ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவராத்திரி விழா தொடக்கம்
10 நாட்கள், 16 ஹோமங்கள்
89 திருச்சன்னதிகள் ,468 சிவலிங்கங்கள் மூலவராக கொண்டு அன்றாடம் ஹோமங்கள், பூஜைகள், யக்ஞங்கள் நடைபெற்று வரும் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, நவராத்திரியில் பக்தர்கள் தேவியின் அருளுடன், நலமும் பெற தினந்தோறும் ஹோமங்கள் என்ற வகையில் 10 நாட்கள், 16 ஹோமங்கள் நடைபெற உள்ளது.
இன்று 26.9.2022ம் தேதி தொடங்கி வருகிற 5.10.2022 புதன் கிழமை முடிய தினசரி அந்தந்த தெய்வங்களுக்கு சிறப்பு ஹோமங்கள் , அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது.
நவராத்திரி தொடக்க நாளான இன்று 26ம்தேதி காலை மங்கள வாத்தியத்துடன் பூர்வாங்க பூஜை, கோ பூஜை, மகா கணபதி சங்கல்பத்துடன் ஸ்ரீ மகா ப்ரத்யங்கிரா தேவி ஹோமம், ஸ்ரீ மகிஷாசுர மர்த்தினி ஹோமம் ஆகியவையும், அன்னதானமும் , தீப அலங்கார சேவையும் நடைபெற்றது.
இனி வரும் நாட்களில் கீழ் கண்டவாறு ஹோமங்கள் நடைபெறுகிறது.
27.9.2022- ஸ்ரீ பஞ்சமுக வராஹி ஹோமம்.
28.9.2022-ஸ்ரீநவகன்னிகைகள், ஸ்ரீகாயத்ரி தேவி,ஸ்ரீ மஞ்சமாதா ஹோமங்கள்
29.9.2022-ஸ்ரீ ஆரோக்யலஷ்மி,ஸ்ரீ கஜலஷ்மி ஹோமங்கள்.
30.9.2022-ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ சப்தமாதா ஹோமங்கள்
1.10.2022- ஸ்ரீ தாய்மூகாம்பிகை,ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஹோமங்கள்
2.10.2022- ஸ்ரீ அஷ்ட புஜ மரகத ராஜமாதங்கி ஹோமம்
3.10.2022-ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி ஹோமம்,
4.10.2022- ஸ்ரீ வாணி சரஸ்வதி, ஸ்ரீவாக் தேவி சமேத சதுர்முக பிரம்மா ஹோமங்கள்
5.10.2022- ஸ்ரீ மரகதேஸ்வரர் சமேத மரகதாம்பிகை ஹோமம்.
ஆகிய ஹோமங்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்
No comments:
Post a Comment