Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, September 5, 2013

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாபெரும் சிறப்பு ஹோமங்கள்…

பள்ளிக் குழந்தைகளுக்கு ஸ்வாமிகள் இலவச நோட்டுபுத்தகங்கள்,
எழுதுபொருட்கள் வழங்கிய காட்சி
மக்களுக்கு கிரக மாற்றங்களினால் ஏற்படும் இன்னல்களிலிருந்து விடுபட்டு சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழவும், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்கள், ஆசிரியர்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் நலன்கருதி 05.9.2013 வியாழக்கிழமை அன்று அமாவாசையை முன்னிட்டு சிறப்பு ஹோமமாக நவக்கிரக ஹோமமும், சூலினி துர்கா ஹோமமும், 27 நட்சத்திர சாந்தி ஹோமமும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் முன்னிலையில் பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களும், எழுதுபொருட்களும், பிரசாதமும் தந்து ஸ்வாமிகள் ஆசீர்வதித்தார்.

இந்த ஹோமத்தில் அனைத்து தரப்பு பக்தர்களும் கலந்து கொண்டு, ஸ்வாமிகளின் ஆசி பெற்று சென்றனர்.பின்னர் நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டனர்.







No comments:

Post a Comment