Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203
Showing posts with label வாஸ்து. Show all posts
Showing posts with label வாஸ்து. Show all posts

Saturday, August 19, 2017

வாஸ்து தோஷம் நீக்கும் வாஸ்து ஹோமம்

தன்வந்திரி பீடத்தில் வருகிற 22.08.2017 செவ்வாய்க்கிழமைவாஸ்து தோஷம் நீக்கும்
வாஸ்து ஹோமம்  நடைபெறுகிறது.



வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதத்தில், வாஸ்து பகவானை பற்றியும், வாஸ்து சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள் அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனைகள், இருப்பிடங்கள், நிலங்கள், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும் என்ற வகையில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்து பகவானுக்கென்று தனி சன்னதி அமைத்துள்ளார்.

வாஸ்து பகவான் அமைப்பு:
வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்களுடன், அஷ்டதிக் பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவ பெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கி படுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருக்காட்சி வேறெங்கும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பீடத்தில் பிரதி செவ்வாய் கிழமை மற்றும் ஒவ்வொரு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமி நாட்களிலும் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் மற்றும்  பஞ்சபூத வழிபாடும் அஷ்டதிக் பாலகர் பூஜையும் நடைபெறுகிறது.

இந்த ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்ச யந்திரம், வாஸ்து மண் வாஸ்து தேங்காய்,வாஸ்து பொம்மை மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி ஆசீர்வதித்து வருகிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

இந்த பிரசாதங்களை பெற்ற எண்ணற்ற மக்கள் பயனடைந்து, மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்லி அவர்களும் தன்வந்திரி பீடத்திற்கு வருகை தந்து வாஸ்து பகவானையும், இதர பரிவார தெய்வங்களையும் தரிசித்து சுவாமிகளிடம் ஆசி பெற்று செல்கின்றனர். என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும்.

வருகிற 22.08.2017 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில்  வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து தோஷம் நீக்கும் வாஸ்து ஹோமம்  நடைபெறுகிறது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தினர்.

தொடர்புக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513. வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203