Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, July 23, 2018

24 Hours 27 Yagams.....


ஜுலை 22 முதல் 23 வரை
தன்வந்திரி பீடத்தில்

24 மணி நேரம் 27 யாகங்கள்

அகண்ட ஹோமம் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், மக்கள் எல்லா காரியங்களிலும் வெற்றி பெற்று ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று வாழ ஜூலை மாதம் 22ஆம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 7.00 மணி முதல் 23ஆம் தேதி திங்கள்கிழமை காலை 7.00 மணி வரை 24 மணி நேரம் 27 ஹோமங்கள் கண்ட ஹோமமாக நடைபெற்றது.

22.07.2018 காலை 6.30 மணிக்கு கோபூஜை, கலச பூஜை, விக்நேஸ்வர பூஜை, யாகசாலை பூஜையுடன், ஸ்ரீ காரிய சித்தி கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், ஸ்ரீ சந்தான பரமேஸ்வர ஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமம், சூலினி துர்கா ஹோமம், மஹாபைரவர் ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், நீலா சரஸ்வதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ மகா குபேர  லட்சுமி ஹோமம், லட்சுமி ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம், ஸ்ரீ காயத்ரி ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவ ஹோமம், ராகு கேது ப்ரீத்தி ஹோமம், சுதர்சன ஹோமம், செவ்வாய் கிரக பிரீத்தி ஹோமம், 27 நட்சத்திர சாந்தி ஹோமம், உமா மகேஸ்வரி ஹோமம், சனி சாந்தி ஹோமம், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஹோமம், ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜீனர் ஹோமம், அகிய 27 ஹோமங்களின் மஹா பூர்ணாஹூதி இன்று 23.07.2018 திங்கட்கிழமை 7.00 மணிக்கு நிறைவு பெற்றது.

மேற்கண்ட யாகம் சிறந்த வேதவிற்பன்னர்கள் மற்றும் ஸ்வாமிகளின் தீக்ஷ பெற்ற சீடர்களைக் கொண்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 24 மணி நேரம் அகண்ட யாகமாக 27 யாகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று அவரவர்கள் தேவைகளுக்காக பிரார்த்தனைகள் செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்.





No comments:

Post a Comment