வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவராத்திரி 6ம் நாள் விழா ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீ தாய் மூகாம்பிகைஹோமங்கள்,சிறப்பு அபிஷேகம் பூஜைகள்.
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, நவராத்திரி விழா 10 நாட்கள்- 16 ஹோமங்கள் என்ற வகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நவராத்தியில் 6ம் நாளான இன்று 1ம்தேதி சனிக்கிழமை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆகிய தெய்வங்களுக்கு ஹோமங்களும், ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீ மகிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகம் ,ஆராதனை நடைபெற்றது .
ஆர்ய வைஸ்ய சமூகத்தினரின் குல தெய்வமாகவும், வாழ்க்கையில் பல்வேறு தடைகளை நீக்கி வசந்த வாழ்வை தரும் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு உலகில் முதல் முறையாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது . இங்கு ஆர்ய வைஸ்ய சமூகத்தினர் தங்களது குடும்பத்தினரின் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், பீமரதசாந்தி போன்ற விசேஷங்களை நடத்தி, அன்னையை வழிபட்டு அருள் பெற்று செல்கின்றனர்.
விரைவில் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ஸ்ரீ தாய் மூகாம்பிகையின் சன்னதி நல்ல முறையில் அமைய வேண்டி ஹோமத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
ஹோமங்கள், அபிஷேகம், பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
நவராத்திரியில் 7ம் நாளான நாளை 2ம்தேதி ஸ்ரீ அஷ்ட புஜ மரகத ராஜமாதங்கி ஹோமம் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment