ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடத்தில் 08.9.2013 அன்று
மஹா பைரவர் ஹோமம்…
உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 8.9.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் மஹா பைரவர் ஹோமம் நடைபெற உள்ளது.
காலத்தை மாற்றும் காலபைரவர் ஹோமம்
அந்நிய தேசத்திற்கு செல்லவும், அந்நிய தேசத்தில் வாசம் செய்யும்பொழுது ஏற்படும் விசா, பாஸ்போர்ட், இருப்பிடம், தொழில் தகராறு, பொருளாதார பிரச்னை போன்ற பிரச்னைகள் தீரவும், கண்திருஷ்டி, பொறாமைகள், எதிரிகள் போன்ற பல தீமைகள் விலகவும். திராத வியாதிகள், மனசங்கடங்கள் மற்றும் தீயசக்தி தொல்லையிலிருந்து விடுபட்டு நிம்மதி பெற வழிவகுக்கும்.
இந்த ஹோமத்தில் செவ்வரளி பூ, தாமரை பூ , உளுந்து சாதம், உளுந்து வடை நாயுருவி, வெண்கடுகு,
கடுகு, மிளகு போன்ற விசேஷ திரவியங்கள் சேர்க்கப்பட உள்ளது.
மேலும்
பூசணிக்காய், மாதுளம் பழம், இலுப்பை எண்ணெய், முந்திரி, பேரீச்சை போன்ற பல்வேறு
பைரவருக்கே உரிய பொருட்களை கொண்டு வழிபாடு செய்யப்பட உள்ளது.
இந்த
ஹோமத்தில் கலந்துகொள்வதினால் பேய், பிசாசு, பில்லி, சூன்ய தொல்லைகள், அம்மை பயம்,
பூத பிரதம் உபத்திரவங்கள் அணுகாமல் இருக்க இந்த ஹோமம் பெரிதும் பயன்படும்.
தன்வந்திரி பீடத்தில் பைரவர் சிறப்பு
உலகில் எங்கும் இல்லாதவாறு ஐந்தடி உயரத்தில் அஷ்ட பைரவருடன், கால பைரவரும், சொர்ணாம்பிகையுடன் சொர்ண பைரவரையும் பிரதிஷ்டை செய்து பிரதி வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி போன்ற நாட்களிலும் சில குறிப்பிட்ட செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களிலும் காலபைரவர் ஹோமமும், கூஷ்மாண்ட தீபமும், அரளிப்பூ, வடை மாலை போன்றவைகளை சாற்றி விசேஷ வழிபாடுகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment