தமிழுக்கான
முனிவர் என்றும், சித்த மருத்துவ முறைகளை
வழங்கிய முனிவர் என்றும் அகத்திய
முனிவர் குறிப்பிடப்படுகிறார். பதினென்
சித்தர்களில் மிக பிரபலமானவர் என்றால்
அது அகத்தியர்தான். இவருக்கு குருமுனி, கும்ப முனி, குள்ள முனி
என்ற பெயர்களும் உண்டு. தெய்வங்களுடனும், மன்னர்களுடனும்
தொடர்பு படுத்தி அறியப்படும் சித்தர்
இவர். சித்த வைத்தியத்தின் பிதாமகர்களில்
இவர் முதன்மையானவர். வடக்கே இமயமலையும் தெற்கே
நம் பொதிகை மலையும் இவருக்கு
ஒன்றேதான். தமிழும் மருத்துவமும் ஜோதிடமும்
இறைபக்தியும் இவரிடம் இருந்து மணம்
பரப்பின. தமிழகத்தில் உலா வந்த மாபெரும்
சித்தரின் சுவையான சரிதம் இது!
பழந்தமிழ் பாடல்களிலும் சரி, தேவாரம் முதலான
பக்தி இலக்கியங்களிலும், வேதங்களிலும் இவர் பற்றிய பல
குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. வேதகாலத்து
சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அகத்தியர் போற்றப் படுகிறார். இவை
போதாதென அகத்தியர் குறித்த எண்ணற்ற செவிவழி
கதைகளும் வழங்கப் படுகின்றன. இல்லறத்தில்
துறவறத்தை கடைப்பிடித்தவர் அகத்தியர். மனைவியின் பெயர்
லோப
முத்திரை, மகன் பெயர் சங்கரன்.
பதினாறு போற்றிகள்:
1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே
போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே
போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே
போற்றி!
5. கும்பத்திலுதித்தக்
குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு
சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை
அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி
இன்பம் தரும் அகத்திய பெருமானே
போற்றி! போற்றி!
நிவேதனம்:
பஞ்சாமிர்தம்,
பழங்கள், சக்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம்
பச்சை நிற வஸ்திரம் அணிவித்து
புதன்கிழமை பூஜை செய்யலாம். நிறைவாக
“ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே
போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை
செய்யலாம்.
அகத்தியர் பெருமானின்
பூஜை
முறைகள்:
தேகசுத்தியுடன்
அகஸ்தியர்
சன்னிதியின் முன்பு முன்பு மஞ்சள்,
குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம்
ஏற்றி வைத்து சிலையின் முன்பாக பித்தளை அல்லது செம்பு
அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைத்து,
பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி
மனதார கூறி பிறகு பதினாறு
போற்றிகளை சொல்லி வில்வம், துளசி,
கதிர்பச்சை, விபூதி, பச்சை வஸ்திரம் மற்றும் பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்கபடலாம்.
அகத்திய முனிவரின்
பூஜை
பலன்கள்:
1.
இசையிலும்
கவிதையிலும் மேன்மையுண்டாகும். 2. கல்வித்தடை நீங்கும். 3. புதன் பகவானால் உண்டான
தோஷம் நீங்கும். 4. முன்வினை பாவங்கள் அகலும். 5. பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி
கிடைக்கும். 6. பேரும், புகழும், மதிப்பும்
தேடி வரும். 7. பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
8. சகலவிதமான நோய்களும் தீரும். 9. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். 10. சித்தர்களின்
அருளால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம் சிவனடியார்களின்
நம்பிக்கையாகும்.
தன்வந்திரி பீடத்தில் அமையவுள்ள
அகஸ்திய பெருமானின் சிறப்பு அம்சம்…
தன்வந்திரி பீடத்தில் வருகிற
18.10.2013 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள்ளாக நாகாபரணத்தில் நின்ற
கோலத்தில், கமண்டலம், ஓலைச்சுவடி, யோக தண்டம் போன்றவைகளுடன் ஆதார பீடத்தில் நமச்சிவாய
மந்திரத்துடன் செதுக்கிய இரண்டடி உயரத்தில் மகாபலிபுரம் பிரகாஷ் சிற்ப கலைக்கூடம் திரு. லோகநாத
ஸ்தபதி அவர்களின் திருக்கரங்களால் வடிவமைக்கப்பட்ட கல் விக்ரஹம் சென்னை கேளம்பாக்கம்
சித்த யோகி தவத்திரு சிவசங்கர் பாபா அவர்களுடைய தலைமையில் விசேஷமான முறையில் அவருக்கென்று
வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யோக மண்டபத்தில் 468 சித்தர்கள் சிவலிங்க ரூபத்தில் மற்றும் எண்ணற்ற குருமார்கள் உள்ள பீடத்தில் மேலும் அருள் சேர்க்கும் விதத்தில் பொதுமக்கள் முன்னிலையில் கயிலை ஞானகுரு டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் பிரதிஷ்டை நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு பக்தர்கள்
கைப்பட எழுதிய தன்வந்திரி மஹாமந்திர லிகிதஜப பிரதிஷ்டையும் நடைபெற உள்ளது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த
அகத்தியர் சன்னிதி வேறெங்கும் காணகிடைக்காத காட்சியாகும். பிரதிஷ்டையை முன்னிட்டு
17.10.2013 வியாழக்கிழமை காலையும், மாலையும் சிறப்பு பூஜைகளும், யாகசாலை பூஜைகளும்
நடைபெற உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த வைபவத்திலும், அன்னதானத்திலும் கலந்து
கொண்டு அருள்பெற பிரார்த்திக்கிறோம்.
இந்த வைபவத்தில் எண்ணற்ற
சாதுக்கள், சன்னியாசிகள், மஹா புருஷர்கள், தவ சீலர்கள், சிவனடியார்கள், சித்த மருத்துவர்கள்
போன்ற பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். தாங்களும் தங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களும்
வந்திருந்து குருமகான் ஆசியுடன், அகஸ்தியர் அருளும் பெற அழைக்கின்றோம்.
தன்வந்திரி குடும்பத்தினர்
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
www.dhanvantripeedam.com
www.danvantripeedam.blogspot.in
E-mail : danvantripeedam@gmail.com
No comments:
Post a Comment