வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவராத்திரி 2ம் நாள் விழா ஸ்ரீ பஞ்சமுக வராஹிக்குஹோமம், அபிஷேகம் பூஜைகள்.
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,
நவராத்திரி விழா 10 நாட்கள்- 16 ஹோமங்கள் என்ற வகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நவ
ராத்திரி 2ம் நாளான இன்று 27ம்தேதி செவ்வாய்க்கிழமை , வாழ்வில் பல்வேறு தடைகளை நீக்கி நம்மை வெற்றிப்பாதையில் கொண்டு செல்லும் அன்னை
ஸ்ரீ வராஹிக்கு ஹோமம் நடைபெற்றது.
தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக வராஹிக்கு
பால், தயிர், சந்தனம், மஞ்சள் , பன்னீர் போன்ற திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு , பூஜை நடைபெற்றது.
ஹோமத்தில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு உகந்த கிழங்கு வகைகள் வைத்து பிரார்த்தனை செய்து யாகத்தில் சமர்பிக்கப்பட்டது. தொடர்ந்து வராஹி தீபம் ஏற்றப்பட்டது.
கோடி ஜெப தொடர் யாகம் நடைபெற்று வருவதை ஒட்டி மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த ஹோமம் மற்றும் பூஜைகளில் கர்நாடக மாநிலம், ஆர்ய வைஸ்ய சமூகத்தை சேர்ந்த தொழிலதிபர். குப்தா, வேலூர் பத்மாவதி பிரஸ் உரிமையாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நவராத்திரியில் 3ம் நாளான நாளை 28ம் தேதி புதன்கிழமை ஸ்ரீ நவகன்னிகைகள்,ஸ்ரீ காயத்ரி தேவி,ஸ்ரீ மஞ்சமாதா ஆகியோருக்கு சிறப்பு ஹோமங்களும் , அபிஷேக, பூஜைகளும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment