ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதேஸ்வரருக்கு 1008 கலச அபிஷேகம்
வாலாஜாபேட்டை,ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, உடல் நோய், மன நோய் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இன்று 5.9.2022ம்தேதி திங்கள்கிழமை ம்ருத்யுஞ்சய ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் மற்றும் மகா கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு 1008 கலச அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்களின் உடல் நோய் மற்றும் மன நிம்மதி வேண்டி வழிபட்டனர்.
ஹோமம் மற்றும் பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பிரசாதமும் , ஆசியும் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment