Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, September 24, 2013

நவராத்திரி முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள்...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்

பத்து நாட்கள் பத்து ஹோமங்கள்

பூவுலகைக் காத்தருளும் எல்லாம் வல்ல ஈசன் சிவனுக்கு ஒரு ராத்திரி, அதுவே சிவராத்திரி. ஆனால் பரப்பிரம்மமான சக்திக்கு ஒன்பது ராத்திரிகள். அதுவே நவராத்திரி என்றழைக்கப்படுகிறது.

ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையை தலா மூன்று நாட்களாகப் பிரித்து மக்கள் வழிபடுகிறார்கள்.

பரப்பிரும்மம் ஒன்றே என்றாலும், உலக மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று ரூபங்களில் அம்பிகையானவள் தன் மகிமையை வெளிப்படுத்துகிறார்.

முதல் மூன்று நாட்கள் துர்கா சக்தி ரூபமாகவும், இரண்டாவது மூன்று நாட்களில் லட்சுமி வடிவாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி ரூபமாகவும் அம்பாளைச் சித்தரித்து வழிபட்டு வருகிறோம்.

துர்கா தேவி துன்பங்களைப் போக்குபவள். லட்சுமி ரூபமானது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்து வைக்கக் கூடியவள். நல்லறிவு இருந்தால்தான் பூரண ஆனந்தத்தை அடைய முடியும் என்பதால், அந்த அறிவை வேண்டி நவராத்திரி விழாவின் நிறைவாக மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியாகப் பாவித்து வழிபடுகிறோம்.

ஒன்பது நாட்கள் நிறைவடைந்து 10வது நாளான விஜயதசமியன்று அம்பிகையானவள், ஆக்ரோஷத்துடன் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதையே இந்த 10 நாட்களின் விரதம் மற்றும் பூஜை குறிக்கிறது. இந்த நவராத்திரியை கர்நாடகம் மற்றும் இதர மாநிலங்களில் தசரா பண்டிகை என்று கொண்டாடி மகிழ்கின்றனர்.

இத்தைகைய சிறப்பு வாய்ந்த நிவராத்திரி விழாவை முன்னிட்டு உலக நலன் கருதியும் ஆண், பெண் திருமணத் தடை, குழந்தைபாக்யம், தம்பதிகளுக்குள் ஒற்றுமை, கோர்ட் வழக்குகள், பூமி பாக்யம், வியாபாரம், தொழில் மேன்மை, உத்யோகம், கல்வி, ஞானம், பக்தி, வைராக்யம், தேர்வில் அதிக மதிப்பெண்கள், ஞாபக சக்தி, உடல் மற்றும் மன ஆரோக்யம், சகல சௌபாக்கியம், குடும்ப ஒற்றுமை, கிரக தோஷங்கள், ஜாதக ரீதியாக உள்ள தோஷங்கள் இதர பல்வேறு காரணங்களுக்காகவும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருவுளப்படி 2013, செப்டம்பர் 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை காலை 10.00 மணியளவில் பத்து நாட்களும் நடைபெற உள்ள பத்து ஹோமங்களில் அனைவரும் பங்கேற்று பயன்பெற பிரார்தத்திக்கின்றோம்.

பத்து ஹோமங்களின் விவரங்கள் :
4.10.2013 வெள்ளி ஸ்ரீ மாதங்கி, 5.10.2013 சனி துர்கா / திருஷ்டி துர்கா, 6.10.2013 ஞாயிறு சூலினி துர்கா, 7.10.2013 திங்கள் ஸ்ரீ குபேர லட்சுமி, 8.10.2013 செவ்வாய் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் ஸ்ரீ ஆரோக்ய லட்சுமி, 9.10.2013 புதன் ஸ்ரீ அஷ்ட லட்சுமி, 10.10.2013 வியாழன் ஸ்ரீ மங்கள கௌரி, 11.10.2013 வெள்ளி ஸ்ரீ கர்பரட்சிகாம்பிகை, 12.10.2013 சனிக்கிழமை ஸ்ரீ சரஸ்வதி, 13.10.2013 ஞாயிற்று ஸ்ரீ ப்ரத்தியங்கரா ஹோமம் என பத்து வகையான ஹோமங்கள் நடைபெற உள்ளது.

மேலும் தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
வாலாஜாபேட்டை – 632513. வேலூர் மாவட்டம்

தொலைபேசி : 04172-230033

Email : danvantripeedam@gmail.com
www.dhanvantripeedam.com
www.danvantripeedam.blogspot.in

No comments:

Post a Comment