வாலாஜா ஸ்ரீ தன்வந்த்ரி பீடத்தில்
பிரதோஷத்தை முன்னிட்டு
468, சிவலிங்க ரூபமாக உள்ள சித்தர்களுக்கும்,
ஸ்ரீ மரகதேஸ்வரர் சமேத மரகதாம்பிகை
அம்பாளுக்கும்
பூஜைகள் நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 10.07.2018 செவ்வாய்க்கிழமை மாலை 5.00, மணிக்கு பிரதோஷத்தை
முன்னிட்டு 468, சிவலிங்க ரூபமாக உள்ள
சித்தர்களுக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும்
பிரதோஷ பூஜைகள் நடைபெற்றது.
பிரதோஷ தரிசனம்
பெரும்புண்ணியம். பிரதோஷம் சிவ பூஜைக்கு உகந்தது. வளர்பிறை,
தேய்பிறைகளில் வரும் திரயோதசியில் சந்தியா
வேளையில் அனுசரிக்கப்படும் பிரதோஷ நாளில் சிவாலயங்களுக்குச்
சென்று சிவனாரையும் நந்திதேவரையும் வணங்குவது வளம் சேர்க்கும் அதிலும் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷம் "ருண விமோசன
பிரதோஷம்" என்று அழைக்கப்படுகிறது.
ருணம் என்றால் கடன் ஆகும்.
வாழ்வில் கடன் சுமையில்
மீளமுடியா நிலையில் உழன்று கொண்டிருப்பவர்கள், வருமானத்திற்கு மீறிய கடன் சுமை உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷத்தில் தொடர்ந்து கலந்து கொண்டபடியே முயற்சியை
மேற்கொண்டால் இறைவனும் நம்முடன் கலந்துகொண்டு கடன் தீரும் வகையில் நம்மை வழி நடத்துவார்.
செவ்வாய் திசை
நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள்
செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யவேண்டும். மனிதனுக்கு வரும் ருணம் மற்றும் ரணத்தை நீக்கக்
கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு! இதனால், செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும். பித்ரு தோஷம் விலகும். முன்னோர்
ஆசி கிடைக்கும். கடன் தொல்லை தீரும்.
எந்த ராசி,
நக்ஷத்திரத்தை உடையவரக
இருந்தாலும், ஒரு செவ்வாய்க்கிழமை பிரதோஷ நேரத்திலே பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு வருபவர்களுக்கு ருணமும் ரணமும் நீங்கும் என்பது சத்தியம்!
மேலும் பிரதோஷ
வேளையில் நாம் உச்சரிக்க வேண்டிய பஞ்சாட்சர மந்திரம்.
"#ஓம் #நமசிவாய"
இம்மந்திரத்தின்
மகிமையே தனி. இதனை உச்சரிப்பதனால் நமது முன்னேற்றத்தை தடுக்கும் கர்ம வினைகள்
அகலும். உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும்
பெருகும்.. எதிரிகள் நமது பாதையிலிருந்து விலகுவர் மோட்சத்தை அளிக்க கூடியது இம்மந்திரம். இவ்வளவு நல்ல
பலன்களை அளிக்கும் சிவ பஞ்சாட்சர மந்திரத்தை பிரதோஷ வேளையில் உச்சரித்து சிவனின்
அருளுக்கு பாத்திரமாவோம்..
நந்திதேவர் துதி
கந்தனின் தந்தையைத் தான்
கவனமாய்ச் சுமந்து செல்வாய்..
நந்தனார் வணங்குதற்கு
நடையினில் விலகி நின்றாய்..
அந்தமாய் ஆதியாகி
அகிலத்தைக் காக்க வந்தாய்..
நந்தியே உனைத்துதித்தேன்
நாடி வந்தெம்மைக் காப்பாய்..
ஒன்பது கோள்களுக்கும்
உயரிய பலன் கொடுப்பாய்..
பொன் பொருள் குவிய வைப்பாய்
புகழையும் வளர்த்து வைப்பாய்..
இத்தகைய சிறப்புகள்
வாய்ந்த செவ்வாய்கிழமை பிரதோஷம் ஸ்ரீ தன்வந்த்ரி ஆரோக்கிய பீடத்தில்
சிறப்பாக நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment