ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
"மகா சங்கடஹர சதுர்த்தி"சங்கடஹர கணபதி யாகம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், இன்று 31.07.2018 செவ்வாய்கிழமை மாலை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சங்கடஹர கணபதி ஹோமமும் மஹா அபிஷேகமும் நடைபெற்றது. சதுர்த்தி திதி
விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை
"வர சதுர்த்தி" என்றும், கிருஷ்ண பட்சம் (தேய்
பிறை) சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி" என்றும் கூறுவார்கள்.
நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது
சங்கடஹர சதுர்த்தி விரதமாகும். மேலும் செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு
வாய்ந்ததாகும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும். யாகங்களில் கலந்து கொண்டு வழிபாடு செய்தால் பல்வேறு சங்கடங்கள்
தீரும் எனலாம்.
இன்று நடைபெற்ற
சங்கடஹர கணபதி யாகத்தில் நீண்ட நாட்களாக
தீராமல் உள்ள நோய் தீரவும், துன்பங்கள் அகலவும், கல்வி அறிவு, புத்தி கூர்மை,
நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு. செல்வம், செல்வாக்கு கிடைக்கவும், பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment