Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, January 31, 2019

Ekadasi Maha Danvantri Homam

தன்வந்திரி பீடத்தில்

ஏகாதசி ஹோமமும்சிறப்பு நெல்லிக்காய் பொடி திருமஞ்சனமும்நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதியக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன், உலக மக்கள் நலன் கருதி தை ஏகாதசியை முன்னிட்டு இன்று 31.01.2019 வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் சிறப்பு நெல்லிக்காய் பொடி திருமஞ்சனம் நடைபெற்றது.

இந்த மஹா தன்வந்திரி ஹோமத்திலும் சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்பவர்கள் உலக மக்களுக்கு நல்லதூக்கம் கிடைக்கவும், துன்பங்கள் துயரங்கள் நீங்கவும், உடல் நோய் மன நோய் நீங்கவும், வலிகளில் இருந்து நிவாரணம் பெறவும், ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெருவதிற்கு உண்டான தடைகள் நீங்கவும், சகல சம்பத்துடன் நோய் நொடிகளின்றி வாழவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் டாக்டர். R. பிரதாப் குமார் அவர்கள் மற்றும் ஏராளமானவர் பங்கேற்று சிறப்பித்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு “யக்ஞஸ்ரீ” முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





Wednesday, January 30, 2019

Ekadasi Homam - Amla Powder Thirumanjanam


தன்வந்திரி பீடத்தில்
ஏகாதசி ஹோமமும்
சிறப்பு நெல்லிக்காய் பொடி திருமஞ்சனமும்.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன், உலக மக்கள் நலன் கருதி தை ஏகாதசியை முன்னிட்டு வருகிற 31.01.2019 வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் சிறப்பு நெல்லிக்காய் பொடி திருமஞ்சனம் நடைபெறுகிறது.

ஏகாதசி என்பது பெருமாளுக்கு உகந்த அற்புதமான விரத நாளாகும். தை மாத ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளின் நடைபெறும் ஹோமங்களிலும், பூஜைகளிலும் பங்கேற்று பெருமாளை வழிபடுவதின் மூலம் சகல சம்பத்துகளுடன் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். அந்த வகையில், வருகிற 31.01.2019 வியாழக்கிழமை வரும் தை மாத ஏகாதசி, சர்வ ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த விசேஷ நாளில் தன்வந்திரி பீடத்தில்  நடைபெறும் மஹா தன்வந்திரி ஹோமத்திலும் சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்பவர்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைத்து, துன்பங்கள் துயரங்கள் நீங்கி, உடல் நோய் மன நோய் நீங்கி, வலிகளில் இருந்து நிவாரணம் பெற்று, ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெருவதிற்கு உண்டான தடைகள் நீங்கி, சகல சம்பத்துடன் நோய் நொடிகளின்றி வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், வாசனாதி திரவியங்கள், பசுநெய், வெல்லம், சுக்கு, மிளகு, திப்பிலி, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள், கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Tuesday, January 29, 2019

Mahameru Yagam


Mahameru Yagam

With the blessings of our Guruji, “Yagnasri Kayilai Gnanaguru” Dr. Muralidhara Swamigal, we are conducting Mahameru Yagam on 30.01.2019 Wednesday by 10.00 AM at our Sri Danvantri Arogya Peedam, Walajapet.

Mahameru Yagam Benefits :

The Mahameru is the source of the cosmos, it creates and nourishes the entire cosmos and is a powerhouse of intelligence that maintains the world. The goddesses that reside in the Sri Meru emit powerful radiations with Goddess Lalitha in the centre. They absorb her power for blessing humanity at large. The Mahameru is very attractive and its wholesomeness and divine nature can be found in its geometry and symmetry.

 According to Vedic scriptures such as Shakti Upanishads, the Brahmananda Purana or Sri Chakra Yoga Samhita, the mere sighting of this grand yantra washes off all sins and grants auspiciousness to the individual. The one who participate in this yagam, attracts all good fortunes and when it’s worshipped with utmost devotion the Mahameru fulfills all desires besides experiencing bliss and ecstasy. The Mahameru grants blessings of Ashta Siddhis. One can be assured that they possess a symbol to overcome evil, to create unlimited wealth, health, good karma and happiness.

For more details :
Sri Danvantri Arogya Peedam,
Kilpudupet, Walajapet – 632513, Vellore Dt,
Ph: 04172 230033, 9443330203

Monday, January 28, 2019

Bharatha Matha Homam - Vastu Homam

Bharatha Matha Homam - Vastu Homam

conducted at Sri Danvantri Arogya Peedam, Walajapet.

Thanks to

"DINAMANI, MAALAI MALAR, SAKSHI,

ANDHRA JYOTHI" Daily News Papers.





Saturday, January 26, 2019

Republic Day 2019 - Vastu Homam


தன்வந்திரி பீடத்தில்குடியரசு தின விழா, வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து ஹோமம்,
ஆரோக்யம் தரும் ஆறு ஹோமங்கள் நடைபெற்றது.


வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் குடியரசு தினம், வாஸ்து நாளை முன்னிட்டு இன்று 26.01.2019 சனிக்கிழமை பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள  பாரதமாதாவிற்கும், வாஸ்து பகவானுக்கும் அபிஷேகத்துடன் சிறப்பு ஹோமங்களும், ஆரோக்யம் தரும் ஆறு ஹோமங்களும் நடைபெற்றது.  தேசியக்கொடி ஏற்றப்பட்டு நலதிட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

இந்த உலகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் எந்த விதமான பேதமும் இல்லாமல் சமத்துவம் நிறைந்த ஒரு பீடமாக விளங்கி வருகிறது வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.

ஜாதி, மத பேதம் பார்க்காமல் சகல மதத்தவர்களும் ஆரோக்யம் வேண்டி இங்கு வந்து பிணி தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானைத் தரிசித்துத் தங்களது பிரார்த்தனைகளை அவர் முன் வைக்கிறார்கள். அது மட்டுமல்ல. அவர்களது பிரார்த்தனைகள் பலித்து அதற்குண்டான பலனையும் பெற்று சிறப்பாக இருப்பதாக ஸ்வாமிகளிடம் தெரிவித்து வருகிறார்கள்.

இன்று வாஸ்து நாளை முன்னிட்டு பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள வாஸ்து பகவானுக்கு வாஸ்து தோஷங்கள் அகல வாஸ்து சாந்தி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றது.

மேற்கண்ட வைபவங்களில் சென்னை திரு. R. குணசேகரன், சென்னை திரு. A. தயாளன், சென்னை திரு. K. ஸ்ரீனிவாச பிரசாத், சென்னை திரு. J. ஜானகிராமன், சென்னை திரு. R. பிரகாஷ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்குயக்ஞஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் அருளாசிகள் வழங்கி சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.














Thursday, January 24, 2019

Annapoorani Homam


Annapoorani Homam


With the blessings of our Guruji “Yagnasri Kayilai Gnanaguru” Dr. Muralidhara Swamigal, we are conducting Annapoorani Homam with Koti Japa Maha Kalabhairavar Yagam on 25.01.2019 Friday by 10.00 at our Sri Danvantri Arogya Peedam, Walajapet.

Mata Annapoorani is an incarnation of Goddess Parvathi. Matha Annapoorani is the divine mother and all the living things are her children, whom she feeds, so that they are sustained and nourished. She not only provides nourishment to the physical body, but also to the soul in the form of enlightenment and gives the energy to attain knowledge and wisdom.

The blessings of Mata Annapoorani fulfill the material needs along with the spiritual requirements of the devotees. There will never ever be any shortage of food or other essentials in their homes. Her grace can also bestow health, wealth and prosperity, while married women can hope for the long life of their husbands and a happy married life. She is represented as beyond Maya (illusion) and is the supreme goddess of the whole universe. She eradicates fear and bestows protection and welfare.

For more details :
Sri Danvantri Arogya Peedam,
Kilpudupet, Walajapet – 632513, Vellore Dt,
Ph: 04172 230033, 9443330203


Monday, January 21, 2019

Thaipoosam 2019


தன்வந்திரி பீடத்தில்
தைப்பூசம் மற்றும் வள்ளலார் ஜோதி தினத்தை முன்னிட்டுசிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.


வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன், தைப்பூசம் மற்றும் வள்ளலார் ஜோதி தினத்தை முன்னிட்டு இன்று 21.01.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்றது.

அருளாளர் ராமலிங்க அடிகளார் (வள்ளலார்) வடலூரில் சன்மார்க்க சங்கம், சத்திய தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் போன்ற அமைப்புகளை நிறுவி பசிப்பிணி போக்கி, பக்தி நெறியைப் பரப்பி வந்தவர். இவர் 1876-ம் ஆண்டு தைப்பூச நன்னாளில் இறைவனுடன் கலந்தார். வள்ளலாருக்கென்று தன்வந்திரி பீடத்தில் தனி சன்னதி அமைத்து பூஜைகளும், ஹோமங்களும் செய்து வருகிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். அந்த வகையில் உலக மக்களின் நலன் கருதி இன்று 21.01.2019 திங்கள்கிழமை வள்ளலார் ஜோதியில் கலந்த நன்னாளை முன்னிட்டு பீடத்தில் அமைந்துள்ள வள்ளலாருக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஹோமும் கஞ்சி வழங்கும் விழாவும் நடைபெற்றது.

மேலும் தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள கார்த்திகை குமரனுக்கும் சிறப்பு அபிஷேகமும், ஹோமமும், பூஜைகளும் நடைபெற்றது. இந்நிகழ்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.










Friday, January 18, 2019

Thaipoosam 2019


தன்வந்திரி பீடத்தில்

தைப்பூச திருவிழா.

வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன், தைப்பூசத்தை முன்னிட்டு வருகிற 21.01.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

அருளாளர் ராமலிங்க அடிகளார் (வள்ளலார்) வடலூரில் சன்மார்க்க சங்கம், சத்திய தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் போன்ற அமைப்புகளை நிறுவி பசிப்பிணி போக்கி, பக்தி நெறியைப் பரப்பி வந்தவர். இவர் 1876-ம் ஆண்டு தைப்பூச நன்னாளில் இறைவனுடன் கலந்தார். ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் வடலூரில் ஏழு திரைகள் விலகி ஜோதி தரிசனம் நிகழும். ஒவ்வொரு திரைக்கும் ஒவ்வொரு சக்தி என்பது நம்பிக்கை. (கண்ணாடிக் கதவுகளில்) கறுப்புத்திரை என்பது மாயா சக்தி, நீலத்திரை - கிரியாசக்தி, பச்சைத் திரை - பராசக்தி, சிவப்புத் திரை - இச்சா சக்தி, பொன்வண்ணத் திரை - ஞானசக்தி, வெண்மைத் திரை - ஆதிசக்தி, கலப்புத்திரை - சிற்சக்தி!

அருட்பெருஞ்சோதியாகிய இறைவனை அன்று தரிசிக்கிறோம் என்பது கருத்து. தைப்பூச நாளில் விடியற்காலையில் மேற்கே சந்திரனும் கிழக்கே சூரியனும் காணப்பெறும். அந்த நேரத்தில்தான் ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதியைக் காட்டியருளினார் அடிகள்!

இத்தனை அற்புதங்கள் நிறைந்த வள்ளலாருக்கென்று தன்வந்திரி பீடத்தில் தனி சன்னதி அமைத்து பூஜைகளும், ஹோமங்களும் செய்து வருகிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். அந்த வகையில் உலக மக்களின் நலன் கருதி வருகிற 21.01.2019 திங்கள்கிழமை தைப்பூச நன்னாளை முன்னிட்டும், வள்ளலார் ஜோதியில் கலந்த நன்னாளை முன்னிட்டும் பீடத்தில் அமைந்துள்ள வள்ளலாருக்கு சிறப்பு பூஜையும், வள்ளலார் ஹோமமும் நடைபெற உள்ளது.

வள்ளலார் கொள்கைகளான ஜீவ காருண்யம், மன அமைதி, மனித நேயம், அன்னதானம், மது, மாமிசம் உண்ணாமலிருப்பது, ஜாதி, இனம், சமுதாய வேறுபாடின்றி நடப்பது, எக்காரியத்திலும் பொதுநோக்கத்தோடு இருப்பது போன்ற கொள்கைகளை நாமும் பின்பற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலார், முருகர், துர்கை போன்றவர்களுக்கு சிறப்பு பூஜைகளும், ஹோமங்களும் நடைபெறுகிறது.

இந்த ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கப்பெற்று அனைவரிடத்தும் அன்பு செலுத்தும் எண்ணமும் மேலோங்கும். இதனால் வாழ்வில் சகலமும் பெற்று வளமுடன் வாழ வழிவகைச் செய்யும். ஆகவே பக்தர்கள் அனைவரும் வள்ளலார் ஹோமத்திலும், தொடர்ந்து நடைபெறும் சிறப்பு அன்னதானத்திலும் கலந்து கொண்டு பயன்பெற வேணுமாய் பிரார்த்திக்கின்றோம்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Duraga Homam


வாலாஜா தன்வந்திரி பீடத்தில்

ஆயிரம் மஞ்சள் கொண்டு

அம்பாளுக்கு மஹா யாகம்

நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் இன்று 18.01.2019 தை மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் மஹிஷாசுர மர்த்தினியையும், ப்ரத்யங்கிரா தேவியையும் வழிபடும் விதமாக 1000 மஞ்சள் கிழங்கு கொண்டு மாபெரும் துர்கா யாகம் நடைபெற்றது.

மகாசக்தியின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டியும் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெற வேண்டியும், சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வவளம் கிடைத்து குலம் தழைக்க வேண்டியும் சகல தோஷங்களையும், கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கும் விதத்திலும், குடும்பத்தில் மங்கல காரியங்கள் விரைவில் நடைபெறவும் அன்னை பராசக்தியை வேண்டி மேற்கண்ட யாகம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்தாபகர் “ய்கஞஸ்ரீ முரளிதர் ஸ்வாமிகள் நல்லாசி வழங்கி, பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



Wednesday, January 16, 2019

Danvantri Homam


Danvantri Homam

With the blessings of our guruji, “Yagnasri Kayilai Gnanaguru” Dr. Muralidhara Swamigal, we are conducting Danvantri Homam with Koti Japa Kala Bhairavar Yagam on Thursday 17.01.2019 by 10.00 AM at our Sri Danvantri Arogya Peedam, Walajapet.

Sri Danvantri Perumal is considered to be the God of Medicine and Health. Danvantri Homam is dedicated to the Lord Danvantri, who is believed to be the incarnation of Lord Vishnu. Danvantri Homam is very beneficial one among any other homam since it is accepted to be the best solution for getting relief from any sorts of severe health problems to lead a long and healthy life.

Danvantri Homam is done to pray and get blessing from Lord Danvantri Perumal, the divine doctor. Performing this homam is a powerful solution for any kind of incurable disease. This homam is highly recommended for those people who are having frequent health issues and severe incurable medical problem. It is also recommended that performing Danvantri Homam at least once in a year to resolve all health related issues, frequent medical problems and to avoid health problems in future to live a long healthy life. Danvantri Homam is usually done by chanting moola mantra of Lord Danvantri.

Benefits of Danvantri Homam:

The Main advantage of performing Danvantri Homam is to get relief from any sorts of Incurable Diseases. Performing this homam once in a year helps an individual to have long and healthy life. This homam acts as a remedy or solution for Health problems.

For more details, contact:
Sri Danvantri Arogya Peedam,
Kilpudupet, Walajapet – 632513, Vellore Dt,
Ph: 04172 230033, 9443330203