் சந்தான கோபால யாகங்கள் நடைபெற்றது. மாலையில் ராகு-கேதுவிற்கு அன்னாபிஷேகமும், சத்ய நாராயண விரத பூஜையும், குரு பூர்ணிமாவை
முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் கோடி ஜப மஹா தன்வந்திரி ஹோமத்துடன் சிவலிங்க ரூபமான 468 சித்தர்கள், சீரடி சாய் பாபா, மஹா அவதார பாபா, சேஷாத்ரி
ஸ்வாமிகள், ராகவேந்திரர், தக்ஷிணா மூர்த்தி, ஹயக்ரீவர், சரஸ்வதி, போன்ற 20 க்கும் மேற்பட்ட குரு மஹான்களுக்கும், தெய்வங்களுக்கும்,
சகல தேவதா ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பங்கேற்ற அனைவருக்கும் குரு ஆசிர்வாதத்துடன்
அருட் பிரசாதமும், அன்னபிரசாதமும் வழங்கப்பட்டது. மேலும் நாளை 28.07.2018 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை திருவோணம் நக்ஷத்திரத்தில் ஸ்ரீ விநாயகர்
தன்வந்திரிக்கு நடைபெறும் சிறப்பு ஹோமத்திலும், தைலாபிஷேகத்திலும்
பங்கேற்று ஸ்ரீ விநாயகர் தன்வந்திரியை வழிப்பட்டு தைல பிரசாதத்தை உட்கொண்டால் சர்க்கரை
வியாதி, வலிப்பு நோய், மற்றும் உடல் சார்ந்த
நோய்கள், மனம் சார்ந்த நோய்கள் தீர மாமருந்தாகும். இந்த
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment