ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ராகுகாலத்தில் ஸ்ரீசரபேஸ்வரர்
சிறப்பு அபிஷேகம்
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி இன்று 18.9.2022 ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30--
6.00 ராகுகாலத்தில் , ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 5 அடி உயரத்தில் ,4 அடிஅகலத்தில் விசேஷமான முறையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சரபேஸ்வரருக்கு சரபேஸ்வரர் யாகம் மற்றும் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.
இந்த யாகம் மற்றும் சிறப்பு அபிஷேக பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு சகலவிதமான பிரச்சனைகளும் நீங்கி தேவைகள் பூர்த்தியடைய ஸ்ரீ சரபேஸ்வரரை தீபம் ஏற்றி வணங்கி வழிபாடு நடத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment