ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 3 நாட்களாக நடைபெற்று வந்த சர்ப்பயாகம், நாராயண பலி, சர்ப்ப பலி பூஜைகள் நிறைவு
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின ஆக்ஞைப்படி கடந்த 20ம்தேதி முதல் 22ம்தேதி முடிய 3 நாட்கள் சர்ப்ப யாகத்துடன் சர்ப்ப பலி, நாராயணபலி ,சம்பூர்ண பூஜைகள் நடைபெற்றது.
இந்த சர்ப்பயாகத்தை ஒட்டி பகவதி சேவா, குருதி பூஜை,கால பைரவர் பூஜை போன்ற விசேஷ பூஜைகள் நடைபெற்று நேற்று காலை
சர்ப்ப யாகத்திற்கான மகா கணபதி ஹோமம், பாயச ஹோமம், அடிச்சு தளி நைவேத்தியம், நூறும் பாலும் பூஜைகளும் நடைபெற்றது.
இதை தொடர்ந்து நேற்று 22ம்தேதி இரவில் நாராயணபலி, சர்ப்ப பலி பூஜைகள் நடைபெற்றது.
இதில் சர்ப்ப தோஷங்கள், சர்ப்ப கோபங்கள், கால சர்ப்ப தோஷம், நாக தோஷம், ஆயில்ய நட்சத்திர தோஷங்களி விலகி , தடைகள் விலகி வாழ்வில் சுபிட்சம் பெற பிரார்த்தனைகள் நடைபெற்றது.
மேற்கண்ட பூஜைகள், யாகங்களில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பால், மஞ்சள்,திரிமதுர பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment