ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தேய்பிறை அஷ்டமி மகா பைரவர் யாகம் 10 பைரவர்களுக்கும் சிறப்பு அபிஷேகம்
வாலாஜாபேட்டை,ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக நலன் கருதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு
டாக்டர். ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி இன்று 18.9.2022ம்தேதி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர்கள் மகா யாகம், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
யாகத்தை முன்னிட்டு உலகில் வேறு எங்கும் காணமுடியாத வகையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதண பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர் மற்றும் சம்ஹார பைரவர் என ஒரே கல்லில் அஷ்ட பைரவர்களுடன் அமைந்துள்ள
ஸ்ரீ அஷ்ட கால மகா பைரவர் மற்றும் தனிசன்னதி கொண்டுள்ள ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரும் என மொத்தம் 10 பைரவர்களும் மகா யாகம் நடத்தி பூர்ணாஹூதி செய்யப்பட்டது.
பின்னர் 10 பைரவர்களுக்கும் பஞ்ச திரவிய அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இந்த யாகம் மற்றும் அபிஷேக, பூஜைகளில் பக்தர்களின் சகல விதமான தோஷங்கள் நீங்கி தேவைகள் பூர்த்தி அடைய பிரார்த்தனை செய்யப்பட்டது.
யாகம் மற்றும் அபிஷேக பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment