ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 116 நாட்கள்
ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப மஹா யாகம் தொடங்கியது.
மக்கள் பிணி தீர்க்கும் மருத்துவமனையாகத் திகழும் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் குடும்ப க்ஷேமம் கருதியும், உடல் நலம் கருதியும், கொரோனா போன்ற கொடிய நோய்களின் அச்சுறுத்தல் இல்லாமல் இருக்கவும் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி ஆனி 16 (30.06.2022) வியாழக்கிழமை முதல் வருகிற ஐப்பசி 4 (21.10.2022) வெள்ளிக்கிழமை வரை கோடி ஜப தன்வந்திரி மஹா யாகம் ஆடி அமாவாசை, ஆஷாட நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி சனிக்கிழமை, சாரதா நவராத்திரி, ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 62 வது ஜெயந்தி மற்றும் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தியை முன்னிட்டு 116 நாட்கள் யாகத் திருவிழாவாக நடைபெறவுள்ளது.
இதன் முதல் நாளாக நேற்று 30.06.2022 வியாழக்கிழமை காலை கோ பூஜை, ஆரம்ப கால யாகசாலை பூஜை, மஹா கணபதி ஹோமம் மற்றும் விநாயகர் தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம் ராஜ குபேர ஆலய பீடாதிபதி, அம்பத்தூர் திரு.ராமசாமி-சசிகலா குடும்பத்தினர், தொழிலதிபர் திரு.சரவணன் ஆற்காடு, ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. மூர்த்தி அவர்கள் மற்றும் டாக்டர். ரங்கராஜன், சென்னை, மற்றும் திரு. சீனிவாசன், பாண்டிச்சேரி ஆகியோர் யாகத்தில் பங்குபெற்றனர். மேலும் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற யாகத்தில் ஆஸ்திரேலியா நாட்டில் பணிபுரியும் மருத்துவர் திரு. டாக்டர். அழகர் சாமி குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு சுவாமிகளிடம் ஆசி பெற்று சென்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.