ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு 108 மாவிளக்கு பூஜை , புஷ்பாஞ்சலி
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, இன்று 24ம்தேதி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு காலை 10 மணிக்கு மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவான் சன்னதியில், தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து 108 மாவிளக்கு பூஜையுடன் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி நடைபெற்ற இந்த சிறப்பு மாவிளக்கு பூஜை மற்றும் புஷ்பாஞ்சலியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ தன்வந்திரி பகவானை வணங்கி வழிபாடு செய்து , ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளிடமும் ஆசி பெற்று சென்றனர்.
நாளை 25ம்தேதி ஞாயிற்றுக்கிழமை மஹாளய அமாவாசையை ஒட்டிகாலை 10 மணி முதல் ஸ்ரீ விநாயகர் தன்வந்திரிக்கு 3008 சிதறு தேங்காய்கள் உடைத்து, 1000 தட்டில் மிளகாய் வற்றல், மூலிகைகள், நவதானியங்கள், மஞ்சள், குங்குமம் போன்ற சௌபாக்ய பொருள்கள் கொண்டு சரப சூலினிமகா ப்ரத்யங்கிரா யாகமும், மாலையில் திருஷ்டி துர்கா யாகத்துடன் ஸ்ரீ மகிஷா சுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகம், பகவதி சேவா, குருதி பூஜை போன்ற வழிபாடுகள் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment