1000 தட்டில் மிளகாய் வற்றல் கொண்டு மகா ப்ரத்யங்கிரா ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள்,3008 சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டு, அன்னதானம்
மஹாளய அமாவாசையை முன்னிட்டு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, இன்று 25ம்தேதி ஞாயிற்றுக்கிழமை, மஹாளய அமாவாசையை முன்னிட்டு
ஸ்ரீ தன்வந்திரி விநாயகர் ஹோமம், பகவதி சேவா, குருதி பூஜை ,
1000 தட்டுகளில் மிளகாய் வற்றல், மூலிகைகள், நவதானியங்கள்,
மஞ்சள், குங்குமம் போன்ற சௌபாக்ய பொருள்கள் கொண்டு சரப சூலினி
மகா ப்ரத்யங்கிரா யாகமும், திருஷ்டி துர்கா ஹோமம், ஸ்ரீ மகிஷா சுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவையும், ஸ்ரீ விநாயகர் தன்வந்திரிக்கு 3008 தேங்காய்கள் சிதறு காய்களாகவும் உடைக்கப்பட்டது.
மஹாளய அமாவாசையை ஒட்டி நடைபெற்ற பூஜைகள், அபிஷேகம், ஹோமங்களில் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment