ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் திருவோண விரதத்தை முன்னிட்டு
ஸ்ரீ விநாயகர் தன்வந்திரி, ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு தைலாபிஷேகம்
வாலாஜாபேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பிடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி , திருவாதிரை முதல் திருவோணம் நட்சத்திரம் வரை 16நாட்கள் தினசரி காலை 10 மணி முதல் 11.30 மணிவரை ஆயுள்,ஆரோக்கியம்,குடும்ப ஷேமம், தொழில்,வியாபாரம் வேண்டியும், திருமணம்,குழந்தை பாக்கியம்,தம்பதிகள் ஒற்றுமை,பொன் பொருள் சேர்க்கை வேண்டியும், திருஷ்டி தோஷங்கள், நீங்கவும்,மாணவ மாணவிகள் தேர்வில் வெற்றி பெறவும், கல்வி தரம் உயரவும். விபத்துகள் தடுக்கவும்,புதிய வீடு அமையவும் போன்ற பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மாபெரும் சிறப்பு தன்வந்திரி ஹோமங்களுடன் காரிய சித்தி ஹோமங்கள் பதினாறு செல்வங்கள் கிடைத்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ தொடர்ந்து 16 நாட்கள் யாகங்கள் நடைபெற்று வருகிறது.
முன்னதாக இன்று 7.9.2022 காலை ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.
பின்னர் திருவோண விரதத்தை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர் தன்வந்திரி, ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு தைலாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பால், நெல்லிப்பொடி, மஞ்சள், பன்னீர், சந்தனம் ஆகிய பஞ்ச திரவிய சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல்கள் நிறைவேற ஸ்ரீ விநாயகர் தன்வந்திரியையும், ஸ்ரீ தன்வந்திரி விநாயகரையும் வழிபட்டு சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment