மாண்புமிகு பாரதப்பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் 72 வது பிறந்தநாள் முன்னிட்டு ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சிறப்பு ஹோமங்கள் & பூஜைகள்
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் அருளாணைப்படி , பாரத தாயின் தவப்புதல்வர், மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் திரு.நரேந்திர தாமோதரதாஸ் மோடிஜி
அவர்களின் 72 வது பிறந்த நாள் விழாவை ஒட்டி இன்று 17.9.2022ம்தேதி சனிக்கிழமை காலை
ஸ்ரீதன்வந்திரி ஹோமம், ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம், திருஷ்டி ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம் போன்ற பல்வேறு வகையான ஹோமங்களும், பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடிஜி அவர்களின் பிறந்த நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரம், விருச்சிக லக்னம் என்ற பெயரில் மகா சங்கல்பம் செய்யப்பட்டு அதற்குரிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அதனை தொடர்ந்து கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற்றது.
மேற்கண்ட ஹோமத்தின் பிரசாதம் ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளின் வாழ்த்து கடிதத்துடன் இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment