Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, September 30, 2022

2008 Varahi Deepam

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

 நவராத்திரி 5ம் நாள் விழா ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ  சம்பதமாதாக்கள் ஹோமங்கள்,சிறப்பு அபிஷேகம் பூஜைகள்.

வளர்பிறை  பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வராஹி ஹோமம், அபிஷேகம்

மாலையில் 2008 வராஹி  தீபம் ஏற்றப்பட்டது.

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,  நவராத்திரி விழா 10 நாட்கள்& 16 ஹோமங்கள் என்ற வகையில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நவராத்தியில் 5ம் நாளான இன்று 30ம்தேதி   வெள்ளிக்கிழமை

ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ சப்தமாதாக்கள் ஆகிய தெய்வங்களுக்கு  ஹோமங்கள்   மற்றும் சிறப்பு அபிஷேகம் ,ஆராதனை நடைபெற்றது .

அகிலாண்ட தேவியாக இருந்து  தினமும் அன்னம்  வழங்கும்  மாதா ஸ்ரீ அன்ன பூரணி தேவிக்கும் , கிராம,எல்லை தேவதைகளாக இருந்து காத்து  வரும் ஸ்ரீ சப்தமாதாக்களும் ஹோமங்கள், அபிஷேகங்கள் நடத்தி  அன்னதோஷம் அகலவும்,  அளவில்லா அன்னம் கிடைத்திடவும் , விவசாயம், விவசாயிகள் செழிக்கவும், கிராமங்கள் , நகரங்கள் செழிக்கவும் , தரித்திரங்கள் நீங்கிட  பிரார்த்தனை நடைபெற்றது. 

காசிக்கு நிகராக அருள்பாலிக்கும் அன்னபூரணி என பக்தர்களால் அழைக்கப்படும்  ஸ்ரீ அன்னபூரணி தேவி , வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தங்க அன்னபூரணியாக காட்சி  அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹோமங்கள், அபிஷேகம், பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 

தொடர்ச்சியாக  வளர்பிறை பஞ்சமி, லலிதா பஞ்சமி,  நவராத்திரி ஆகியவற்றை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு ,

 ஸ்ரீ வராஹி ஹோமம், சிறப்பு அபிஷேகம்  நடைபெற்று, வராஹி அம்மனுக்கு 1000 நுனி வாழை இலைகளில் , அரிசி, பூ, மஞ்சள்,குங்குமம், தாம்பூலம் வைத்து 2008 தேங்காய்களில் நெய் தீபமும், 1000 எலுமிச்சம்  பழங்களில் நல்எண்ணெய் தீபமும்  என வராஹி தீபம் ஏற்றப்பட்டு  ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு வழிபாடு செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.







No comments:

Post a Comment