Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, September 3, 2022

Danvantri Arokya peedam Taken ISO CERTIFICATES FOR 4 th times




  

 வாலாஜாபேட்டை 
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு 4 வது முறையாக 
சர்வதேச தரச்சான்றிதழ் 

 வாலாஜாப்பேட்டை அடுத்த  அனந்தலை பஞ்சாயத்திற்குட்பட்ட , கீழ்புதுப்பேட்டையில் 
 உலக மக்களின் நோய் தீர்க்கும் பீடமாகவும், ஷன்மத பீடமாகவும் 
தீகழ்ந்து வரும்  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் கடந்த  2009 ம் வருடம் முதல்  சிறந்த பராமரிப்பிற்காகவும் , சுற்றுப்புறச்சூழலுக்காக சர்வதேச தரச்சான்றிதழ்  பெற்று  சிறந்த முறையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்  பராமரிக்கப்பட்டு  வருகிறது. 

அந்த வகையில் இன்று  3.9.2022   சிறந்த பராமரிப்புக்கான  ஐ.எஸ்.ஓ 9001 : 2015 சான்றிதழ்  மற்றும் சுற்றுப்புறச்சூழலுக்காக ஐ.எஸ்.ஓ 14001 : 2015  ஆகிய இரு சேவைகளுக்காக  சர்வதேச தரச்சான்றிதழ் ,பி.எம்.க்யூ.ஆர்.  நிறுவனத்தின் மூலம்  ஸ்ரீதன்வந்திரி பீடத்தின்  பீடாதிபதி  யக்ஞஸ்ரீ  கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் வழங்கப்பட்டது. 

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் தொடர்ந்து 4 வது முறையாக மேற்கண்ட ஐ.எஸ்.ஓ . தரச்சான்றிதழ்கள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது  ஆகும்.

No comments:

Post a Comment