ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், நாளை 10ம்தேதி
பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு யாகங்கள்
வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
‘யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு’ டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக மக்களின் நலன் கருதி நாளை 10.9.2022ம்தேதி சனிக்கிழமை , பௌர்ணமியை முன்னிட்டு காலை 10 மணி முதல் 12 மணி வரை, ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வராஜ ஹோமம் , பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம் மற்றும் தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால ஹோமம் ஆகியவை நடைபெற உள்ளது.
கந்தர்வ ராஜ ஹோமம்
திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும்,நவக்கிரக தோஷங்களும் , பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும், சகலதோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வ ராஜஹோமம் நடைபெற உள்ளது. மேலும் பீடத்தில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 2500க்கும் மேற்பட்ட கந்தர்வராஜ ஹோமங்கள் நடைபெற்று எண்ணற்ற ஆண்கள் பங்கு பெற்று பயனடைந்துள்ளனர்.
சுயம்வர கலா பார்வதி ஹோமம்
திருமணத்தடைகள் உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சுயம்வர கலா பார்வதி ஹோமம் நடைபெற உள்ளது . இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரக தோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வர கலா பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது.இந்த சுயம்வர கலா பார்வதி ஹோமம் செய்வதின் பலன் ஏராளம் .
திருமணத்தடைகளும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம் .
மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் தம்பதிகளுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும்,மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் இருக்கும்.
சந்தான கோபால யாகம்
குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் வேண்டி சங்கல்பம் செய்து சந்தான கோபால யாகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த யாகம் செய்வதின் மூலம் எல்லாவிதமான தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். கணவன், மனைவிக்குள் மிகுந்த அன்னியோன்னியம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும்
இந்த ஹோமங்களில் பங்கேற்கும் நபர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருள் பிரசாதமும் ஆசிர்வாதமும் வழங்க உள்ளார். மேலும் 468 சித்தர்கள் ஆசிர்வாதமும் கிடைக்கும் . இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருள்கள், மளிகை பொருள்கள், அன்னதான பொருள்கள் , பூர்ணாஹூதி§ வஸ்திரங்கள், சிவாச்சாரியார் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருள்கள் தானம் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறை பணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை-632513.
இராணிப்பேட்டை மாவட்டம்.
செல் :94433 30203.
No comments:
Post a Comment