பிரதோஷ பூஜை
பிரதோஷ தினத்தை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபத்தில் உள்ள 468 சித்தர்களுக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதீஸ்வரருக்கும் பஞ்ச திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
பூஜையில் கலந்து கொண்ட பொதுமக்கள், பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன், பிரசாதமும் வழங்கினார்.
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ மரகதேஸ்வரர் பீடத்திலேயே நந்தி பகவானும் இடம் பெற்றுள்ளது. இந்த சிறப்பு வேறு எங்கும் இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment