ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஷஷ்டி திதியை முன்னிட்டு
சத்ரு சம்ஹார ஹோமம் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சிறப்பு அபிஷேகம்
இராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி , 15.9.2022ம்தேதி வியாழக்கிழமை ஷஷ்டி திதியை முன்னிட்டு காலை சத்ரு சம்ஹார ஹோமமும், ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
இந்த ஹோமத்தில் பெற்றோர்களின் குறை தீரவும்,தம்பதிகளின் வாழ்வு சிறக்கவும், வம்ச விருத்திஅடையவும் ஆண், பெண்கள் வாழ்கை மலரவும்,
குழந்தை பாக்யம் வேண்டியும், பூமி விருத்தி, வீடு, மனை விருத்தி, நிலம் விற்பது போன்ற செயல்களுக்கும், எதிரிகளை வெற்றி கொள்வதற்கும், தடைப்படும் காரியங்களின்
தடைகளை நீக்கவும், அரசு உத்தியோகம் பெறவும், பில்லி, சூனியங்கள், வினைகள் தொடராமலிருக்கவும்,வஞ்சகமும், சூது மதியினரை வெல்லவும், சத்ரு ஜெயம், தீர்க்க ஆயுள், ரோக நிவாரணம், எதையும் தாங்கும் இதய பலம் பெற்று நிவாரணம் கிடைக்கவும், கல்வி தடைப்பட்டவர்களுக்கும், செவ்வாய் தோஷம்உள்ளவர்களுக்கும், இரத்த சம்பந்தமான புற்றுநோயாளிககும் நிவர்த்தியைத் தரவல்லவும் பக்தர்கள் இந்த ஹோமத்தில் பிரார்த்தனை செய்து பூர்ணாஹூதி நடைபெற்றது.
நிறைவாக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீகார்த்திகை குமரனுக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம், விபூதி, போன்ற
பொருள்களுடன் அஷ்ட திரவ்ய அபிஷேகமும் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment