ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஆவணி மாத செவ்வாயை முன்னிட்டு
ஸ்ரீ ராஜமாதங்கிக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம்
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,ஆவணி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று 6.9.2022 செவ்வாய்க்கிழமை , அன்னை ஸ்ரீ ராஜ மாதங்கிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது.
ராஜாங்கபதவிகளில் வெற்றி பெறவும், கலைகளில் தேர்ச்சி பெறவும், காரியங்களில் உள்ள தடைகள் நீங்கி காரிய வெற்றி பெறவும் நடைபெற்ற இந்த சிறப்பு ஹோமத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு அன்னை ஸ்ரீ ராஜமாதங்கியை மனமுருக வேண்டி சென்றனர்.
ஹோமம் மற்றும் அபிஷேக , பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன் , பிரசாதமும் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment