Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, August 25, 2017

VInayaga Chathurthi 25.08..2017

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
மஹாகணபதி ஹோமத்துடன்
23  இலைகளைக் கொண்டு சிறப்பு அர்ச்சனை.


சமீபத்தில் 1,32 ஆயிரம் மோதகங்களை கொண்டு வாஞ்சாகல்ப லதா கணபதி ஹோமமும், 108 யாக குண்டங்கள் அமைத்து 108 சிவாச்சரியர்கள் பங்கேற்ற 108 கணபதி ஹோமங்கள்  நடைப்பெற்ற வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விநாயகர் சதூர்த்தி விழா இன்று 25.08.2017 வெள்ளிக்கிழமை, ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி காலை 6.00 மணிக்கு கோ பூஜை, 6.30 மணிக்கு வேத பாராயணம், 7.00 மணிக்கு தன்வந்திரி பீடத்தில் உள்ள லக்ஷ்மிகணபதி, வல்லபகணபதிக்கு அபிஷேக ஆராதனயும், 10 அடி உயரமுள்ள பாஹுபலி விநாயகர்க்கு சிறப்பு அலங்காரத்துடன் ஆராதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து காலை 10.00 மணீயளவில் பத்துக்குமேற்பட்ட வேத பண்டிதர்கள் பங்கேற்று மஹா கணபதி ஹோமத்துடன் தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.மேலும் உலக மக்களின் கர்ம வினைகள் நீங்கவும் ஊழ்வினைகள் அகலவும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறவும் 14 ஆண்டுகளுக்கு முன்பு  தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் 4 அடி உயரத்தில் சிம்ம பீடத்தில் ஓரே கல்லில் ஓரு புறம் வினைதீர்க்கும் விநாயகர், மறுபுறம் பீணிதீர்க்கும் தன்வந்தரியுடன் அமைந்துள்ள சிலைக்கு மஹா அபிஷேகம் செய்து துளசி மாலை, எருக்கம்பூ மாலை, அருகம்புல் மாலை சார்த்தி முல்லை இலை, கரிசலாங்கண்ணி இலை, வில்வம் இலை, அருகம்புல், இலந்தை இலை, ஊமத்தை இலை, வன்னி இலை, நாயுருவி , கண்டங்கத்தரி, அரளி இலை, எருக்கம் இலை, மருதம் இலை, விஷ்ணுகிராந்தி இலை, மாதுளை இலை, தேவதாரு இலை, மருக்கொழுந்து இலை, அரசம் இலை, ஜாதிமல்லி இலை, தாழம் இலை, அகத்தி இலை, தவனம் இலை, தும்பை இலை, குண்டுமணி இலை போன்ற 23 வகையான இலைகளைக்கொண்டு சிறப்பு ஸஹஸ்ர நாம அர்ச்சனையும் சதுர்வேத பாராயணமும் சோடச உபச்சாரத்துடன் மஹா மங்களார்த்தி நடைபெற்றது. இதில் விநாயகற்கு பிடித்தமான பொரி, கடலை, அவல், கொழுக்கட்டை, சுண்டல், வடை, அப்பம், பாயசம், கரும்பு, கொய்யாபழம் போன்ற பொருள்கள் நிவேதனமாக சமர்ப்பிக்கபட்டது. பீடத்தில் நடைபெற்ற அன்னதானத்தில் அனைவரும் பங்கேற்றனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தினர்.


தொடர்புக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513. வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203 Email : danvantripeedam@gmail.com

Wednesday, August 23, 2017

" GURU PEYARCHI PARIHARA STHALANGAL " Thanks to 'DINAMALAR' 23.08.2017 Guru Peyarchi Special Edition


Kshemangal Tharum Homangal

தன்வந்திரி பீடத்தில்
 க்ஷேமங்கள் தரும் ஹோமங்கள்.

வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞனகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர் ஸ்வாமிகளின் ஆசிகளுடன் தினம் தோறும் பக்தர்களின் நலன் கருதி க்ஷேமம் தரும் ஹோமங்கள் நடைபெற்று வருகிறது.

ஹோமங்கள் ஏன் ? எதற்கு ?

இறை பக்தி இல்லாத வாழ்க்கை, நிலவில்லாத வானம் போல்! மீன் இல்லாத கடல் போல்! அப்படிப்பட்ட வாழ்க்கையை & அதாவது இறை பக்தி இல்லாத ஒரு வாழ்க்கையை ஒருவர் வாழ நேர்ந்தால் அதனால் எந்தப் பலனும் அவருக்கு இல்லை.

கடந்த பிறவியில் செய்துள்ள நல்வினை மற்றும் தீவினைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு ஜீவனும் அதற்குரிய பலன்களை இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டும். அதன்படி அனுபவித்து வருகின்றன. இது நியதி. என்றாலும் & ஈடில்லாத இறை பக்தியினாலும், தயாள குணத்தினாலும், வாழுகின்ற முறையினாலும் தீவினைகளின் கெடுபலன்களை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும். இது சர்வ நிச்சயம்.

எனவே, வாழுகின்ற இந்தக் காலத்தில் நாம் அனுபவிக்க வேண்டிய தீவினைகளை ஓரளவு குறைப்பதற்கு இறைவனை வழிபட்டே ஆக வேண்டும். அவனது அருளுக்குப் பாத்திரம் ஆக வேண்டும்.எங்கும் நிறைந்துள்ள இறைவனை நாம் வழிபடுவதற்குப் பல முறைகள் உள்ளன.சங்கீதம், நாம கோஷம், அர்ச்சனை, அபிஷேகம், ஜபம் & இப்படிப் பல வழிபாட்டு முறைகள் உள்ளன. இவற்றில் முக்கியமான ஒரு வழிபாட்டு முறை & ஹோமம் செய்வது.

ஹோமங்கள் மூலமாக நமது பிரார்த்தனைகளும் கோரிக்கைகளும் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த ஹோமங்களில் ஒரு தூதுவராகச் செயல்படும் அக்னி பகவான்தான் நமது கோரிக்கைகளை & எந்தெந்த தேவதைகளுக்கு வைக்கிறோமோ & அந்தந்த தேவதைகளிடம் கொண்டு போய் சேர்ப்பிக்கிறார்.

எனவேதான், வாலாஜாவில் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் துவங்கிய காலத்தில் (13 ஆண்டுகளாக)  இருந்தே ஹோமங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். அக்னி பகவானின் வாசம் இல்லாத நாளே இங்கு இல்லை. தினம்தோறும் ஹோமங்கள். தங்களுக்கு நேர்ந்த பல விதமான பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டி, இந்த ஆரோக்ய பீடம் தேடி வருகிறார்கள். ஸ்ரீதன்வந்திரி பகவானை வணங்குகிறார்கள். என்ன ஹோமம் செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களோ, அந்த ஹோமம் செய்து செல்கிறார்கள்.

‘யக்ஞ பூமி- ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்

‘யக்ஞ பூமிஎன்று சொல்லும் அளவுக்கு இதுவரை இங்கே பல்லாயிரக்கணக்கான ஹோமங்கள் நடந்துள்ளன. ரோகம் தீர்த்து யோகம் அளிக்கும் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீட யாக சாலையில் ஆண்டு முழுதும் ஐஸ்வர்யத்துடன் ஆயுள் பலம் பெற அபூர்வமான பல யாகங்கள் நடந்து வருகின்றன. இந்த யாகங்களுக்கு ஏற்ற வகையில் விசேஷமான சந்நிதிகளும் இங்கே அமைந்திருப்பது சிறப்பு.

வாழ்வில் வளமும் நலமும் பெறுவதற்கு இந்த ஹோம வழிபாடு உதவுகிறது.

உலக மக்களின் உடல் நலம், மன நலம் கருதியும், இயற்கைச் சீற்றம், பேரிடர்கள், கடல் கொந்தளிப்பு போன்ற பேராபத்துகளிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், உலக மக்களின் தேவைகளான திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நிரந்தர உத்தியோகம், கல்வி, குடும்ப க்ஷேமம், கடன் நிவாரணம், நோய் நிவாரணம், மன அமைதி, மன சாந்தி, ஆடை அணிகலன்கள் போன்றவற்றைப் பெறவும், துர் மரணம், விபத்துக்கள், வறுமை போன்றவற்றைத் தவிர்க்கவும், கொடிய வியாதிகளால் துன்பம் ஏற்படும்போதும், கிரகங்களின் பெயர்ச்சியினாலும் சுழற்சியினாலும் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுதலை பெறவும், வழக்குகளில் வெற்றி பெறவும், சொத்து பிரச்னைகள் தீரவும், தம்பதிகளின் ஒற்றுமை, தாம்பத்ய அந்யோன்யம் வேண்டியும், சகல பாபங்களிலிருந்து விடுதலை பெறவும், சகல காரிய ஸித்தி அடையவும், லட்சுமி கடாட்சம் குறைவில்லாமல் இருக்கவும், இளைய தலைமுறையினரின் ஆரோக்கியம் கருதியும், நல் பழக்க வழக்கங்கள் வளரவும், அவர்களிடம் பாசம், நேசம், பக்தி போன்றவை சிறக்கவும் இத்தகைய ஹோமங்கள் மாபெரும் தூண்டுகோல் சக்தியாக அமையும்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நடக்கும் ஹோமங்களுக்கு பெரும் சிறப்பு உண்டு. காரணம் & இங்கே இருக்கின்ற யாகசாலையில்அணையா அக்னிஎன்றென்றும் வாசம் செய்து கொண்டிருக்கிறது. பீடம் துவங்கிய நாளில் ஏற்றப்பட்ட யாகசாலை அக்னி, இன்றளவும் விடாமல் தன் சாந்நித்தியத்தை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறது.

நலம் தரும் ஹோமங்கள்

எத்தனை விதமான ஹோமங்கள் இன்று புழக்கத்தில் இருந்து வருகின்றன என்று பட்டியல் போட முடியாது. அந்த அளவுக்கு ஹோமங்களின் பட்டியல் வெகு நீளம்.
தடைகள் நீங்குவதற்கு கணபதி ஹோமம், ஆயுள் விருத்திக்கு ம்ருத்யஞ்ஜ ஹோமம், செல்வ விருத்திக்கு லட்சுமி ஹோமம், கல்வியில் சிறந்து விளங்குவதற்கு வித்யா ஹோமம், தனித் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு கனகதாரா ஹோமம், நிலம் தொடர்பான பிரச்னைகள் அகல்வதற்கு வாஸ்து ஹோமம் என்று ஏராளம் இருக்கின்றன.

எந்த ஒரு ஹோமம் துவங்கப்படுவதற்கு முன்பாக, எல்லாவற்றுக்கும் மூல முதல்வனாக இருக்கிற கணபதி பெருமானை வணங்க வேண்டும். அவரை வணங்கிகணபதி ஹோமம்நடத்தி, அந்த விக்னேஸ்வரனின் அருளைப் பெற வேண்டியது அவசியம்.
விநாயகருக்கு மட்டும் தனியாக ஹோமம் செய்ய விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமைகள் மற்றும் சதுர்த்தி தினங்களில் அதிகாலையில் ஹோமம் செய்யலாம்.

பண்டைய காலங்களில் உலக நன்மைக்காகவும், இயற்கையை வணங்கி வழிபடுவதற்கும் அரசர்களாலும், மிராசுதார்களாலும் ஹோமங்கள் செய்யப்பட்டு வந்தன. ஆனால், இன்றைய தினத்தில் தனிப்பட்டவர்களின் நலனுக்காக ஹோமங்கள் செய்வது பெருகி இருக்கிறது என்பது குறிப்பிடதக்கதாகும்.

அனைத்து அன்பர்களும் தன்வந்திரி பீடத்திற்கு வருகை புரிந்து ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளையும் இதர 75 பரிவார மூர்த்திகளையும் 468-சித்தர்களாக உள்ள சிவலிங்கத்தையும் தரிசித்து தங்களுடைய வாழ்வை வளமாக்கும் ஹோமங்கள் செய்து க்ஷேமங்கள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

தொடர்புக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை632 513. வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல்9443330203, Email : danvantripeedam@gmail.com


Sunday, August 20, 2017

GURU PEYARCHI MAHA YAGAM 2017

GURU PEYARCHI MAHA YAGAM


Walajapet, Sri Danvantri Arogya Peedam’s Founder and Peedathipathi conducting  “GURU PEYARCHI (Jupiter Transit) MAHA YAGAM” and “MAHA ABHISHEKAM” for “SRI METHA DAKSHINAMURTHY” with “LAKSHA ARCHANA” on 02.09.2017 Saturday 5.30 P.M and 03.09.2017 Sunday 7.00 P.M.

Guru or Jupiter is a benefic,  largest and second slowest moving planet of our solar system. It takes 12 years for Guru (Jupiter) to complete its complete journey once round the full set of zodiac signs. As a result, when it transits in a particular sign, it has a deep impact on all the signs of the solar system. In each house it stays for about one year. The movement of Guru from one house to another house is called guru peyarchi or Jupiter transit.

Jupiter transit, This occurs on the 2nd  of September 2017 from the house of Kanni or Virgo to Tula or Libra.This means that its significance increases since it is not far away from earth.

Jupiter is considered a protector and a gentle planet in Vedic astrology. Along with this, it is also considered the teacher of all the gods. Therefore, it is also the natural Karaka of wisdom. This wisdom is beneficial for everything. Its human form is depicted as Brahmin, who  is kind, never gets angry easily and always thinks about helping others.

Jupiter is considered the Karaka of property and wealth apart from being the Karaka/benefactor of wisdom and these two Karakas are the pillars of human life. A person’s life is filled with happiness, joy and one enjoys living life. Only Jupiter can provide these two virtues together.

Apart from this, Jupiter can stop the negative energy and makes a person free from the results of his bad Karmas done in various births.  Within the alchemy of Jupiter’s good luck is associated the unrestrained nature of any kind of growth. This is exactly the perfect time to garner the best results of this benefic planet.

The day when the great transit occurs, fortunes will change hands, new beginning will happen. Dont you want to capitalize on this wonderful opportunity.

PARIHARA RASIGAL : RISHABHAM (Taurus), KADAKAM (Cancer), SIMHA (Leo), THULAM (Libra), VRISHCHIKAM (Scorpio), MAKARAM (Capricorn), MEENAM (Pisces).

For more details, Contact;

Sri Danvantri Arogya Peedam,
Kilpudupet, Walajapet – 632513, Vellore District.
Ph: 04172-230033 / 230274 / 9443330203

PURATTASI SATURDAY 2017


On Purattasi first Saturday 23.09.2017
Sri Danvantri Arogya peedam, WalajapetMaha Danvantri Homam -108 Herbal Thirumanjanam - Pushpa Yagam.Lord Sri Danvantri, the 12th incarnation of Lord Vishnu.


Purattasi is one of the auspicious tamil months, usually begins in the English month of September. It is the sixth month in a Tamil calendar and is dedicated to God Vishnu. Sri Danvantri Arogya peedam, Walajapet’s founder nad Peedathipathi “KAYILAI GNANAGURU Dr. SRI. MURALIDHARA SWAMIGAL”  conducting Maha Danvantri Homam, 108 Herbal Thirumanjanam and Pushpa Yagam on Purattasi first Saturday 23.09.2017 by 8.00 AM onwards to Lord Danvantri, the 12th incarnation of Lord Vishnu.

The Significance of Purattasi Month :

Puratasi month is of great importance to Tamilians as it is believed that Lord Vishnu appeared on the earth in this month. Lord Vishnu devotees consider Purattasi as the ideal month for thanking Lord Vishnu for preserving the Universe at the end of Kali Yuga. Devotees gather in large number at Lord Vishnu temples and special prayers are offered.

Purattasi Vrat is observed by Devotees of Lord Vishnu. Some people observe partial fasting on all days in Puratassi others limit it to Puratasi Saturdays. A few observe strict fast on Saturdays which involves not even drinking a drop of water is called Nirjala Vratam. Some devotees only eat vegetarian food during the entire month. They also quit smoking and consuming alcohol for one month. On Purattasi Saturdays, Namum, the two feet symbol of Lord Vishnu’s feet, is drawn on the forehead by males and women opt for a red dot. Hymns dedicated to Lord Vishnu are chanted and Mavilakku offered to the God.

It is also believed that Lord Shani looses his powers in Puratasi month, so it is easy to escape from his malefic influences. Devotees offer Ghee or Ellu Deepam to Lord Sani in the month. Navagrahas are also worshipped in the month.

Also there is a huge list of important festivals like Durga Navaratri, Saraswati poojai, and Vijayadhasami celebrated in the month of Purattasi.

This fast is an abstinence of eating meat, smoking, consuming alcohol, some even do not sleep with their spouse and sleep on the floor, clean pots were no meat was cooked are used and so forth. Many faithfuls just have one meal for the day while others give up their favourite foods in dedication to the Supreme Lord. This fast should not be like a torturous burden. The abstinence increases one’s will power and concentration to be able to pray to the Supreme lord even more faithfully. By fasting impurities are decreased and purity is increased which is so essential in the attainment of the Supreme Lord. The benefits are inconceivable if the fast is properly observed.

For more details, Contact;

Sri Danvantri Arogya Peedam,
Kilpudupet, Walajapet-632513, Vellore District.
Ph: 04172-230033 / 230274 / 9443330203

Saturday, August 19, 2017

Vinayaga Chaturthi 2017 - Maha Ganapathi Homam

ஆகஸ்ட், 25ல் - வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டுமஹாகணபதி ஹோமத்துடன்
23  இலைகளைக் கொண்டு சிறப்பு
அர்ச்சனை.


வேலுார் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விநாயகர் சதூர்த்தி விழா வரும் 25.08.2017 தேதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது

14 ஆண்டுகளுக்கு முன்பு தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் 4 அடி உயரத்தில் சிம்ம பீடத்தில் ஓரே கல்லில் ஓரு புறம் வினைதீர்க்கும் விநாயகர், மறுபுறம் பீணிதீர்க்கும் தன்வந்தரியுடன் சிலை  வடிவமைக்கப்பட்டு கணபதிக்குரிய ஹோமங்கள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் 1,32 ஆயிரம் மோதகங்களை கொண்டு வாஞ்சாகல்ப லதா கணபதி ஹோமமும், 108 யாக குண்டங்கள் அமைத்து 108 சிவாச்சரியர்கள் பங்கேற்ற 108 கணபதி ஹோமங்கள்  நடைப்பெற்ற ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 25ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில்  விநாயகர் சதூர்த்தியை முன்னிடடு, கர்ம வினைகள் தீரவும், காரியங்கள் சித்தி பெறவும், பிராத்தனைகள் நடைபெறவும் மகாகணபதி ஹோமம், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி  நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து ஓரே கல்லில்லான விநாயகர் தன்வந்தரிக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும்  கீழே கொடுக்கபட்டுள்ள 23 வகையான இலைகளைக்கொண்டு சிறப்பு அர்ச்சனை  நடைபெற உள்ளது.

இலைகளின் பெயர்கள்

முல்லை இலை, கரிசலாங்கண்ணி இலை, வில்வம் இலை, அருகம்புல், இலந்தை இலை, ஊமத்தை இலை, வன்னி இலை, நாயுருவி , கண்டங்கத்தரி, அரளி இலை, எருக்கம் இலை, மருதம் இலை, விஷ்ணுகிராந்தி இலை, மாதுளை இலை, தேவதாரு இலை, மருக்கொழுந்து இலை, அரசம் இலை, ஜாதிமல்லி இலை, தாழம் இலை, அகத்தி இலை, தவனம் இலை, தும்பை இலை, குண்டுமணி இலை ஆகும். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தினர்.

தொடர்புக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513. வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203 Email : danvantripeedam@gmail.com