Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, July 28, 2018

Thiruvona Homam - Thailabishekam...


ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்திருவோண ஹோமத்துடன் தைலாபிஷேகம்

ஒரே கல்லால் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகருக்கும்
பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவானுக்கும் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அன்ந்தலைமதுரா கீழ்புதுபேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் முகப்பை நோக்கி நடந்து வந்தால் , பீடத்தின் முன் நமக்கு காட்சி தருவது ஒரே கல்லால் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகரும், பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவானும். இவர்கள் இருவரும் ஏக தரிசனத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர். வினை தீர்க்கும் விநாயகர் சங்கு சக்கரத்துடன் தும்பிக்கையில் அம்ருத கலசத்துடன் வைஷ்ணவ சம்பிரதாயப்படி திருமண் காப்பு தரித்து சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கின்றார்.

தைலக்காப்பு திருமஞ்சனம் :

வினைகளுக்கு ராஜாவான விநாயகரும் பிணிகளுக்கு ராஜாவான தன்வந்திரி பகவானும் ராஜா அம்சமாக சிம்மாசனத்தில் வீற்றிருந்து அண்டி வருவோரின் உள்ளத்துப் பிணி, உடல் பிணி மற்றும் தீவினைகளையும் தீர்த்து அருள்பாலிக்கின்றனர். இந்தச் சந்நிதியில் கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிர்வாதத்துடன் மாதாந்திர திருவோண நக்ஷத்திரத்தில் கர்ம வினைகள் நீங்க பக்தர்கள் தங்கள் கைகளாலேயே தைலக்காப்பு திருமஞ்சனம் செய்து சிறப்பாகும்.

விநாயக தன்வந்திரிக்கு இன்று 28.07.2018 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை திருவோண நக்ஷத்திரத்தை முன்னிட்டு, திருவோண ஹோமமும், நல்லெண்ணையை கொண்டு தைல திருமஞ்சனமும் நடைபெற்றது.

திருவோண நக்ஷத்திரத்தில் ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு அபிஷேகம் செய்த தைல பிரசாதத்தை உபயோகப்படுத்தி வந்தால் உடலில் ஏற்படும் வலிப்பு நோய், சொறி, சிரங்கு ஆகிய தோல் வியாதி, சர்க்கரை நோய், புற்று நோய், குறை பிரசவம் போன்ற கொடிய ஆட்கொல்லி நோய்கள், இதர வியாதிகளும் நீங்கும் என்கிறார் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

திருவோண ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள். சந்திர தோஷம் இருந்தால் விலகிவிடும். சந்திரனின் அருள்பெற்று அவரால் உண்டாகும் தோஷங்கள் விலகி, இனிமையான வாழ்வு கிட்டும், வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும். மேலும் கிரகண சாந்தியாக ஈஸ்வர ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், ப்ரத்யங்கிரா யாகம் மற்றும் சூரிய ஹோமங்கள், கோடி ஜப தன்வந்திரி ஹோமத்துடன் நடைபெற்று அந்தந்த தேவதைகளுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. இந்த பூஜையிலும் ஹோமத்திலும் ஜைன மடாலயம், திருமலை ஸ்வஸ்திஸ்ரீ தவளகீர்த்தி ஸ்வானிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.














No comments:

Post a Comment