ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
அஷ்டமி திதியை முன்னிட்டு அஷ்ட பைரவர் சிறப்பு ஹோமம், அபிஷேகம்
இராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி , இன்று 3.9.2022 சனிக்கிழமை வளர்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு சிறப்பு ஹோமம், அபிஷேகம் நடைபெற்றது.
உலகிலேயே ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் மட்டுமே அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதண பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர் , சம்ஹார பைரவர் ஆகிய அஷ்ட பைரவர்களுடன் மகா கால பைரவர், மற்றும் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் என 10 பைரவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது சிறப்பாகும் . மேற்கண்ட பைரவர்களை வழிபடும் விதத்திலும் அருள்பெறும் விதத்திலும் இன்று
10 கலசங்கள் வைத்து சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்றது.
இந்த ஹோமத்தில் வெளிநாடு செல்வதற்கு ஏற்படும் தடைகள் நீங்கி வெளிநாடு செல்லவும், சகலவிதமான தோஷங்கள், பாவங்கள் நீங்கிடவும், தடைப்பட்ட காரியங்களில் வெற்றி பெற்றிடவும், நலமான வாழ்வு அமைந்திடவும் பக்தர்கள் இந்த ஹோமத்தில் பிரார்த்தனை செய்து பூர்ணாஹூதி நடைபெற்றது.
நிறைவாக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ அஷ்ட கால மகா பைரவர் மற்றும் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர்க்கும் பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம், விபூதி, போன்ற பொருள்களுடன் அஷ்ட திரவிய அபிஷேகமும் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது.
ஹோமம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்கள் கூஷ்மாண்ட தீபம் (பூசணிக்காய்) ஏற்றி பைரவர்களை வணங்கி சென்றனர்.
பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment