அன்ன யாகம் என்கிற சிறப்பு அன்னயக்ஞம்…
ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தொடர்ந்து 8 ஆண்டு காலமாக அன்னதானம் நடைபெற்று வருகின்றது.
இதில் சாலை ஓர ஏழைகளும், உணவில்லாமல் வாடுவோரும், பீடத்திற்கு வருகைதரும் பக்தர்களும்,
இந்தியா முழுவதும் இருந்து வரும் சாதுக்களும், சன்னியாசிகளும் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த
வகையில் வருகிற 8.9.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் உலக மக்களின் நலன் கருதியும்,
ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து அன்னம் கிடைக்கவும், அன்னத்தினால் ஏற்படும் தோஷங்கள்
நீங்கவும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தொடர்ந்து அன்னதானம் குறைவில்லாமல் நடைபெறவும்,
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிரதிஷ்டை ஆகியுள்ள ஸ்ரீ அன்னபூரணீஸ்வரியை வழிபடும் விதத்திலும்,
யாகத்தில் சிறந்தது அன்னதானம் என்பதாலும், அன்னதானமே ஒரு மாபெரும் யக்ஞம் என்பதாலும்
அதில் பங்கேற்பவர்களுடைய ஆசீர்வாதங்கள் / வாழ்த்துக்கள் நமக்கு கிடைப்பதாலும் குறைவில்லா
அன்னத்துடனும், ஆரோக்யத்துடனும் வாழ இந்த யக்ஞமானது கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகளின் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த
அன்ன யக்ஞனத்தை முன்னிட்டு பீடத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ அன்னபூரணிக்கு சிறப்பு அபிஷேகமும்,
கூட்டுபிரார்த்தனையும் நடைபெற உள்ளது. மேலும் 24 மணி நேரமும் தன்வந்திரி பீடத்தில்
(12 அடி ஆழமும், 8 அடி விட்டமும்) அனையா யாக குண்டமாக அமைத்து தினசரி யாகம் நடைந்து
கொண்டிருக்கிற யாகத்தில் அன்னதானத்தின் ஒரு பகுதியை யக்ஞ குண்டத்தில் அக்னி பகவானுக்கு
திரவியமாக சேர்க்கப்ட உள்ளது. இந்த வைபவங்களில் கலந்துகொண்டு ஸ்ரீ அன்னபூரணியின் அருளையும்,
ஸ்வாமிகளின் ஆசியையும் பெற அன்புடன் அழைக்கிறோம்.
தன்வந்திரி குடும்பத்தினர்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 - 230033
No comments:
Post a Comment