தன்வந்திரி பீடத்தில்
பாபம் போக்கும் பவானி யாகம்
வருகிற 03.08.2018 ஆடி வெள்ளியில் நடைபெறுகிறது.
நம் நாட்டில் தேவி
வழிபாடு மிகவும் பழைமையானதும் பிரசித்தி பெற்றதுமாகும். எல்லா மனிதர்களாலும் தொன்று தொட்டு பூஜித்து வரக்கூடியது தேவி வழிபாடாகும்.
வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ, எச்சமயத்திலும் பெருகி
வரும் சொல் “அம்மா” என்பதே தேவியை தாயாக
வழிபட்டு அவளின் கருணையை பெறுவது மிகச்சிறந்த வழியாகும். வேதங்களும்,
தத்துவங்களும் இதையே கூறுகிறது. ஸ்ரீவித்யையில்
தந்திர மார்க்கத்தில் காஷ்மீர் தேசத்தில் பவானி வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது.
நம் நாட்டில் லலிதா பரமேஸ்வரி போல் வடநாட்டில் பவானி.
பவானி எனும் நாமமே மிகச்சிறந்த்து. பவன் என்றால்
பரமேஸ்வரன், பவன் என்றால் மன்மதன். இவர்களுக்கு
உயிர் அளித்து காப்பதனால் பவானி என்ற பெயர் வந்ததாக தேவி புராணம் கூறுகிறது.
பவானியே பராப்ரக்ருதி என்றும் பராசக்தி என்றும் கீதை, இதிகாஸ புராணங்கள் கூறுகின்றன.
பிரம்ம வித்யா ஸ்வரூபமாக
விளங்கும் அன்னை பவானியின் அருள் பெற, வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 03.08.2018 ஆடி மூன்றாவது
வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை உலக நலன் கருதியும், காரிய சித்தியும்,
பாப விமோசனமும் தரக்கூடியதும், வாக்கு,
மனம், செயல் இவறால் செய்த பாபங்கள் போகவும் பாபம் போக்கும் பவானி ஹோமம், சூக்த ஹோமங்கள், ஆடி கூழ் வார்த்தல், முனீஸ்வரன் மற்றும் நவகன்னிகைகளுக்கு பொங்கல் இடும் வைபவங்கள்,
நடைபெறுகிறது.
பவானி தேவிக்கு
செய்யும் ஹோமம் மற்றும் வழிபாடு காட்டிலும் மிகவும் உயர்ந்த பலனை தரக்கூடியது வேறு
எதுவும் இல்லை.
பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இவளை தரிசிப்பவர்களுக்கு 'யாதொரு தீங்கும் நெருங்காது. பாபங்கள், சாபங்கள் நீங்கும். மேலும் குபேர யோகம் கிட்டும்; சகல
செல்வங்களும் கிடைத்து சுபிட்சமாக வாழ்வர் என்பது ஐதீகம்.வழிபட்டு, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சகல யோகங்களும்
கைகூடும். பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தியான பவானி தேவியின் ஹோமத்தில் பங்கு பெற்று பில்லி, சூன்னியம், செய்வினை, ஏவல், போன்ற பலவிதமான தோஷங்களில் இருந்து விடுதலை பெற்று ஆரோக்யமாக வாழ ஸ்ரீ பவானி அன்னையை வணங்குவோம்.
இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய்
பொடி,
மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு,
மிளகு, நல்லெண்ணை, பழங்கள்,
புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில்
பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment