வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவராத்திரி 3ம் நாள் விழா ஸ்ரீ காயத்ரி தேவி, ஸ்ரீ நவகன்னிகைகள், ஸ்ரீ மஞ்சமாதா ஹோமங்கள், அபிஷேகம் பூஜைகள்.
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, நவராத்திரி விழா 10 நாட்கள்& 16 ஹோமங்கள் என்ற வகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சைவம், வைணவம், ஸ்ரீசாக்தம்,சௌரம், கௌமாரம், காணாபத்யம் என 6 மதங்களுக்கு உரிய தெய்வங்களை பிரதிஷ்டை செய்து அதற்குரிய ஹோமம் , பூஜைகள் உலக நன்மை வேண்டி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஸ்ரீசாக்த தெய்வங்களை முன்னிறுத்தி நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.
நவராத்திரி 3ம் நாளான இன்று 28ம்தேதி புதன்கிழமை ஸ்ரீ காயத்ரி தேவி, ஸ்ரீ நவகன்னிகைகள், ஸ்ரீ மஞ்சமாதா ஆகிய தெய்வங்களுக்கு ஹோமங்களும், பால், தயிர், சந்தனம், மஞ்சள் , பன்னீர் போன்ற திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
ஸ்வாதி நட்சத்திரத்தை ஒட்டி ருணம், ரோகம், சத்ரு தொல்லை போக்கும் தெய்வமாக வழிபடும் ஸ்ரீலஷ்மி நரசிம்மரை வேண்டி ஸ்வாதி ஹோமமும், அபிஷேகமும் நடைபெற்றது.
ஸ்ரீ காயத்ரி தேவி, ஸ்ரீ நவகன்னிகைகள் , ஸ்ரீ மஞ்சமாதா,ஸ்ரீலஷ்மி நரசிம்மர் அருள், பரிபூரண அனுக்கிரகம் வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்யபீடத்தில் உள்ள ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் கூர்ம அவதாரத்தின் மேல் காட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
நவராத்திரியில் 4ம் நாளான நாளை 29ம் தேதி வியாழக்கிழமை ஸ்ரீஆரோக்ய லஷ்மி, ஸ்ரீ கஜலஷ்மி ஆகியோருக்கு சிறப்பு ஹோமங்களும் , அபிஷேக, பூஜைகளும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment