ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனிக்கிழமைகளில் சனி சாந்தி ஹோமங்கள்
வருகிற 2023ம் ஆண்டில் திருக்கணிதப்படி நிகழும் சுபகிருது வருடம் ஜனவரி 17ம்தேதி செவ்வாய்க்கிழமையும், வாக்கியப்பஞ்சாங்கப்படி வருகிற மார்ச் மாதமும் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. இந்த பெயர்ச்சியில் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, வருகிற ஜனவரி 17ம்தேதி சனிப்பெயர்ச்சி மகா யாகம் மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த சனிப்பெயர்ச்சி மகா யாகத்தை முன்னிட்டு இன்று 17.9.2022ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி
முதல் 12 மணி வரை பக்தர்கள் பயன்பெறும் விதத்தில் சனி சாந்தி ஹோமம் மற்றும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ பாதாள சொர்ண( தங்க) சனீஸ்வரருக்கும், ஸ்ரீ ஜெயமங்கள சனீஸ்வரருக்கும் சிறப்பு பூ-ஜைகள், எள் தீபம் ஏற்றி பிரார்த்தனைகள் நடைபெற்றது.
இதில் சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்கள் விலகவும் மற்றும் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ராசிக்காரர்கள், சனி திசை, சனி புத்தி நடப்பவர்களுக்கு பரிகாரம் செய்யப்பட்டது.
சனிசாந்தி ஹோமத்தின் சிறப்புகள்
முன் ஜென்ம பாவங்களை தீர்க்கும் ஒரே கடவுள் சனீஸ்வரர்தான். இந்த சனீஸ்வரரை வணங்குவதால் அனைத்து வித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜென்ம சனி, ஏழரை சனி, அர்த்தமசனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை, சனி புத்தியால் ஏற்படும் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும், ஆயுள் தோஷம், இதய நோய், வலிப்பு நோய், தலை சம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு, நரம்பு நோய்கள் நீங்க மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும், தீராத நோய்கள் விரைவில் திருமணத்தடை நீங்கவும், தீய பலன்கள் குறையவும், நல்ல பலன்களை அடையவும் சனிப்பெயர்ச்சியாகத்தை முன்னிட்டு பிரதி வாரம் சனிக்கிழமைகளில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் காலை 10.30மணியளவில் நடைபெறும் சனி சாந்தி ஹோமங்களிலும் மற்றும் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர் மற்றும் ஸ்ரீஜெய மங்கள சனீஸ்வரருக்கு நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு பரிகாரங்கள் செய்து சனிபகவானை வணங்கி பலன் பெறலாம்
மேற்கண்ட தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment