ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ராகுகாலத்தில்
ஸ்ரீசரபேஸ்வரர் சிறப்பு அபிஷேகம்
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி இன்று 4ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30-6.00 ராகுகாலத்தில் , ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 5 அடி உயரத்தில் , 4 அடிஅகலத்தில் விசேஷமான முறையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சரபேஸ்வரருக்கு நடைபெற்ற சரபேஸ்வரர் யாகம் மற்றும் பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
இந்த யாகத்தில் நெய், தேன், நவசமித்துகள், விசேஷ மூலிகைகள், மஞ்சள், பூசனிக்காய், பழங்கள், புஷ்பங்கள், நிவேதன பொருட்கள் மற்றும் ஏராளமான விசேஷ திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்று, பால், தயிர் , சந்தனம் , பன்னீர், மஞ்சள், விபூதி போன்ற பொருள்களுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சரபேஸ்வரர் வழிபாட்டின் சிறப்பு
சரபேஸ்வரர் வழிபாட்டின் மூலம் எதிர்ப்புகள் நீங்கும் , இன்னல்கள் போக்கும், கஷ்டங்கள் விலகும், கழுத்தை நெறிக்கும்
கடன் பிரச்சனைகள் தீரும், செய்வினை கோளாறுகள் , தீராத நோய்கள் , ஜாதகத்தில் ஏற்படும் கர்ம வினைகள் , நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள், குடும்ப பிரச்சனைகள் , தொழில் வருமான தடைகள் போன்றவைகள் எல்லாம் நீங்கி நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கையில், நரசிம்மர் வழிபாடு எந்த அளவிற்கு முக்கியமானதோ அதே போல் சரபேஸ்வரர் வழிபாடும் மிகவும் சிறப்பானது என பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
மேற்கண்ட சிறப்பு பூஜைகள் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆசியுடன் நடைபெற்றது.
ஸ்ரீசரபேஸ்வரர் யாகம் மற்றும் பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment