Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, November 28, 2019

Thailabhisheka Vizha


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்தைலபிஷேக விழா துவங்கியது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 28.11.2019 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் தைலாபிஷேக விழா துவங்கியது. இவ்வைபவம் வருகிற 14.12.2019 சனிக்கிழமை வரை தினமும் காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளது.

இதில் கோ பூஜை, மங்கள இசை, கணபதி பூஜை, வேதபாரயணங்கள் நடைபெற்று மஹா தன்வந்திரி ஹோமத்துடன் தைலாபிஷேக விழா துவங்கியது. மேலும் இவ்விழாவில் எராளமான பக்தர்கள் பங்கேற்று ஆயுள் தோஷம் நீங்கவும், மனத்தடைகள் விலகவும், மன நோய்கள் அகலவும், நவகிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் கஷ்டங்கள் குறைவும், ஏழரைசனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும், சர்க்கரை நோய், புற்று நோய், வலிப்பு நோய், மூட்டு வலி, வாய் புண், வயிற்று புண், குடல் சம்மந்தமான நோய்கள், ஆரோக்ய சம்மந்தமான நோய்கள் போன்ற பல்வேறு நோய்கள் நீங்குவதற்கு கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்.
இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி தைலபிரசாதம் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






Tuesday, November 26, 2019

Panchamukha Varahi Homam


வளமான வாழ்க்கை வேண்டிவளர்பிறை பஞ்சமியில்பஞ்சமுக வராஹி ஹோமம்.


இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வளர்பிறை பஞ்சமி திதியை  முன்னிட்டு வருகிற 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வளமான வாழ்க்கை வேண்டியும், வெற்றிகளை பெற வேண்டியும், விபத்துக்கள் குறைய வேண்டியும் ஸ்ரீ வராஹி ஹோமமும், ஸ்ரீ பால திரிபுரசுந்தரி ஆலயத்தில் நவாவரண பூஜையும் நடைபெற உள்ளது.

வடக்கு திசைக்கு உரியவளான வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும் என்பர். தண்டநாத பீடமாக திகழும் திருச்சி திருவானைக்காவிலில் அம்மை ஜம்புகேஸ்வரி (அகிலாண்டேஸ்வரி அம்மை) வராஹி ஸ்வரூமாக திகழ்ந்து அங்கே நித்திய கன்னியாக குடி கொண்டுள்ளார். கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும். அது தாய்மைக்கும் முந்தய உன்னதமான நிலை. வராஹி என்ற பெயர் கேட்டாலே பலருக்கும் பயம் வரும். சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஒரு அம்பிகை பஞ்சமி தாயாக விளங்கும் வராஹி ஆவாள். பல்வேறு பஞ்சங்களையும், கஷ்டங்களையும் துரத்தி வாழ்வில் வரலாறு படைக்க வைப்பவள் வராஹி ஆவாள்.

வரலாறு படைக்கும் வராஹி :

அன்னை லலிதையால் பண்டாசுர வதத்தின் போது தோற்றுவிக்க அம்பிகையின் சக்தியால் அவள் உடலில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவர்கள் சப்த கன்னிகள். ஆம், எப்படி கந்த கடவுள் சிவபெருமானிடம் இருந்து தோன்றினாரோ அது போன்று அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் ப்ராஹ்மி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் வராஹி.

வராஹி அமைப்பு :

வராஹி மனித உடலும், வராஹ (பன்றி) முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலும், ஆதரவிலும் மழைக்கு நிகரானவள் இவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர (காட்டு பன்றிகள் இழுக்கும்) ரதமாகும்.

வராஹியின் பல்வேறு நாமங்கள் :

சேனநாதா, தண்டநாதா, வராஹி, பஞ்சமி, கைவல்யரூபி, வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி (நீதி தேவதை - ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி(வடிவம்), பலிதேவதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, மகாசேனா, அரிக்னீ, முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரீயாகும்.

அஷ்ட வராஹிகள் :

ஸ்வப்ன வராஹி, அஷ்வாரூட வராஹி, ஆதி வராஹி, லகு வராஹி, உன்மத்த வராஹி, லகு வராஹி, மஹிஷாரூட வராஹி, சிம்ஹாரூட வராஹி என  அஷ்ட வராஹிகளாக அழைக்கப்படுகின்றனர்.

வராஹிக்கு உகந்த நிறங்கள் :

பல வண்ண உடைகள் அணிபவள் (ஒவ்வொரு வராஹியும் நீலம், சிவப்பு, மஞ்சள் உடையாகும்).

வராஹி ஆயுதங்கள் :

கலப்பை, தண்டம்.

வராஹி அமைந்துள்ள முக்கிய இடங்கள் :

நெல்லை, தஞ்சை, திருவானைக்காவல், காசி எனலாம்.

வராஹி ஹோமத்தின் மூலம் ஏற்படும் எண்ணற்ற பலன்கள் :

குண்டலினி சக்தியை அளித்து நம்முடைய வாழ்வாதாரத்தை உயர்த்துபவள்.

அன்னையின் சூட்சம வடிவத்தின் ரகசியம் முப்பிறவி கர்ம்மாக்களை அழித்து  நம்மை காப்பவள். நாம் எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற செய்பவள். வாக்கு பலிதம் ஏற்படும், எதிரிகள் ஓடி ஒளிவார்கள், விரோதிகள் நண்பர்களாவர்,  செய்வினை மாந்திரிக தோஷங்கள் அகலும், துர்தேவதைகள் அண்டாது. வாழ்வில் வெற்றி அனைத்தும் கிடைக்கும். நல்லெண்ணங்களும், நன்னடத்தையையும் கொண்டவர்களுக்கு அகிலம் அனைத்தையும் காக்கும் பராசக்தி தேவி அனைத்தையும் வழங்கி நல்லருள்புரிகிறாள். தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியும். மேலும் எதிரிகளால் செய்யப்படுகின்ற செய்வினை, மாந்திரீகம் ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளின் பாதிப்புகளிலிருந்து விடுதலை கிடைக்கும். வாராகி அம்மனின் பூரணமான கடாட்சம் உங்களுக்கு கிடைக்கச் செய்யும். நெடுநாள் நோய்கள் குணமாக தொடங்கும். தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை போன்ற குணங்கள் உண்டாகும். எதிர்பாரா விபத்துக்கள், ஆபத்துகள் ஏற்படாமல் காக்கும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த வைபவங்களில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Amavasai Soolini Durga Homam - Lakshmi Kubera Homam


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
அமாவாசை சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் அமாவாசையை முன்னிட்டு இன்று 26.11.2019 செவ்வாய்கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சூலினி துர்கா ஹோமத்துடன் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதில் உறவு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவும், தீய விளைவுகள் நீங்கவும், ராகு தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறவும், மன அழுத்தம், பதட்டம்‌ குறையவும், அனைத்து செயல்களிலும் நம்பிக்கை கிடைக்கவும், குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கவும் கூட்டுப்பிராத்தனை நடைபெற்றது.

மேலும் இந்த யாகத்தில் நெய், தேன், மூலிகைகள், மஞ்சள், குங்குமம், பூசணிக்காய், மிளகாய் வற்றல், மிளகு, நிவேதன பொருட்கள், வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று மாலை லக்ஷ்மி குபேர யாகமும் நடைபெற்றது. மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






Monday, November 25, 2019

Swathi Homam - Lakshmi Narasimhar Thirumanjanam


வாலாஜாபேட்டை ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தில்ஸ்வாதி ஹோமமும் சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி இன்று 25.11.2019 திங்கள்கிழமை ஸ்வாதி நக்ஷத்திரத்தை முன்னிட்டு ஸ்வாதி ஹோமம் என்கிற ருண விமோசன ஹோமத்துடன் சிறப்பு திருமஞ்சனம் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற்றது.

இதில் உலக மக்களின் பொருளாதார தடைகள் நீங்கவும், கடன் பிரச்னை அகலவும், வியாபாரம், தொழில்களில் ஏற்படும் பணப்பிரச்னைகள் விலகவும், வாழ்வில் ஏற்படும் அனைத்துவிதமான தடைகள் விலகி ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெறவும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்த யாகத்தில் நெய், தேன், நெல்பொரி, மூலிகைகள், நவ சமித்துகள், நிவேதன பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற பஞ்ச திரவியங்காளால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பூஜை பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.








Sunday, November 24, 2019

Swathi Homam - Lakshmi Narasimha Homam

வாலாஜாபேட்டை
ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தில் சுவாதி நட்சத்திரத்தில் ருண ரோக நிவர்த்தி ஹோமம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற 25.11.2019 திங்கள்கிழமை ஸ்வாதி நக்ஷத்திரத்தை முன்னிட்டு ஸ்வாதி ஹோமம் என்கிற ருண விமோசன ஹோமம் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற உள்ளது.

ஒருவருக்கு ஏற்படும் கடன்கள் தீரவும் ரோகம் என்கிற நோய்கள் அகலவும் சத்ரு என்கிற எதிரிகள் தொல்லைகள் விலகவும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஹோமம், வழிபாடு மிகவும் பலன் தரும். இதை மனதில் கொண்டு தன்வந்திரி பீடத்தில் சுவாதி நட்சத்திரத்தில் ருண விமோசன ஹோமமும், ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்மருக்கு விசேஷ திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.

எம்பெருமான் ஸ்ரீ மஹாவிஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் அவதார மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவரின் திருநட்சத்திரம் சுவாதியாகும். வேதத்திலும், ஜோதிட சாஸ்திரத்திலும் சுவாதி நட்சத்திரம் மிகவும் உயர்வாகக் கூறப்படுகிறது. கடலில் சிற்பிக்குள் முத்து தோன்றுவதும் இந்த நட்சத்திரத்தில் தான் என்று கூறுவர்.

பெரிய பெரிய மகான்களுடனும், ஆசார்யர்களுடனும் தொடர்புடையது இந்த நட்சத்திரம். "வானில் ஸ்வாதி நட்சத்திரம் முன்னேறுவதைப்போல் நான் செல்வேன்' என்று அனுமன் கூறுவதாக வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

சப்தரிஷி மண்டலத்தின் தென்கிழக்கில் ஓர் அபூர்வ நட்சத்திரத் தொகுதி உள்ளது. அதில் அதிபிரகாசமாகத் தெரியும் சுவாதி இருளை தன் ஒளிக்கரணங்களால் அகற்றிவிடும் தன்மை படைத்தது. அராபியர்கள் இதை "சுவர்க்கத்தின் காவலன்' என வர்ணிக்கின்றனர். இவ்வாறெல்லாம் புகழுக்கும் பெருமைக்கும் உரித்தான சுவாதி நட்சத்திரம் கூடிய தினத்தில் செய்யப்படுவது ஸ்வாதி ஹோமம்.

ஸ்ரீ நரசிம்மசுவாமியை பிரார்த்தித்து செய்யப்படுவது மிகவும் சக்தி வாய்ந்தது ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் என்கிற ஸ்வாதி ஹோமமாகும். இந்த ஹோமத்தின் பலனாக எல்லாவிதமான துன்பங்களும், துயரங்களும், சோதனைகளும் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்வாதி ஹோமம் அருளாலகிரி என்கிற சோளிங்கபுரத்திற்கும் ஹஸ்தகிரி என்கின்ற காஞ்சிபுரத்திற்கும் நடுவில் ஔஷதகிரியாக வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்வாதி நக்ஷத்திரத்தில் அவதரித்த ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 25.11.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறுகிறது.

ஸ்வாதி ஹோமத்தின் சிறப்பும் பலன்களும் :

ருண-ரோக-சத்ரு விமோசன, (கடன்-நோய்-சத்ரு தோஷ நிவர்த்திக்கு) ஸ்வாதி ஹோமம் என்கிற ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஹோமமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. உலக மக்களின் பொருளாதார தடைகள் நீங்கவும், கடன் பிரச்னை அகலவும், வியாபாரம், தொழில்களில் ஏற்படும் பணப்பிரச்னைகள் விலகவும், வாழ்வில் ஏற்படும் அனைத்துவிதமான தடைகள் விலகி ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெறவும் , (கடன்-நோய்-சத்ரு தோஷ நிவர்த்திக்கு) நடைபெற உள்ளது. ருணம் என்றால் கடன் என்று பொருள். கடன் என்றால் காசு மட்டும் கடன் என்று நினைக்காதீர்கள். அதாவது நாம் பூமியில் பிறக்கின்றபோதே மூன்று கடனுடன்தான் பிறக்கிறோம்.

1. ரிஷி கடன் திருமணம் ஆகும் வரை, பிரும்மச்சர்ய விரதத்தை கடை பிடிக்க வேண்டும். அப்போது இவரது கடனை நாம் தீர்த்துவிட்டோம் என்று பொருள். இதை கடை பிடிக்கவில்லை என்றால் இவரது கடன் தீராது. ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்று வலியுறுத்துகிறது.

2. தேவ கடன் அதாவது பிறந்த அனைத்து மனிதர்களும் தனது வாழ்க்கையில் வாழ்நாளில் ஹோமம், யாகம் வருடா வருடம் செய்யவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அதுவே தேவ கடன் என்பதாகும்.

3. பித்ரு கடன் தெவசம் திதி, ஸ்ரார்தம் இவைகளை முறையாக சரியாக வருடாவருடம் செய்து வந்தால் பித்ருக்கள் ஆசிகளுடன் நமது பணக்கஷ்டம் தீரும். இல்லை என்றால் நமது பணக்கஷ்டம் தீராது.

இதுபோன்ற கடன்கள் தீரவும் ரோகம் என்கிற நோய்கள் அகலவும் சத்ரு என்கிற எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விலகவும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஹோமம், வழிபாடு மிகவும் பலன் தரும். மேலும் கூர்ம அவதாரத்துடன் உள்ள லக்ஷ்மி நரசிம்மரை தரிசித்து பக்தர்களுக்கு ஏற்படும் கோபங்கள் நீங்கி மஹாலக்ஷ்மியின் அருளுடன் நோயின்றி நலமுடன் வாழ பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான கடன்களும் நீங்கி மகிழ்ச்சி பெறலாம் என்கிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203