Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203
Showing posts with label amavasi. Show all posts
Showing posts with label amavasi. Show all posts

Friday, June 8, 2018

Aadi Amavasai Sri Atharvana Bhadrakali Pratyangira Yagam…..


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
33 திரவியங்கள் கொண்டு 33 கார்ய சித்திக்காக
 வருகிற 11.08.2018 சனிக் கிழமை காலை 11.00 மணியளவில்
ஆடி அமாவாசையில் சகல கார்ய சித்தி தரும்
ஸ்ரீ அதர்வண பத்ரகாளி ப்ரத்யங்கிரா தேவி மஹாயாகம் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி உலக நலன் கருதியும், சகல கார்ய சித்தி பெறவும், வருகிற 11.08.2018 சனிக் கிழமை காலை 11.00 மணியளவில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ அதர்வண பத்ரகாளி ப்ரத்யங்கிரா தேவி மஹாயாகம், பாலபத்ரா தாந்த்ரீக வித்யா பீடம் ஸ்தாபகர் சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹா காளி காலபைரவன் பாலா திரிபுர சுந்தரி உபாசகர் சிவஸ்ரீ விக்னேஸ்வர சர்மா அவர்களால் நடைபெற உள்ளது.
தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார். அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்த அன்னையானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள். இத்தேவியின் அருள் பெற கீழ்கண்ட 33 விதமான திரவியங்களை கொண்டு 33 விதமான கார்யங்களில் சித்தி பெற ஸ்ரீ அதர்வண பத்ரகாளி ப்ரத்யங்கிரா தேவி யாகம் 11.08.2018 ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் பயன்பெற தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது.

பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும்.

தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். மேற்கண்ட மஹா யாகம் சகல கார்ய சித்தி பெறவும், ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் நடைபெறுகிறது. இந்த மஹா யாகத்தில் பங்கேற்பதின் மூலம் சாபங்கள் பலிகள் தடைகள் ஆகியவை நீங்கி. செல்வம் சுகாதாரம் இன்பம் ஆகியவை கிடைக்கும். மேலும் 1.நினைத்த காரியம் ஜெயமாக விளாம்பழமும், 2. சகலகார்ய சித்தி தரும் - கொப்பரைத் தேங்காயும், 3. சர்வ வஸ்யம் நல்கும் – இலுப்பைப்பூவும், 4. சர்வ ரோக நிவர்த்திக்குபாக்குப்பழமும், 5. வாக்குப் பலிதம் பெற – மாதுளம்பழம், 6. திருஷ்டிதோஷ நிவர்த்திக்கு – நாரத்தம்பழமும், 7. எதிலும் வெற்றி பெற / சத்ருநாசினிக்குபூசணிக்காயும், 8. நேத்ர ரோக நிவர்த்திக்கு - கரும்புத் துண்டும், 9. சகல சம்பத்து அபிவிருத்திக்கு - துரிஞ்சி நாரத்தையும், 10. கவலை தீர எலுமிச்சம்பழமும், 11. பயம் நீக்கும் - நெல் பொரியும், 12. ஞானம் தரும்சந்தனமும், 13. வசீகரணம் தரும் – மஞ்சள், 14. ஆயுள் விருத்திக்குபசும்பாலும், 15. புத்ர விருத்திக்குபசுந்தயிரும், 16. வித்தை, சங்கீத விருத்திக்குதேனும், 17. தனலாபத்திற்குநெய்யும், 18. பதவி உயர்வுக்குதேங்காயும், 19. மங்களப் பிராப்திக்கு - பட்டு வஸ்திரமும், 20. சஞ்சலம் நீங்கி சந்தோஷம் பெற – அன்னம் மற்றும் ட்ஷணமும், 21. மன வலிமைக்கு கருங்காலியும், 22.அஷ்ட ஐஸ்வர்யத்திற்கு – நவ சமித்துக்களும். இவற்றுடன் சகல கார்ய சித்திக்கும் ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும், கண் திருஷ்டி தோஷங்கள், திருமணம், தொழில், வியாபாரம், உத்யோகம், தம்பதிகள் ஒற்றுமை, பூமி சம்பந்தமான தோஷங்கள், வழக்கு வியாஜ்யங்கள், போன்றவைகளுக்காகவும் அம்பாள் பரிபூர்ண அருள் பெற 11 கிலோ மஞ்சள், 11 கிலோ சிகப்பு குங்குமம், 11 கிலோ நெருஞ்சிமுள்ளும், 11 கிலோ மிள்காய் வற்றலும், 11 கிலோ நெய்யும், 11 கிலோ சாதமும், 11 பூசணிக்காயும், இதர சௌபாக்ய திரவியங்கள், பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நெத்துக் காய், கிராம்பு, வால் மிளகு, லவங்கம் போன்ற திரவியங்கள் யாகத்தில் சேர்க்கப்பட உள்ளது. ஹோமத்தில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன. இந்த ஹோமத்தில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரமாக புல்லுருவி சர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு இராஜ வசியத்தையும், செந்நாயுருவி ஆண் வசியத்தையும், நில ஊமத்தைப பெண் வசியத்தையும், வெள்ளெருக்கு சத்ரு வசியத்தையும், சீந்தில்கொடி தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல கார்யங்களுக்கும் பயன்படுகிறது. ஹோமத்தீயில் தெய்வங்களை வசியம் செய்து, பால், பழம், தேன், மூலிகை சமித்துகளை ஹோமத்தில் தெய்வத்திற்கு உணவாக கொடுத்து, உரிய மந்திரம் ஜபித்து நம் குறைகளை தேவைகளை தெய்வத்திடம் கூறும் போது தெய்வங்கள் அதனை ஏற்று நமக்கு மகிழ்வுடன் பலனை தருகின்றன என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

.